கோஹினூர் வைரம் – சாப வரலாறு (Kohinoor diamond)
ஆங்கிலேயர்களால் இந்தியாவிலிருந்து திருடப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டதாக நம்பப்படும் இந்த ரத்தினக்கல் யாருக்கு சொந்தமானது என்ற வியடம், பல இந்தியருக்கு இன்றும் ஒரு உணர்ச்சிபூர்வ பிரச்சனையாகவே உள்ளது.
கோஹினூர் வைரம் பற்றி வில்லியம் டால்ரிம்பிளும் அனிதா ஆனந்தும் “உலகின் மிகவும் பிரபலமற்ற வைரம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தை ‘ஜக்கர்னாட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
வைரத்தின் தோற்றம் தெளிவின்றி இருந்தாலும், வதந்திகள் நிறைய காணப்படுகின்றன. பல ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது.
மேலும் இது பண்டைய சமஸ்கிருத நூலான சமயந்தகாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல இந்துப் புராணங்களின் அடிப்படையில்,
இந்த வைரம், சூரிய பகவானிடம் இருந்து சத்ரஜித்திற்கு (சத்தியபாமாவின் தந்தை) வந்தது. அது ஒரு நாளைக்கு 1000 கி.கி தங்கத்தை அளிக்கின்றது என்று புராணம் கூறுகின்றது. ஜம்பவான் கொன்ற சிங்கத்தால் கொல்லப்பட்ட சத்ரஜித்தின் சகோதரரிடமிருந்து வைரத்தைத் திருடியதாக கிருஷ்ணர் குற்றம் சாட்டப்பட்டார்.
சத்ரஜித் சந்தேகம் கொண்டு, “கழுத்தில் நகை அணிந்து காட்டுக்குச் சென்ற எனது சகோதரனை கிருஷ்ணன் கொன்றிருக்கலாம்” என்று கூறியிருந்தார். கிருஷ்ணர் தனது கௌரவத்தைக் காக்க, ஜாம்பவானுடன் கொடூரமாக சண்டையிட்டு, அவனிடமிருந்து வைரக்கல்லை பெற்று சத்ரஜித்திடம் திரும்ப அளித்தார்.
இப்போது சத்ரஜித் மிகுந்த அவமானம் கொண்டு, தனது மகள் சத்தியபாமாவின் கரங்களை அந்த வைரத்துடன் கிருஷ்ணனிடம் அளித்தார்.
கிருஷ்ணர் அவரது மகள் சத்தியபாமாவின் கரங்களை ஏற்றுக்கொண்டு, வைரத்தை ஏற்க மறுத்தார் போன்ற புராண கருத்துகளும் உண்டு அந்த கோஹினூர் வைரத்திற்கு உண்டு.
கோஹினூர் வைரத்தின் வரலாறு (History of Kohinoor diamond)
1. ஆந்திராவில் இருந்த கோஹினூர் வைரம் (Kohinoor diamond) அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதியான மாலிக் கபூரால் கைப்பற்றப்பட்டு டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது.
இங்கு தான் சாபக் கதை தொடங்குகிறது. மாலிக்கபூர் கொல்லப்பட்டார். அடுத்த அரசரை தேர்ந்தெடுப்பதில் வந்த குழப்பத்தில் கில்ஜி மனமுடைந்து நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவருக்குப்பின் சரியத்துவங்கிய கில்ஜி அரசு பால்பன் அதிகாரத்திற்கு வரும் வரை அதே நிலைமையில் தான் இருந்தது.
2. டெல்லி சுல்தான் சிக்கந்தர் லோடியிடம் வைரம் கிடைத்த போது தான் பாபர் ஆப்கானிஸ்தானிலிருந்து போருக்குப்புறப்பட்டு வந்தார்.
1526 – ஆம் ஆண்டு பானிபட் போரில் வென்று பாபர் டெல்லியைக் காப்பாற்றினார். அப்போது இளவரசர் ஹுமாயூனுக்கு வைரம் பரிசளிக்கப்பட்டதாம்.
4. ஹுமாயூன் அரசராக பதவியேற்ற கொஞ்ச நாளில் செர்ஷா அப்பதவியைக் கைப்பற்றினார். கூடவே அந்த வைரத்தையும்.
செர்ஷாவிற்கு என்ன நடந்தது தெரியுமா? பீரங்கி விபத்தில் படுகாயமுற்று இறந்துபோனார். ஹுமாயூன் கடைசிவரை நாடோடியாக அலைந்தார். அதற்கு காரணம் கோஹினூர் வைரம் தான் என்று சூடம் ஏற்றிச் சத்தியம் செய்கிறார்கள் வதந்திக் காப்பாளர்கள்.
5. அக்பர் கோஹினூர் வைரத்தைத் தொட்டதில்லையாம். அக்பருக்குப் பிறகு அவர் பேரன் ஷாஜஹான் தான் கருவூலத்தில் இருந்து வைரத்தை வெளியே எடுத்திருக்கிறார்.
அவரது கதை ஒரு சோகக் காவியம். தன் மகனாலேயே சிறைவைக்கப்பட்டு இறந்துபோனார் ஷாஜஹான்.
6. அவுரங்கசீபிற்கும் சேர்த்து அவர் வாரிசுகள் துன்பத்தைச் சுமந்தனர். கடல்போல் விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யம் கோடைகாலக் குளமென மாறியது.
அவருக்குப்பின் பல கைகள் மாறிய அரசு முகமது ஷாவிடம் வந்து சேர்ந்தது. அதற்குள் பெர்ஷியாவில் இருந்து நாதிர்ஷா படையெடுத்து வந்துவிட்டார். முகமது ஷா தோல்வியைத் தழுவினார்.
கோஹினூர் வைரத்தையும் சேர்த்து டன் கணக்கில் செல்வங்களை அள்ளிச்சென்றார் நாதிர்ஷா. அவரும் இதிலிருந்து தப்பவில்லை. ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்த அரசரை நிரந்தரமாய் தூங்கவைத்தனர் அவருடைய வீரர்கள்.
7. அதன்பிறகு மறுபடியும் இந்தியாவிற்கே வந்து சேர்ந்தது கோஹினூர். பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைகளுக்குச் சென்றது.
கடைசியாக ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கோஹினூர் வைரம் (Kohinoor diamond) கைப்பற்றப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
நாதிர்ஷா தான் முதன் முதலில் அந்த வைரத்திற்கு கோஹினூர் எனப் பெயர் சூட்டினார்.
ஷா ஷூஜா-உல்-மல்க் இடமிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங்கால் எடுக்கப்பட்ட கோஹினூர் என்று அழைக்கப்பட்ட இந்த ரத்தினகல்லானது, லாகூர் மஹாராஜாவால் இங்கிலாந்து ராணியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் லார்ட் டல்கௌசி இருந்தார். மற்றவர்களை விட, கோஹினூரை பிரிட்டிஷார் கைப்படுத்துவதில் டல்கௌசி மிகுந்த பொறுப்புடன் இருந்தார்.
அதில் அவரது சிறப்பான ஆர்வத்தை அவரது மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் காண்பிக்கத் தொடர்ந்தார்.
கோஹினூர் வைரத்தின் சாபம் (Curse of the Kohinoor)
கோஹினூர் வைரமானது ஒரு சாபத்தை கொ ண்டு வருவதாகவும், அதை ஒரு பெண் வைத்திருந்தால் மட்டுமே அது பலிக்காது என நம்பப்படுகின்றது.
அது வைத்திருந்த அனைத்து ஆண்களும் ஒன்று அவர்களின் மகுடத்தை இழந்தனர் அல்லது மற்ற துரதிஷ்டங்களில் பாதிக்கப்பட்டனர். பிரிட்டிஷார் விழிப்புடன் இந்த சாபத்திலிருந்து விலகி, ராணி விக்டோரியா அல்லது ராணி எலிசபெத் ஆகியோர் மட்டுமே ஆட்சியாளராக அவரது ஆபரணமாக அந்த வைரத்தை அணிந்தனர்.
ராணி விக்டோரியாவிலிருந்து அந்த வைரமானது எப்போதும் மகுடத்தை உடைய ஆண் வாரிசின் மனைவிக்குச் சென்றுவிடுகின்றது.
கோஹினூர் வைரத்தின்(Kohinoor diamond) சாபத்தைப்பற்றி வெள்ளையர்களுக்கு முன்பே தெரியுமாம். அதனால் தான் ராணியிடம் அதை கொடுத்துவிட்டனராம்.
ஏனென்றால் பெண்களை அதன் சாபம் ஒன்றும் செய்யாது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்ததாம். இது ராணிக்குத் தெரியுமா என்று தான் தெரியவில்லை. காகம் உக்கார்ந்து பனம்பழம் விழுந்த மாதிரி எனச் சொல்வார்களே அது தான் இது.