சிறுநீரக செயலிழப்பு ஏன் எதனால்? (Kidney failure)

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் (Kidney stones) மற்றும் சிறுநீரக செயலிழப்பு (Kidney failure)ஆகிய இரண்டும் பரவலாக உள்ள சிறுநீரக நோய்கள்.

நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, சிறுநீரகத்தை பாதிக்கும் மருந்துகள், இரத்தக்குழாய் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் தனது சுத்திகரிக்கும் செயலை இழந்துவிடுகிறது.

இதனால் இரத்தத்தில் கழிவுப்பொருள்கள் சேர்ந்து தீவிர நிலைக்கு உடலை கொண்டு சென்றுவிடுகிறது.

சிறுநீரக செயலிழப்பின் போது தேவையான உணவுக்கட்டுப்பாடு ( Diet during Kidney failure)

பாதிக்கப்பட்டவர் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் முக்கியம். மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு  தான் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த வகையிலும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடக்கூடாது.

உணவில் உப்பின் அளவையும், புரதம் மற்றும் கொழுப்புள்ள உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, நெய்,பருப்பு, பயறு, பட்டாணி போன்ற பருப்பு வகைகள் ஆகாது.

செயலிழப்பின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to Avoid During Kidney failure,அன்னைமடி,சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ,Symptoms of kidney damage,annaimadi.com, சிறுநீரக செயலிழப்பினை எப்படித் தடுக்கலாம்,How to prevent Kidney failure,நீரிழிவுநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் ,Diabees & kidney failure,kidney damage,End-Stage Renal Disease,சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி

அப்பளம், ஊறுகாய், வத்தல், வடகம், சிப்ஸ், உப்பு பிஸ்கட், கருவாடு போன்ற உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் , தேங்காய், கீரைகள், கிழங்குகள், கொட்டை உணவுகள், எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி, மாம்பழம், இளநீர், இறைச்சி, மீன் இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

அரிசி, ரவை, அவல் போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம். நாட்டுக் காய்களையும் ஆப்பிள், பச்சைத் திராட்சை,அன்னாசி, கொய்யா, சீதாப்பழம் ஆகிய பழங்களையும் சாப்பிடலாம்.

சிறுநீரகப் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது?(How does kidney damage occur?)

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நம் உடலுக்குப் பயன்படும் சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் தேவை. ரத்தச் சர்க்கரையும் இன்சுலினும் சரியாக இருக்கும் வரை சிறுநீரகம்  சீராக இயங்குகிறது. இன்சுலின் அளவு குறைந்து, ரத்த சர்க்கரை அதிகமாகிவிட்டால், அந்த மேலதிக சர்க்கரை நேரடியாகச் சிறுநீரகத்துக்கு வருகிறது.

அந்த அதிகப்படியான சர்க்கரையைச் சிறுநீரகம் சளைக்காமல் சிறுநீருடன் வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியக் காரணம் இது தான்.

இந்த அதிக வேலைப்பளுவால் ஒரு கட்டத்தில் சிறுநீரகம் தன செயற் திறனை இழக்க தொடங்குகிறது. சாதாரணமாக பகலில் வேகமாகவும், இரவில் மெதுவாகவும் சிறுநீரை வடிகட்டும் வடிகட்டிகள்,இதன் விளைவுவாக இரவிலும் அதிக வேலை பார்க்கின்றன. அதனால் தான் சர்க்கரைநோய்  உள்ளவர்களுக்கு இரவிலும் சிறுநீர் அதிகமாக கழிகிறது.

செயலிழப்பின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to Avoid During Kidney failure,அன்னைமடி,சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ,Symptoms of kidney damage,annaimadi.com, சிறுநீரக செயலிழப்பினை எப்படித் தடுக்கலாம்,How to prevent Kidney failure,நீரிழிவுநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் ,Diabees & kidney failure,kidney damage,சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி,End-Stage Renal Disease

அடுத்ததாக, உடல் கழிவைத் தனியாகப் பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கியமான பணி. ஆனால், நீரிழிவின் பாதிப்பால், சிறுநீரகம் இந்தப் பண்பைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, உடலுக்குத் தேவையான தண்ணீரையும் தாதுக்களையும் கூட சிறுநீரில் வெளியேற்றிவிடுகிறது. அதனால் தான் இவர்களுக்கு நீருக்கான தாகம் அதிகமாக ஏற்படுகிறது.

அடுத்தகட்டமாக, வடிகட்டிகள் தொடர்ந்து அதிகமாகச் சேதமடைவதால், உடலுக்கு மிகவும் அவசியமான நுண்புரதம் (Micro Albumin) சிறுநீரில் வெளியேறுகிறது.சாதாரணமாக, இந்தப் புரதம் சிறுநீரில் வெளியேறுவதில்லை. சிறுநீரகம்  பாதிக்கத் தொடங்கியதும் தான் இது வெளியேறும். நீரிழிவு சிறுநீரகத்தைத் தாக்கியுள்ளது என்பதைத் தெரிவிக்கும் முதல் தடயம் இது தான்.

இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுத்து ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்திவிட்டால், சிறுநீரகப் பிரச்சினை சரியாகிவிடும். தவறினால், நீரிழிவு சிறுநீரகத்தைத் தொடர்ந்து தாக்கும். அடுத்தகட்டமான ‘வெண்புரதம்’ (Macro albumin) வெளியேற தொடங்கும். வெண்புரதம் வெளியேறத் தொடங்கும்போது ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் அளவுகள் அதிகமாகும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டது என்பதைக் காட்டும் தடயங்கள் இவை. இப்போதும் சிகிச்சை பெறவில்லை என்றால் ஆபத்து இன்னும் அதிகமாகும். ஒரு கட்டத்தில், ஒட்டுமொத்த வடிகட்டும் வேலையையும் சிறுநீரகம் நிறுத்திவிடும். சிறிதுகூடச் சிறுநீர் பிரிய இயலாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும்.ரத்த அளவு குறைந்துவிடும். இது கடைசி கட்டமான சிறுநீரகச்செயலிழப்பு (End-Stage Renal Disease -ESRD) ஆகும்.

