தனி சிறப்பு வாய்ந்த கறுப்பு கவுணி அரிசி(Karuppu kavuni rice)

கறுப்பு கவுனி அரிசியில் (Karuppu kavuni rice) உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான நார்ச்சத்து (Fiber) இதில் அதிகளவில் உள்ளது.

இந்த அரிசியில் (Karuppu kavuni rice) இருக்கும் ஆந்தோசைனின் என்னும் ஆக்சிஜநேற்றிகள் (Antioxidants) மன அழுத்தத்தை குறைத்து சிறந்த மூளை செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

எலியை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் அதன் கற்றல் திறனும் நினைவாற்றல் திறனும் மேம்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இந்த சக்திவாய்ந்த ஆக்சிஜநேற்றிகள் (Antioxidants)  புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும் உதவுகிறது.

கறுப்புகவுணி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். இந்த அரிசியின் கறுப்பு நிறத்தின் காரணம் இதில் அதிகப்படியான அந்தோசினனின் “Anthocyanins” என்ற மூலக்கூறு தான்.

கவுணி அரிசி (Karuppu kavuni rice)பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது.

 சீனாவின் அரசர்கள், அரச குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட (Forbidden rice) அரிசியாக  “கறுப்புகவுணி” கருதப்பட்டது.

அரசரின் கட்டளை மீறி, பொது மக்கள் யாரேனும் “கறுப்புகவுணி” அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.

பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கறுப்பு கவுனி தமிழகம் வந்ததாக அறியபபடுகிறது.

சீன அரசர்களால் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கறுப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.

 

கறுப்பு கவுணி அரிசியின் மருத்துவ பயன்கள்,கறுப்பு கவுணி அரிசி,அன்னைமடி,சர்க்கரைநோய்க்கான உணவு,அதிக நார்ச்சத்து அரிசி ,annaimadi.com,Forbidden rice,healthy rice,Karuppu kavuni rice,traditional rice

தமிழகத்தின் தொடு வர்மக்கலை, ஒரு சில மாற்றம் கொண்டு சீனாவில் Accupunture என்று அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கறுப்புகவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள்.

இவர்களின், கூற்றுப்படி பிரபஞ்ச சக்தியை உள் வாங்கும் ஆற்றல்,கிரஹித்து கொள்ளும் ஆற்றல் கறுப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

கறுப்பு கவுணி அரிசியின் மருத்துவ பயன்கள் (Medicinal benefits of Karuppu kavuni rice)

 

மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கறுப்புகவுணி அரிசியில் (Karuppu kavuni rice) அந்தோசினனின்  என்னும் ஆக்சிஜநேற்றிகள்(Antioxidants) அதிகமாக இருக்கிறது. இது இதய பாதிப்பினை தடுக்கிறது. 

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகும்  கல்லீரல் கொழுப்பு நோய் (Fatty liver disease) நீங்குகிறது.கல்லீரலை சுத்திகரித்து  அதில் உள்ள நச்சுத்தன்மை  வெளியேற்ற உதவுகிறது.

மன அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கறுப்புகவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவும்.

கறுப்பு கவுணி அரிசியின் மருத்துவ பயன்கள்,கறுப்பு கவுணி அரிசி,அன்னைமடி,சர்க்கரைநோய்க்கான உணவு,அதிக நார்ச்சத்து அரிசி ,annaimadi.com,Forbidden rice,healthy rice,Karuppu kavuni rice,traditional rice

உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.

கறுப்பு கவுணி அரிசியில் (Karuppu kavuni rice) இயற்கையாகவே குளுட்டன் (Gluten ) எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது.  Gluten ஒவ்வாமை உள்ளவர்களும் இந்த அரிசியை  பயன்படுத்திக் கொள்ளலாம்.

கவுனி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. இது இன்சுலின் அளவை பாதுகாத்து டைப்-2 நீரிழிவு நோயில் இருந்து காப்பாற்றுகிறது.

கவுனி அரிசியில் இருக்கும் நார்ச்சத்து, குடல் இயக்கங்களை சீராக்கி செரிமான மண்டலத்தை சிறப்பாக இயங்கவும் வைக்கும். மேலும், இரைப்பை உணவுக்குழாய் நோய், குடலில் ஏற்படும் புண், மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்த உதவும்.

கறுப்புகவுணி அரிசி பற்றிய ஆய்வு முடிவுகள் (Results of a study on black rice)

கறுப்புகவுணி அரிசி (Karuppu kavuni rice)புற்று நோய்க்கு எதிரானது என்பதை  Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில்  கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து.  கறுப்பு கவுணி அரிசியின் மருத்துவ பயன்கள்,கறுப்பு கவுணி அரிசி,அன்னைமடி,சர்க்கரைநோய்க்கான உணவு,அதிக நார்ச்சத்து அரிசி ,annaimadi.com,Forbidden rice,healthy rice,Karuppu kavuni rice,traditional rice

கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கறுப்பு கவுணி அரிசி வீக்கத்தைக் (inflammation) என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கறுப்பு அரிசியின் சாறு edemaவைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரியாவில் எலிகளிடம்  மேற்கொண் ட ஆய்வில் அறியப்படுவது யாதெனில். மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைகிறது.

நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases) தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கறுப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்ததாக உள்ளது.

 

கறுப்புகவுணி அரிசியில் (Karuppu kavuni rice)உள்ள அந்தோசினனின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கறுப்புகவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.

கறுப்புகவுனி அரிசி உள்ளஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants), நார்ச்சத்து, அந்தோசினனின்(anthocyanin9, போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவுகிறது.

கறுப்பு கவுணி அரிசியின் மருத்துவ பயன்கள்,கறுப்பு கவுணி அரிசி,அன்னைமடி,சர்க்கரைநோய்க்கான உணவு,அதிக நார்ச்சத்து அரிசி ,annaimadi.com,Forbidden rice,healthy rice,Karuppu kavuni rice,traditional rice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *