கபசுர குடிநீர் என்பது என்ன (Kabasura kudineer)
ஆடாதோடா இலை, கற்பூரவல்லி, சுக்கு, மிளகு உள்பட 18 வகையான மூலிகை பொருட்களை கலந்து செய்தது தான் கபசுர குடிநீர்(Kabasura kudineer). இதில் நிலவேம்பு கசாயமும் சேர்க்கப்பட்டு உள்ளது.
கபம் என்றால் சளி, சுரம் என்றால் காய்ச்சல், அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுரம்.
கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் தாய் மருத்துவமான சித்த மருத்துவத்தில் நிமோனியா போன்ற மரணம் வரை கொண்டுசெல்லக்கூடிய காய்ச்சல்களுக்கான முக்கியமான சித்த மருந்து கபசுர குடிநீர் (Kabasura kudineer) ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது.
காரணம், காய்ச்சல், நெஞ்சில் சளி சேருவது, மூச்சு இரைப்பு போன்ற நிமோனியா நோய்க்கான அறிகுறிகள் தான் இந்நோய்க்கும் இருப்பதே.
கபசுர குடிநீரில், சுக்கு, திப்பிலி, இலவங்கம், கருங்காஞ்சொறி வேர், அக்கிரகாரம், கறிமுள்ளி வேர், ஆடாதோடை, கடுக்காய் தோல், கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு, வட்டத்திருப்பி வேர், கோரை கிழங்கு என, 15 மூலிகைகள் சேர்க்கப்படுகிறது.
இந்த மூலிகைகள் சளி, மூச்சு இரைப்பு, காய்ச்சல், தொண்டைவலி ஆகியவற்றைக் குறைக்கக்கூடிய மூலிகைகள். ஆகவே தான் இந்த மருந்தை கொடுக்கலாம் என சித்தமருத்துவம் பரிந்துரை செய்தது.
கபசுர குடிநீர் (Kabasura kudineer) கொரோனாவுக்கான தடுப்பு மருந்தாகுமா?
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து (vaccine) என இதனைச் சொல்ல முடியாது. அப்படியான எந்த ஆய்வும் இந்த மருந்தில் நடக்கவில்லை. இந்த மருந்து ஒரு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும் என்று சொல்லபடுகிறது.
சுவாச மண்டலக் கிருமிகளை எதிர்க்க உடம்பில் ஒரு ஆற்றல் இருக்கிறது. ஒருவேளை அந்த ஆற்றலை அதிகபடுத்த இந்த மருந்து பயன்படலாம்.
பாரம்பரிய சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் கபசுர குடிநீர், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து, கொரோனாவை அண்டவிடாது என, கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் உடலில் நுழைந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகள் மற்றும் முதியவர்களை பாதிக்கிறது.
தீவிர சுவாச கோளாறுகள், கடுமையான காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல், காய்ச்சல், தலைவலி, சளி ஆகிய அறிகுறிகள் தென்படும்.
இந்நிலையில், சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க வல்லது.
கபசுரத்தின் அறிகுறியாக, தொண்டை வலி, இருமல், இளைப்பு உண்டாதல், நாக்கில் சுவையின்மை, மார்பில் சளி கட்டிக்கொள்ளுதல், வயிற்றுப்போக்கு, தாகம், காய்ச்சல், முகம், நாக்கு வெளுத்தல் போன்றவை இருக்கும்.
சில சமயங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் என, யூகி வைத்திய சிந்தாமணி என்னும் சித்த மருத்துவ நுாலில் கூறப்பட்டுள்ளது.
15 மூலிகைகள்அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கம் 360 மற்றும் சித்த வைத்திய திரட்டு என்னும் சித்த மருத்துவ நுால்களில், கபசுர குடிநீர் செய்முறைகளுடன் விளக்கப்பட்டுள்ளது.
கபசுர குடிநீர் குடிக்கும் முறை ( The method of drinking kapasura kudineer)
- இருவேளை உணவுக்கு முன், கபசுர குடிநீர் குடிக்கலாம். தயாரித்த மூன்று மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். இந்த கபசுரக் குடிநீர் 40 முதல் 50 மில்லிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
- காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
- சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மில்லி வரை கொடுக்கலாம்.
- ஏழு முதல், 10 நாட்கள் வரை பருகலாம்.
- கர்ப்பிணிகள், வயிற்றுப்புண் மற்றும் இதர நோய் உள்ளவர்கள் சித்த மருத்துவர் ஆலோசனைப்படி பருகலாம்.
- காய்ச்சல், உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை எடுத்துக் கொள்ளலாம். இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
ஒரு வீட்டில் 5 பேர் இருந்தால், 5 கிராம் கபசுர பொடியை எடுத்து பாத்திரத்தில் போட்டு 5 தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
நீங்கள் ஊற்றிய தண்ணீர் பாதியாக குறையும் அளவுக்கு காய்ச்ச வேண்டும். பின்னர் ஒவ்வொருவரும் அரை தம்ளர் அளவுக்கு காலை, மாலை என 5 நாளுக்கு குடித்தால் சளி, காய்ச்சல் எதுவும் வராது.
இதுவரை பின்விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வாத அறிகுறி ஏற்பட்டால் உடனே சித்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.
கபசுர குடிநீரை குடிப்பதால் ஏற்படும் பயன்கள் (Benefits of drinking Kabasura kudineer)
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.
இதனால் பலர் இந்த கசாயத்தை வாங்கி குடித்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கபசுர குடிநீர் பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும் இந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர் தான். கபசுர குடிநீரை குடிக்கும் போது, சளி இருந்தால் அதை எளிதாக அகற்றிவிடும்.
அது போன்று நுரையீரலில் உள்ள அணுக்களின் அளவை அதிகரித்து எளிதாக சுவாசிக்கக்கூடிய பலனையும் கொடுக்கிறது.
எனவே இந்த நடைமுறையை பின்பற்றி கபசுர குடிநீரை குடித்தால் நல்லது.
இதில் நிலவேம்பு கசாயமும் சேர்ந்து இருப்பதால், உடலுக்கு நல்லது.