கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகை (Karisalangkanni)

கரிசலாங்கண்ணி (Karisalangkanni) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். கரிசலாங்கண்ணி கீரை வழங்கும் கணக்கற்ற நன்மைகலைக் கொண்டு இதை ஒரு தெய்வீக மூலிகை (Karisalangkanni) என்கிறார்கள்.

ரசவாதத்திற்கு பயன்படும். செம்பை பொன்னாக்கும் மூலிகை.

கரிசாலை, குப்பைமேனி, சிறு செருப்படை  இதனை சாப்பிட வாத, பித்த, கபம், குணமாகும்.
இது ஒரு காயகற்ப மூலிகை.

கரிசலாங்கண்ணியின் மருத்துவ பயன்கள் (Benefits of  karisalangkanni )

கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில  தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும்.
இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
 
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது  குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
 
மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது  கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
bhringraj herbs,benefits of karisalangkanni,annaimadi.com,karisalaangkanni thool,medicinal herb 
சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். 
கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம்  சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.
 
கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து,  வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. 
 
கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம்.
வாரம் இரு தரம் , கரிசலாங்கண்ணிகீரையைச் உணவில் சேர்த்து  சாப்பிட்ட அல்லது இதன் சாற்றை எடுத்து  குடித்து  வர, பல கொடிய வியாதிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும்.
உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

bhringraj herbs,benefits of karisalangkanni,annaimadi.com,karisalaangkanni thool,medicinal herb

இந்த கீரைக்கு கரிசாலை, பிருங்கராஜம் (bhringraj herbs), தேகராஜம், அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணி கீரையில்  மஞ்சள், வெள்ளை, நீலம், சிவப்பு என  நான்கு வகை. ஆனால்  இப்போது  பாவனையில் இருப்பது  மஞ்சள் ,வெள்ளை கரிசலாங்கண்ணி மட்டும்தான்.
 
மஞ்சள் கரிசலாங்கண்ணி மஞ்சள் நிற பூக்களை கொண்டிருக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து  அடையாளம் காணலாம்.

நம்ம முன்னோர்கள் கரிசலாங்கண்ணி இலையை  காய வைத்து  பொடியாக்கி பல் துலக்க பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கரிசலாங்கண்ணி பொடி இங்கே கிடைக்கிறது.

bhringraj herbs,benefits of karisalangkanni,annaimadi.com,karisalaangkanni thool,medicinal herb,Check Price

அன்றாட உணவில் துவையலாக, கடைசலாக , பொரியலாக  உணவில் பயன்படுத்தி வந்த இந்த பயனுள்ள  கீரை, இப்போது  மருந்தா மட்டுமே பயன்படுத்தப்படுவது.வருந்ததக்கது.

நோய்வந்த பிறகு இதை மருந்தாக பாவிப்பதை விட,நோய் வராமல் உணவில் சேர்த்து சாப்பிடுவது அறிவுள்ள செயல் அல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *