மூட்டுவலியை போக்கும் எளிதான வழிகள் (Joint pain)
தற்போதைய வாழ்க்கை முறையினால் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் நோய்களுள் மூட்டுவலி (Joint pain) மிக முக்கியமானதாக இருக்கிறது.
மூட்டுவலி (Joint pain) ஏற்படும் போது வலி மட்டுமல்லாது, மூட்டுக்களை அசைக்க இயலாமை மற்றும் மூட்டுக்களில் வீக்கம் ஆகியவை ஏற்படும்.
இதனால் அத்தியாவசியமான வேலைகளைக் கூட செய்ய முடியாமல் போகின்றது.
மூட்டு இணைப்புகளை மூடி பாதுகாக்கும் மென்மையான திசுக்கள் தேய்ந்து எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து கடும் வலியை உண்டாக்குகிறது.
ஆரோக்கியமற்ற எலும்பு மற்றும் தசை, அதிக உடற்பருமன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் பரம்பரை காரணங்கள் ஆகியவை இந்த திசு தேய்மானத்துக்குக் காரணமாக இருக்கின்றன என கருதப்படுகிறது.
மூட்டு நோய்கள் (Joint pain) வரும் அபாயத்தைக் குறைக்கும் பல வழிகள் பெரும்பாலும் வாழ்க்கை முறை சார்ந்தவையே.
மூட்டுநோய் அபாயத்தைக் குறைக்கும் வழிகள் (Joint pain)
யோகாசனங்கள்
மூட்டு நோய்கள் (Joint pain) வராமல் தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியம்.
யோகாசனங்கள் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துகிறது. யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலைகளிலும் இயல்பாகச் செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது.
உடல் எடைக் குறைப்பு
அதிகப்படியான உடல் எடை மூட்டுகளின் இணைப்பை சேதமாக்குவதோடு இணைப்புகளின் இயற்கையான கட்டமைப்பையும் சேதப்படுத்துகிறது.
உடல் எடையை சரியாக வைத்திருந்தால் முழங்கால்கள், மற்றும் இடுப்பு, கைகளில் வரக்கூடிய மூட்டுவலிகளைத் தடுக்கலாம்.
உடற்பயிற்சி
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மூட்டு தசைகள் ஆரோக்கியமாக இருக்கச் செய்வதோடு, உடல் எடை சீராக இருக்கவும் உதவுகிறது.
மேலும் இவை மூட்டுகள் வீங்குவதையும் மூட்டுத் தசைகள் விறைப்படைவதையும் தடுக்கிறது.
கீழுள்ள வீடியோவில் மூட்டுக்களைப் பாதுகாக்க எல்லோரும் செய்யக்கூடிய இலகுவான பயிற்சிகள் செய்து காட்டப்படுகிறது. நீங்களும் பார்த்து செய்து, பயன் பெறுங்கள்!
ஆரோக்கியமான உணவு
ஒருவருக்கு மூட்டு வலி வருவதில் அவருடைய உணவுப் பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், சர்க்கரை, உப்பு, கரையக்கூடிய கொழுப்புகள் ஆகியவை சரியான விகிதத்தில் அடங்கிய ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும்.
விற்றமின் மற்றும் தாது உப்புக்கள் (மினரல்ஸ்) சரியான அளவில் நம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சமைக்காத பச்சைக் காய்கறிகள்/பழங்கள்/இயற்கை உணவுகள் இந்த நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. கிழங்கு வகைகளைத் தவிர்த்தல் நலம் தரும்.
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை பூஜ்ஜிய பிராண உணவுகள். இவற்றை ஆரோக்கியமானவர்கள் ருசிக்காகச் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆனால், மூட்டுக்களில் வீக்கமோ வலியோ அல்லது உட்காரும்போதும், நிற்கும்போதும் மூட்டுகளில் வலி உணர்பவர்கள், மற்றும் அதிக நேரம் உட்காரும் போது கால்களில் வீக்கம் ஏற்படுபவர்கள், இவற்றை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
‘உணவே மருந்து’ என்பதைக் கடைப்பிடித்து வந்தால் என்றும் ஆரோக்கியமே!