வெறும் காலில் நடைப்பயிற்சி (Just walking on foot)

வெறும் காலில் நடக்கும் பயிற்சி (Just walking on foot) என்பது பொதுவாக மண், புல் அல்லது மணல் போன்ற எந்தவொரு  இயற்கை மேற்பரப்பின் மீதும்  கால்களில் எதையும் அணியாமல், நடைபயிற்சி செய்வது ஆகும்.

வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது (Just walking on foot) சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றியமையாதது என நவீன மருத்துவவியல் அண்மையில் வெளிப்படுத்தி உள்ளது.

காலணிகள் மனித வாழ்வோடு ஒன்றியுள்ள ஒரு அத்தியாவசியமான, ஆடம்பரமான பொருளாக மாறிவிட்டது. வெறும் காலில் நடந்தால் பார்ப்பவர்கள் தங்களை குறைவாக மதிப்பிடுவார்களே என்ற பிரச்சனையும்  பலருக்கு உள்ளது. அதோடு தற்போது வீட்டிற்குள்ளேயே காலணிகளை அணிந்து நடக்கும் அவலம் உள்ளது.

மேலைத்தேய நாடுகளில் குளிர் காரணமாக இதை தவிர்க்க முடியாத தேவையும் உள்ளது.

வெறும் காலில் நடைப்பயிற்சி ,Just walking on foot,அன்னைமடி, நடைப்பயிற்சிannaiamdi.com,

கரடு முரடான தரையில் நடக்கும் போது பாதத்தின் கீழ் பாகம் நேரடியாக அழுத்தம் பெறுகின்றது. இது உடலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.

பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்து இருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள், மூளை, இருதயம், சிறுநீரகம், முதலிய எல்லா உறுப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன.

இதனால் ஒவ்வொரு பாகத்திலும் ஏற்படும் அழுத்தம், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உறுப்பின் செயலாற்றலை வேகப்படுத்தும்.

பாதத்துக்கு அடியில் கற்கள் போன்றவைற்றை மிதிக்கும்போது அக்குப்பங்சர் என்னும் சீன சிகிச்சையினால் கிடைக்கும் பலன் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.

இதனால் ரத்த ஓட்டம் சீராவதுடன், நரம்பு மண்டலங்களில் உள்ள சோர்வுச் செல்கள் அழிக்கப்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்(Just walking on foot)

வெறுமையான கால்களில் ஓடுவது, சிறிது தூரம் நடப்பது (Just walking on foot) இரத்த ஓட்டத்திற்கும், ஆரோக்கியம் மிகுந்த வாழ்க்கைக்கும் அவசியமானது.

வெறும் கால்களில் நடப்பதால் மன உளைச்சல் குறைகிறது. நல்ல தூக்கத்தினை தருகிறது.

இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கிறது. நரம்பு மற்றும் எலும்பு மண்டலமும் வலுவடைகிறது.

வெறும் காலில் நடைப்பயிற்சி ,Just walking on foot,அன்னைமடி, நடைப்பயிற்சிannaiamdi.com,

ஒரு நாளைக்கு சிறிது நேரமாவது செருப்பு அணியாமல் வெறும் காலில் சிறிது தூரம் கல், மண், புல் போன்வற்றை மிதித்தபடி நடந்து செல்லலாம். இது  இலவசமாக இயற்கையே நமக்கு அக்குபஞ்சர் சிகிச்சையை இலவசமாக கொடுக்கும்.

இன்றைய நாகரீக கால மாற்றத்தில், வீட்டிற்குள்ளே செருப்பு அணிந்து நடப்பது பேஷன் ஆகிவிட்டது.
பலர் செருப்பு அணியாமல் நடந்தால் பல வித தொற்றுகள் ஏற்படும் என்று அச்சம் கொள்கின்றனர்.
 
அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடுமேடு என எந்த விதமான பயமும் இல்லாமல் நடந்து திரிந்தனர் நம் முன்னோர். அவர்களுக்கு இது சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைந்திருந்தது.

பொதுவாக வெறும் காலில் நடப்பதால் (Just walking on foot) டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்.

வெறும் கால்களில் நடப்பதை ஆங்கிலத்தில் எர்த்திங் (Earthing) என கூறுவர்.
வெறும் கால்களில் நடப்பது என்பது பல நல்ல பயன்களை நமக்கு கொடுக்கும் என்று பல விஞ்ஞான ரீதியாக ஆய்வுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
 
பொதுவாக வெறும் கால்களில் நாம் நடந்தால் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் நமது உடலில் உயருவதாகவும், மேலும் உடற் சூட்டை குறைத்து, தூக்கத்தை அதிகப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
 
ஆரம்பகால ஆய்வுகள் நமக்கு தெரிவிப்பது, நாம் நமது கால்களை ஒவ்வொருமுறையும் இயற்கையான மேற்பரப்பில் பதிக்கும் பொழுது நமது கால்களுக்கும் பூமியில் உள்ள எலக்ட்ரோன்கள் ஒரு உறவுப் பாலம் அமைக்கப் படுகிறது.
 
உடல்கள் மற்றும் பூமியில் உள்ள எலெக்ட்ரான்களுக்கு இடையிலான இந்த பிணைப்பு ஏற்படுவதில் இருந்து உடல் நலன் அதிகரித்து வருகின்றன என்பதைக் காட்டுகிறது.
 
பூமியுடன் நாம் நேரடியாக தொடர்பில் இருக்கும் போது, இயற்கை சக்தி  நமக்கு பலவித நற்பலன்களை அள்ளித் தருகின்றது.
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்! என்றும் ஆரோக்கியமாக இருப்போம்!

Leave a Reply

Your email address will not be published.