ஜீரணத்தை ஊக்குவிக்கும் ஜானுசிரசாசனம் (Janu Sirsasana)

வடமொழியில் ஜானு என்றால் முட்டி என்று பொருள்.சிரசு என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனத்தில் முழங்காலை தலையால் தொடுவதால் ஜானு சிரசாசனம் (Janu Sirsasana) என்று அழைக்கப்படுகிறது. அதாவது, தலையை கால் முட்டியில் வைப்பது (Head to Knee Pose) ஆகும்.

வேறு ஒரு வகையில், ஒரு கால் பஸ்சிமோத்தாசனம் என்றும் கூறலாம். பஸ்சிமோத்தாசனத்தின் பலன்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.

குறிப்பாக, ஒரு கால் மடக்கி, மற்றொரு காலை நீட்டி குனிந்து முட்டியை தொடும் போது, உடலின் நடுப்பகுதி பக்கவாட்டில் அழுத்தப்படும் போது, சீரண கருவிகள் அனைத்தும் நன்கு இயங்கும். உடலின் சத்துக்களை கிரகித்துக் கொள்ளும் திறன் மேம்படுகிறது.

மேலும், கால் நரம்பு இழுக்கப்படுவதால், தொடை நரம்பு (sciatic nerve) இழுக்கப்பட்டு நெகிழ்வுத்தன்மை பெறுகிறது.

இந்த ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் அஜீரணம், பசியின்மை நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 

ஜானு சிரசாசனம் செய்வது எப்படி?

ஜீரணத்தை ஊக்குவிக்கும் ஜானுசிரசாசனம்,Janu Sirsasana,annaiamdi.com,yoga Head to Knee Pose,Benefits of doing Janu Sirsasana,yoga for easy digestion,அன்னைமடி,ஜானு சிரசாசனம் செய்வது எப்படி?

 • விரிப்பில் கால்களை நீட்டி அமரவும்.
 • வலது காலை மடித்து வலது பாதத்தை இடது தொடையை ஒட்டி வைக்கவும்.
 • மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, கைகளை பக்கவாட்டில் உயர்த்தவும்.
 • மெல்ல மூச்சை வெளியேற்றியபடி, குனிந்து கைகளால் இடது கால் பாதத்தை அல்லது விரல்களை பிடிக்கவும். தலையை நீட்டியிருக்கும் இடது காலின் மேல் வைக்கவும். உங்கள் வயிறு உங்கள் இடது தொடையின் மேல் இருக்க வேண்டும்.கால் வளையாமல் நேராக இருக்கட்டும்.
 • 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின், நிமிர்ந்து வலது காலை நீட்டி இடது காலை மடித்து முன் குனிந்து வலது கால் பாதம் அல்லது விரல்களை பற்றவும்.

இந்த ஆசனத்தில் (Janu Sirsasana) 30 முதல் 60 வினாடி சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கலாம்.

ஒவ்வொரு கால்பக்கமும் 2,3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம்

இடுப்பு, விலாத்தசை மற்றும் முழங்கால் பகுதி மீதும், சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

நெற்றியால் முழங்கால் மூட்டை தொட முடியவில்லை என்றால் கீழே படத்தில் உள்ளது போல காலை மடக்கி தொட முயற்சிக்கக் கூடாது.ஜீரணத்தை ஊக்குவிக்கும் ஜானுசிரசாசனம்,Janu Sirsasana,annaiamdi.com,yoga Head to Knee Pose,Benefits of doing Janu Sirsasana,yoga for easy digestion,அன்னைமடி,ஜானு சிரசாசனம் செய்வது எப்படி?

ஜானு சிரசாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் (Benefits of doing Janu Sirsasana)

 • விலாப்புற தசைகள், நுரையீரல்கள், இடுப்பு, கால்கள் மற்றும் வயிற்றிலுள்ள உறுப்புகள் வலிமை பெறும்.
 • கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கணையம், அட்ரினல் சுரப்பி, குடல்கள், பாலின சுரப்பிகள் நன்கு இயங்க ஊக்குவிக்கிறது.
 • சிறுநீரகம், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் ஆகியவற்றில் உண்டாகும் ஆரம்ப கால கற்களை கரைக்க உதவுகிறது. எல்லாவிதமான காய்ச்சலுக்கும் பயனுள்ள ஆசனம் இது.ஜீரணத்தை ஊக்குவிக்கும் ஜானுசிரசாசனம்,Janu Sirsasana,annaiamdi.com,yoga Head to Knee Pose,Benefits of doing Janu Sirsasana,yoga for easy digestion,அன்னைமடி,ஜானு சிரசாசனம் செய்வது எப்படி?
 • முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது.முதுகுத்தசைகளை உறுதியாக்குகிறது.
 • மன அழுத்தத்தை போக்குகிறது.
 • வயிறு, இடுப்புப் பகுதியை உறுதியாக்கும். தட்டையான வயிறாக மாறும். தொடை, கால், மூட்டுப் பகுதிகள் பலமாகும். பாதத்தைத் தொடையில்வைப்பதால், அக்குப் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, உள்ளுறுப்புகள் வலுப்பெறும். உடலுக்குத் தேவையான தளர்வுத்தன்மை கிடைக்கும். தசைப்பிடிப்புகள் தவிர்க்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.