காயகற்பம் என்பது என்ன?( Kayakarpam)
சுருக்கமாகச் சொல்வதாயின், காயகல்பம் ( Kayakarpam) என்பது, அந்தக் காலத்திலேயே புழக்கத்தில் இருந்த தடுப்பூசி டானிக்குகள் என்று காயகல்ப அறிவியலைப் புரிந்துகொள்ளலாம். அது ஒரு நுட்பமான அறிவியல்.
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே, `உடம்பை வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!’ என்ற திருமந்திரமும், `உயிர்க் குருதியெல்லாம் உடம்பின் பயனே… அயர்ப்பின்றி யாதியை நாடு’ எனும் ஔவையின் வரிகளும் காயகற்ப மருந்துகளைப் பற்றியே குறிப்பிடுகின்றன.
சில காயகல்ப மருந்துகளை, நோயில்லா காலத்தில் சில உணவு கட்டுப்பாடுகளுடன் ஒரு மண்டலம் அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் சாப்பிடும்போது, உடல் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் தோல் சுருக்கம், முடி நரைப்பது நிற்கும் அல்லது தள்ளிப் போகும்.
ஒரு மருந்து ,வயோதிகத்தைத் தள்ளிப்போட உதவுகிறது என்றால், இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.
காயகல்பம் என்றால், முன்பு சொன்னபடி, `அண்டாகாகஸம்… அபூகா ஹுகும்’ கதையெல்லாம் அல்ல.
இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகள்
ஆக கருவூரார் சித்தர் சொல்கிறார்.
கருவூரார், `வாத காவியத்தில் சொல்லியிருக்கும் 108 மூலிகைகளில் பல, காய்கறி சந்தைகளிலும், வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும், கோடை வாசஸ்தல மலைகளிலும் கிடைப்பவையே.
அந்தக் காலத்தில், வாழ்வை `இறைவன்’ எனும் புள்ளியில் விரித்துப் பார்த்தவரும் சரி, `இயற்கை’ எனும் புள்ளியில் பார்த்தவரும் சரி, நோயற்று ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ்வதை மட்டுமே அடிப்படை ஆரோக்கியம் என அறிந்துவைத்திருந்தார்கள்.
உண்மையில் காயகல்பம் ( Kayakarpam)என்றால் என்ன?
பயணம் செய்துவிட்டு வந்து காலில் நீர் கோத்திருப்பவருக்கு சுரைக்காய் கூட்டு;
தூக்கமில்லாமல் கண்விழித்துப் பணியாற்றியவருக்கு கண் எரிச்சலுடன் உடல் சூடும் அதிகமாகியிருக்கும்.அவருக்கு கீழாநெல்லியும் மோரும்; மந்தபுத்தி போக சிறுகீரையில் மிளகு சேர்த்துக் கூட்டு;
சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசம்;
மெலிந்திருப்பவருக்கு தேற்றான்கொட்டைப் பொடி; மேகவெட்டைக்கு ஓரிதழ் தாமரை… எனக் காயகல்ப மருந்துப் பட்டியல் தமிழர் மருத்துவப் புரிதலில் ஏராளம்.
திருவள்ளுவ நாயனாரின் கற்ப பாடல் இப்படிச் சொல்கிறது… `காலமே யிஞ்சியுண்ணக் காட்டினார் சூத்திரத்தில் மாலையதிலே கடுக்காய் மத்தியான சுக்கருந்த…’ அதாவது,
காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிடு’
என்பது அர்த்தம் ஆகும்.
அதற்காக, இஷ்டத்துக்கு எதையும் சாப்பிடலாம், எப்படியும் வாழலாம் என்று அர்த்தம் அல்ல. எந்தக் கற்பமும் முறையான யோகப் பயிற்சியுடன் இருந்தால் தான் பயன் தரும்.
காய கல்ப யோகம் ( Kayakarpam)
தொன்னாட்டு சித்தர்களால் கண்டறிந்த இக்கலையை வேதாத்திரி மகரிஷி அவர்களால் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் குண்டலினி யோகாப் பயிற்சியை நன்கு கற்று இறையாற்றலை முற்றும் உணர்ந்தவர்.
