யாரும் ஏறமுடியாத திருக்கைலாசமலை (Himalaya)
கைலாயம் எனும் அதிசயமலை (kailayam)
“கைலாய” (kailayam) மலையை தெய்வீக தன்மை கொண்டதாக இந்து, பௌத்த,ஜைன, மதத்தினர்கள்கருதுகின்றனர். இந்து மத பக்தர்கள் “இமய மலைத்தொடர்களில்” இருக்கும் கைலாய மலை உலகைக் காக்கும் கடவுளான “சிவபெருமான்” மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக வணங்குகிறார்கள்.
இயற்கையான கோயிலமைப்பு பனியால் மூடி,தோற்றத்தில் சிவலிங்கமாகக் காட்சியளிக்கும், இத்திருமலையை எப்பக்கமிருந்து யாரொருவர் எவ்வண்ணமாக நோக்கினும் அவ்வவர்க்கு அவ்வண்ணமாகவே அக்கோயிலாகவே காட்சி தருவது என்பது இம்மலையின்கண் அமைந்துள்ள அதிசயமாகும்.
பிரம்மனோட இருப்பிடம் சத்யலோகம், விஷ்ணுவோட இருப்பிடம் வைகுண்டம், சிவனோட இருப்பிடம் கைலாயம்னு புராணக்கதைகளிலும், ஆன்மீக கதைகளிலும் கூற கேட்டிருப்போம். சத்யலோகமும், வைகுண்டமும் மனித கண்களுக்கு தெரியாது எனவும், நம் கண்களுக்குப் புலப்படும் ஒரே தேவலோகம் கைலாயம் எனவும் நம்பப்படுகிறது.
கைலாய மலையிலுள்ள சிறப்புகள்
கைலாய மலை 6638மீற்றர் உயரம் கொண்டதாகும்.’கெலாசா’ எனும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான ‘கைலாசம்’ எனும் பெயருக்கு படிகக் கற்கள் என்று பொருள்.பார்ப்பதற்கு அழகிய படிகக் கற்கள் போல சூரிய ஒளியில் இது ஜொலிக்கிறது.
முனிவர்களும், தேவர்களும், சிவபெருமானோடு சேர்ந்து பிரம்மமுகூர்த்தத்தில் இந்த ஏரியில் வந்து நீராடுவதாக நம்பிக்கை உள்ளது.
உலகின் மிக உயரத்தில் இருக்கும் ஒரே நன்னீர் ஏரி என்ற புகழ்பெற்றது மானசரோவர் ஏரி ஆகும். இதை பிரம்மதேவர் உருவாக்கியதாக ஆன்மீகவாதிகளால் நம்பப்படுகிறது.
மானசரோவர் ஏரியிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் கைலாயம் உள்ளது. இந்த ஏரியில் குளித்து விட்டு செல்வதால் பக்தர்கள் முக்தி அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.
52கி.மீ சுற்றளவு கொண்ட இந்த மலையை சுற்றி வரும்போது, இரண்டு இடங்களில் இந்த மலையின் அற்புத காட்சியை நாம் காண முடியும். அதுவும் சூரியஒளியில் பிரதிபலிக்கும் இந்த மலையின் காட்சி சுகு, ஜெய்தி எனும் இரண்டு இடங்களில்தான் நன்றாகத் தெரிகிறது.
கைலாயத்துக்கு செல்பவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற காட்சி தென்படுவதில்லை. இதனை அரிதிலும் அரிய காட்சி என்றும் கௌரிசங்கர் காட்சி எனவும் குறிப்பிடுகின்றனர்.
இந்த மலையில் நிறைய மர்மங்கள் ஒளிந்துள்ளனவாம்.
சிவன் ருத்ரதாண்டவமாடும் போடு பனிமலை சறுக்கல்கள் வருவதாகவும், சிவன் பார்வதி தேவியுடன் மானசரோவரில் தோன்றும் காட்சி கண்களுக்கு தெரிவதாகவும் பலர் கூறியுள்ளனர்.
ஆனால் உண்மையை கண்டறிய என்று செல்பவர்கள் இறந்து விடுகின்றனர் என்றும் பரவலாக பேச்சு உள்ளது.இப்படி எண்ணற்ற பல அதிசயங்கள், மர்மங்கள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ள கைலாயமலையின் சுவாரசியமான விடயங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
8000 மீற்றர் உயரத்துக்கும் அதிகமான இடங்களில் கூட, ஏறி சாதனை செய்திருக்கிறார்கள்.
ஆனால் வெறும் 6000 மீற்றர் கொண்ட இந்த மலையில் ஏன் யாரும் ஏற முடியாமல் இருக்கின்றது?
மேலும் ராமாயண இதிகாசத்திலேயே இந்த கயிலாய மலை ( kailayam) “பிரபஞ்ச சக்தி” மிகுந்த அளவில் குவியும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இம்மலையைப் பற்றி மேலும் ஆராய்ந்த போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்ததாக கூறுகிறார் ரஷ்ய நாட்டு மருத்துவர் ஒருவர்.

இந்தியாவின் வடக்கு பகுதியில் இமயமலையில் (Himalaya) அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.
அதாவது இதன் இருப்பிடம் திபெத் நாட்டினால் எல்லை கொள்ளப்படுகிறது.
சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா போன்ற புகழ்பெற்ற ஆறுகள் இந்த மலையில் உற்பத்தியாகிறது.
இது மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கும் அதேநேரத்தில் இந்தியாவின் மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தளமாகவும் உள்ளது.