செயலிழப்பின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to Avoid During Kidney failure,அன்னைமடி,சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ,Symptoms of kidney damage,annaimadi.com, சிறுநீரக செயலிழப்பினை எப்படித் தடுக்கலாம்,How to prevent Kidney failure,நீரிழிவுநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் ,Diabees & kidney failure,kidney damage,End-Stage Renal Diseasemசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி

சர்க்கரைநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் (Diabetes & kidney failure)

சர்க்கரைநோய் அழைத்துவரும் ஆபத்துகளில் சிறுநீரகச் செயலிழப்புக்குக் (Kidney failure) கூடுதல் கவனம் தேவை.   சிறுநீரகச் செயலிழப்புக்காக சிகிச்சை பெறுபவர்களில் 60 சதவீதத்தினர் சர்க்கரைநோய் நோயாளிகளே! இதற்கு ‘டயபடிக் நெப்ரோபதி’ (Diabetic Nephropathy) என்னும் சிறுநீரகப் பாதிப்பு தான் முக்கியக் காரணம்.

 ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாதவர்கள்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்

ரத்த கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள்

சிறுநீர்த் தடத்தில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர்கள்

புகைபிடிப்பவர்கள்

 ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரைநோய் உள்ளவர்கள்

சர்க்கரைநோய் காரணமாகச் சிறுநீரகபாதிப்பு  ஏற்பட்டுள்ள பரம்பரையில் பிறந்தவர்கள்

 விழித்திரை பாதிப்பு உள்ளவர்கள்.

 அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்றவர்களுக்கு  சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

ஆரம்பத்திலேயே சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி (Symptoms of kidney damage)

சிறுநீரகப் பாதிப்பின் ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. பாதிப்பு தொடங்கிய சில மாதங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை குறையலாம்.

முகம், கணுக்கால், கை, கால் ஆகியவை வீங்கும்.

காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும்

சிறுநீர் கழிவது குறையும்.

பசியின்மை, குமட்டல், வாந்தி, களைப்பு, மூச்சுத் திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு, எலும்பு பலவீனம் போன்ற பிற அறிகுறிகள் ஏற்படும்.

இவற்றை வைத்தும் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு தெரிந்துகொள்ளலாம். என்றாலும், பாதிப்பை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனைகளே உதவும்.

சர்க்கரைநோய் உள்ளவர்கள் வருடத்துக்கு ஒருமுறையாவது மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து  சிறுநீரகத்தைப் பாதுகாக்க முடியும்.   

End-Stage Renal Disease,annaimadi.com,அன்னைமடி,சிறுநீரக செயலிழப்பு

சிறுநீரக செயலிழப்பினை எப்படித் தடுக்கலாம்?(How to prevent kidney failure?)

நீரிழிவின் ஆரம்பத்திலிருந்தே சரியான உணவுமுறை, சர்க்கரைநோய்க்கான  உடற்பயிற்சி ,இன்சுலின் மருந்து மற்றும் நீரிழிவுக்கான மாத்திரைகள் மூலம் ரத்தச் சர்க்கரையை சரியான  கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதும் தொடர் கவனிப்பும் தான் சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கும் முக்கிய அரண்கள்.

குறிப்பாக, HbA1C அளவு 6.5 சதவீதத்துக்குள்ளும் ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைபிடிக்கக் கூடாது. உடற்பருமன் கூடாது. நடைப்பயிற்சி அவசியம். ஊட்டச்சத்துணவு முக்கியம்.

ரத்தச் சர்க்கரையை எப்போதும் சரியாக வைத்துக்கொள்ள வேண்டியது இந்தப் பாதிப்புக்கான முதல் செயற்பாடு. அடுத்ததாக, ரத்த அழுத்தத்தைச் சீராக்குவதும் முக்கியம்.

அத்தோடு புரதமும் கொழுப்பும் குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் சிறுநீரகத்தின் சுமை இன்னும் குறையும்.

செயலிழப்பின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ,Foods to Avoid During Kidney failure,அன்னைமடி,சிறுநீரகப் பாதிப்பின் அறிகுறிகள் ,Symptoms of kidney damage,annaimadi.com, சிறுநீரக செயலிழப்பினை எப்படித் தடுக்கலாம்,How to prevent Kidney failure,நீரிழிவுநோயும் சிறுநீரகச் செயலிழப்பும் ,Diabees & kidney failure,kidney damage,சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி

சிறுநீரைப் பிரிக்கும் மாத்திரைகள், கல்சியம் மாத்திரைகள், ரத்த ஊட்ட மாத்திரைகள் உதவும். கடுமையான சிறுநீரகப் பாதிப்புக்கு ‘டயாலிசிஸ்’ (Dialysis) எனும் ரத்தச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும். மீட்க முடியாத கடைசி கட்ட பாதிப்புக்குச் ‘சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை’ (Kidney Transplantation) தேவைப்படும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் (Kidney stones) மற்றும் சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) இவை இரண்டிற்குமே சித்த மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன.

ஆரம்பத்திலேயே இவைகளுக்கு சித்த மருத்துவம், எடுத்துக் கொண்டால் இவைகளை மிகச் சாதாரணமாக அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்திவிட முடியும்!!

Leave a Reply

Your email address will not be published.