தான் கற்ற சித்தர்களின் குண்டலினி சக்தியை எல்லா மக்களும் அறிந்துகொள்ள உலக முழுவதும் பரப்பி உள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலுள்ள இலட்சக்கணக்கான பேர்கள் இக்கலையைக் கற்று நல்ல பயனை அடைந்து வருகிறார்கள்.
சுவாமிஜி மூவாயிரம் பாடல்களையும், 50 மேற்பட்ட தமிழ் ஆங்கிலம் நூல்களையும் எழுதியுள்ளார். குண்டலினி யோகாப் பயிற்சியை இந்தியாவிலுள்ள உயநிலைப் பள்ளிகளிலும், காலேஜுகளிலும், பல்கலைகழகங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும், ஆண் /பெண் இருபாலர்களும் இனம், மதம், மொழி பேதங்கள் இன்றி போதிக்கிறார்கள்.
பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்வுக்கும் வித்தாகிய சீவசக்தி
விந்து நாதம் எனும் மூலப்பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும். தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது. நாம் உண்ணும் உணவவானது ரசம், ரத்தம்,சதை,கொழுப்பு,எலும்பு,மஜ்ஜை மற்றும்,சுக்கிலம் என்ற ஏழு தாதுக்களாக முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றலால் மாற்றப்படுகின்றன.
இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் நன்கு அறிந்தவரே.
இவற்றில் சுக்கிலம் (விந்து-நாதம்) எனும் ‘சீவ இன அனைத்தடக்கப் பொருள்’ தான் மனித உடலினது தோற்றம் தன்மை வளர்ச்சி இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக மதிப்புடைய பொருளாகும்.
உயிரினங்களின் பிறப்பு இறப்பு இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும். ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே விந்துநாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது.
மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள் எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்ததைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual vital fluid) விந்து நாதத் திரவமே ஆகும்.
இத்தகைய மதிப்பு வாய்ந்த வாழ்க்கை நலநிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள். இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது.
இதனால் தான் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன.
காயகற்பப் பயிற்சி
இந்த உண்மைகளை அறிந்த சித்தர்கள் எனும் மனிதவள விஞ்ஞானிகள் வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள். இந்தப் பயிற்சி தான் காயகற்பம் எனும் மனித வளப் பயிற்சியாகும்.
நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில் இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.
எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.
உதாரணமாக
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருந்தியே கபாலமேற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவார். மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே!
காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் இது ஒன்று. இது சுத்த தமிழ் தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழகமுடியாது.
எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது.
இந்தக் காயகற்ப பயிற்சி காலத்தால் பல பிரிவுகளாக்கப்பட்டுத் தூரக் கிழக்கு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன.
முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்தி கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும் நினைவாற்றல் குறைந்து வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஒர் உயர்ந்த சாதனைவழி.
ஆண் பெண் இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.
திருமணம் வேண்டாம் என்று பொதுநல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அரிய காயகற்பக் கலை நல்லதோர் தோழனாகப் பயன்படும்.
காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.
சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும்.
காயகற்பப்பயிற்சியின் பயன்கள் ( Kayakarpam)
- உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும்.
- உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும்.
- முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும்.
- பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும்.
- மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும்.
- தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும்.
- மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும்.
ஆனால் இத்தகைய உன்னதமான காயகற்ப மருந்துகள்,பயிற்சிகள் இன்றைக்கு வணிகத்தின் பிடிக்குள் சிக்கி சீரழிகிறது. அதாவது, வியாபார,விளம்பரம் உத்திகளால் காயகல்பம் என்பது `ஆண்மைக்குறைவுக்கான மருந்து’ என்று பிழையான அர்த்தமாக மாற்றப்பட்டுவிட்டது!