அதிகசக்தி வாய்ந்த கருங்காலி மரம்(Karungali)

கருங்காலி (Karungali) மரத்தின் சிறப்பு பற்றி பலரும் இதுவரை அறியாத பல அபூர்வ ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.

கருங்காலி (Karungali) மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம்.

கோவில் குடமுழுக்கின் போது கலசத்தை நிலைநிறுத்த இதன் மரத்துண்டுகளை பயன்படுத்துவார்கள்.அது பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றலை ஈர்த்து கருவறையில் உள்ள விக்கிரகத்தின் அடியில் சில தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கும் அந்த சக்தியுடன் கலந்து நமக்கு அபரிதமான சக்தியை வழங்கும்.இதனைபழங்கால கோயில்களில் உணரலாம்.

வீதிகளில் ஜோசியம் குறி சொல்பவர் இந்த மர குச்சியை தான் நம் முன்னே நீட்டி கைகளில் வைத்தும் நம் மன எண்ணங்களை ஈர்ப்பார்கள்.

இந்த மரம் மிதுனம் மேஷம் விருச்சிகம் ராசிகள் மிருகசீரிஷம் அஸ்வினி அனுஷம் பரணி விசாகம் கேட்டை  நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, உகந்த மரம் இது.

இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை பெற்றவை. இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும்.இந்த மரத்தை வீடுகளில் வளர்க்கலாம்.

கோயில்களில் நட்டு வைக்கலாம். மிக நல்லது மரம் வளர வளர உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அதனாலே இந்த மரத்தில் சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள். இந்த மரத்திற்கு வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியை வெளியேற்றும் சக்தி உண்டு.

குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள்.

கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் (Medicinal uses of Karungali tree)

குழந்தைக்கு தேவையான கல்சியம் சத்து கிடைக்க

பக்கவாதம், ஒரு கை கால் செயல்திறன் குறைவு, கை நடுக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு கருங்காலி கட்டைகளை கையில் வைத்துக் கொள்ளலாம்

இம்மர நிழலில் அடிக்கடி அமர்ந்து இருக்கலாம்

கருங்காலி மரக்கட்டை ஊற வைத்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் பிரச்சினை சரியாகும்.

கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள்,Medicinal uses of Karungali tree,கருங்காலி மரத்தின் சிறப்புக்கள்,அன்னைமடி,annaiamdi.com,கருங்காலி மரத்தின் பொதுவான பயன்கள்,Common Uses of Karungali Tree

கருங்காலி மரத்துன்டுகளுடன் தான்றிக்காய் கடுக்காய் பொடி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் இருமல்,சளி ,இதயபலவீனம் சர்க்கரை வியாதி நீங்கும்.

இரத்த அழுத்தம் பிளட் பிரஸர் குறையும்.

உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.

கிரகம் சரியில்லை என்று உடல் நிலை சரியில்லாமல் படுத்து இருப்பவர்கள் சரியாக இந்த கட்டை ஊற வைத்த நீரை மூன்று முறை தெளித்து முகத்தை கழுவி விட்டு கட்டையை மூன்று முறை மெதுவாக தட்டி வந்தால் சீக்கிரம் மாற்றம் தெரியும்.

பேய் பிடித்து விட்டது என்கிறார்களே… அது அந்த மன சிதைவு நோய்க்கு கருங்காலி மரக்கட்டைகளை எரித்து அந்த சாம்பலை நெற்றியில் விபூதி போல பூசி வர நல்ல மாற்றம் தெரியும்.

கருங்காலி மரத்தின் பொதுவான பயன்கள்(Common Uses of Karungali Tree)

உறுதியாக இருப்பதற்காக உலக்கை செய்வதற்கு  இம் மரத்தை  தான் பயன்படுத்துவார்கள்.

பிரபஞ்ச ஆற்றல் உலக்கை வழியாக தானியங்களில் இறங்கி அந்த தானியங்களை நாம் உட்கொள்ளும் போது மிகுந்த ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

வயதுக்கு வந்த பெண்களின் அருகே காற்று, கருப்பு அண்டாமல் இருக்க இந்த உலக்கையை போட்டு வைப்பார்கள். சுடுகாடு சென்று வந்தவுடன் இந்த உலக்கையை தாண்டி வர சொல்வார்கள் எதற்காக என்றால் கெட்ட சக்திகளை நம்மை விட்டு அகற்ற தான்.

நன்கு படிக்காத குழந்தைகள் காலை வேலையில் படிக்கும் போது இந்த குச்சி மூலம் தலையில் மூன்று முறை தட்டி வரவேண்டும்.

ஒன்பது நாட்களில் குழந்தைகள் படிப்பில் மாற்றம் தெரியும்.

மெதுவாக குச்சியை தலையில் தொட்டு எடுக்க வேண்டும். ஒரு காலத்தில் பள்ளி கூடத்தில் இந்த குச்சியை தான் வாத்தியார்கள் அடிக்க பயன்படுத்தினார்கள்.

கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள்,Medicinal uses of Karungali tree,கருங்காலி மரத்தின் சிறப்புக்கள்,அன்னைமடி,annaiamdi.com,கருங்காலி மரத்தின் பொதுவான பயன்கள்,Common Uses of Karungali Tree

காலப்போக்கில் குச்சி மாறி விட்டது.

இந்த மரத்தில் தான் ஆதி காலத்தில் கடல் கடந்து செல்லும் படகுகளில் பாய்மரம் கட்டுவார்கள். இடி மின்னல் செங்குத்தான இந்த மரத்தில் இறங்கி கடலுக்கு அடியில் சென்று விடுவதற்குகாக.

முருகனுக்கு மிக உகந்த மரம். ஆக மொத்தம் கருங்காலி (Karungali) இருக்கும் இடத்தில் தெய்வசக்தி இருக்கும். நல்ல தரமான உண்மையான கருங்காலி மாலைகள் குச்சிகள் விக்கிரகங்கள் திரிசூலங்கள் வாங்கி வைக்கலாம்.

பண வரவு செல்வவளம் அதிகரிக்கும்.

மரங்களிடம் இருந்தே நாம் ஆற்றலை பெறுகிறோம். அதை ஏனோ மனிதன் உணருவது இல்லை.

இப்படியான நல்ல நாட்டு மரங்களை தேடி வளர்ப்போம்.அது நம்மை மட்டுமல்ல நம்  சந்ததியையும்  காக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *