தித்திக்கும் சுவையில் ஜிலேபி (Jilebi recipe)
ஜிலேபி என்பது ஜாங்கிரியை விட சுவையில் சற்று மாறுபட்டது. ஜாங்கிரி உண்ண மிகவும் மிருதுவாக இருக்கும் ஆனால், ஜிலேபி கொஞ்சம் முறுகலாக அதிக இனிப்பு சுவையினை தனக்குள் வைத்திருக்கும்.
ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள் (Jilebi recipe)
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
அரிசி – 30 கிராம்
சர்க்கரை – 1 கிலோ
லெமன் கலர்பவுடர்
ரோஸ் எசன்ஸ்
பொரிப்பதற்கு எண்ணெய் அல்லது நெய்
ஜிலேபி செய்முறை – 1 (Jilebi recipe)
உளுத்தம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும். சீனிபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பில் மிதமான தணலில் வைத்திருக்கவும்.
வாணலியில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். ஒரு தடவைக்கு 4,5, ஜிலேபி போட்டு எடுக்கவும்.
இவ்வளவு தான்தித்திப்பான சுவையான ஜிலேபி தயார்.
ஜிலேபி செய்முறை – 2
ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள் (Jilebi recipe)
மைதா மா – 1 கப்
ஜிலேபி செய்யும்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மா, சோள மா (corn flour), தயிர் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் (Food colour) உங்களுக்கு ஜிலேபி எந்த நிறத்தில் வேண்டுமோ அந்த நிறத்தில் கலர் (Food colour) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக மாவினை கரைத்து கொள்ளவும்.
- கரைத்த இந்த மாவினை 8 முதல் 12 மணிநேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
- ஜிலேபிக்கான சக்கரை பாகை தயார் செய்ய வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் சக்கரை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து அரை கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.
- பிறகு தயாராக உள்ள மாவில் பேக்கிங் சோடா சேர்த்து மீண்டும் அதனை கரைத்து கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கரைத்து வைத்துள்ள மாவினை முறுக்கு வட்ட வடிவில் பிழிந்து அதனை நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.
- பின்னர் 30 நொடிகள் வரை சக்கரை பாகில் ஊறவைக்கவும்.
ஜிலேபி பிழியும் ரெட்டில் இல்லாதவர்கள் தடித்த சுத்தமான துணியில் சுண்டு விரல் நுழையக் கூடிய அளவு ஒரு சிறிய ஓட்டைப் போட்டு அதில் ஒரு கைப்பிடி மாவை எடுத்து, கை முறுக்கு பிழிவது போன்று பிழியலாம்.