ஜீரா புலாவ் (Jeera pulao)
சுவையுடன் கூடவே ஆரோக்கியம் தரும் ஜீரா புலாவ் (Jeera pulao).
இது ஆரோக்கியம் தரும் ஒரு உணவு. முதியவர்கள்,உணவு செரிக்க கடினமாய் உள்ளவர்கள் இடையிடையே இந்த புலாவ் செய்து சாப்பிடலாம். சுவைக்கு சுவை.ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்!
செரிமான பிரச்சனையும் இருக்காது.
உணவில் அதிகளவு சீரகத்தை சேர்த்து கொள்வது குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சீரகத்தை சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்போம்.
ஜீரா புலாவ் செய்ய தேவையான பொருள்கள்(Jeera pulao)

ஜீரா புலாவ் செய்முறை (Jeera pulao)
- வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- அடுப்பில் சோறு சமைக்கும் பாத்திரத்தை (Rice cooker) வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போடவும்.
- பட்டை பொன்னிறமானதும் சீரகம் போடவும். சீரகம் பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து அதனுடன் 1½ கப் தண்ணீரும் உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி மூடி அவிய விடவும்.
- அவிந்ததும் நன்றாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- சுவையான ஜீரா புலாவ் தயார்.
முட்டை குழம்பு, கத்தரிக்காய் பொரித்த குழம்பு,குருமாவுடன் சாப்பிட நன்றாக சுவை சூப்பராக இருக்கும்.
அருமையான சுவையில் ஜீரா புலாவ் (Jeera pulao) செய்யும் முறையை வீடியோவில் பார்க்கலாம்.
சீரகம் தனித்துவ மருத்துவ குணங்கள்
தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது.
அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். வயிற்று வலிக்கும் தீர்வு தரும்.
கர்ப்பிணி பெண்களும் சீரக நீர் பருகலாம்.அது கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை சீரகம் தூண்டும். அத்துடன் தாய்ப்பால் நன்றாக சுரக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை சீராக பராமரிக்க சீரக நீர் குடிக்க வேண்டியது அவசியம். இது சுவாச கட்டமைப்புக்கு நன்மை சேர்த்து, சளியை குணப்படுத்தும்.
மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகுக்கவும், நார்ச்சத்து, மலச்சிக்கல் இருந்து விடுபடவும் உதவி செய்கிறது.
இரும்புசத்து குறைபாட்டையும் சீரக நீர் சீர் செய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்குகிறது. அந்த சமயத்தில் சீரக நீர் பருகுவதன் மூலம் வலி கட்டுப்படும்.
சரும பளபளப்புக்கும் சீரக நீரை பயன்படுத்தலாம். அதில் பொட்டாசியம் மட்டுமின்றி கால்சியம், செலினியம், மாங்கனீஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. அவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
இவ்வளவு நன்மைகளை தரும் சீரகத்தை உணவில் சேர்த்து ஆரோக்கியத்தை சீர்ப்படுத்துவோம்!