விசேட சுவையில் கொள்ளு சட்னி கொள்ளுரசம் (Kollu reipes)

கொள்ளு பருப்பு  உணவுகள் (Kollu reipes) மிக அதிக சுவையானவை. 

உணவுகளில் அதிக  ஆர்வமிக்கவர்கள் கூட சில நேரங்களில் கொள்ளு உணவுகளை சாப்பிடுவதை தவற விட்டிருக்கலாம். ஏனெனில் கொள்ளு உணவுகள் ஆரோக்கியம் தருபவை.

குதிரைக்குரிய உணவாகாவே அறியப்பட்டாதால் கொள்ளு பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள  ஒருவேளை விருப்பப்படாமல் இருக்கலாம். ஆனால் அதன் பயன்கள் மறுக்க முடியாத வகையில் மிக அற்புதமானவை.

கொள்ளு ரசம், கொள்ளுசட்னி செய்யும் முறை (Kollu reipes) மிக எளிது. சிறிது நேரத்திலேயே செய்திடலாம். சாதத்துடன் செய்து சாப்பிடுங்கள்.அருமையாக இருக்கும்!

கொள்ளு ரசம், கொள்ளுசட்னி செய்முறை (Kollu reipes) உங்களுக்காக வீடியோவில்.

கொள்ளானது அதிக கல்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்தினைக் கொண்டுள்ளது. அதோடு பயறு வகைகளில் கொள்ளானது அதிகளவு கல்சியத்தைப் பெற்றுள்ளது.

இதில் பொஸ்பரஸ் கூட உள்ளது. எனவே கொள்ளுபருப்பை இடையிடையே சாப்பாட்டில் கொள்ளு குழம்பு,தோசை, ரசம் ,துவையல், சுண்டல், கொள்ளு வடை செய்து சாப்பிட்டு வருவது  ஆரோக்கியம் தரும்.

கொள்ளுப் பயறு உலகிலுள்ள பயறு வகைகளில் அதிக புரதச்சத்துள்ள ஒன்றாக உள்ளது. இது அதிக சக்தியைக் கொண்டது. அதனால்தான் பந்தய குதிரைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

Kollu reipes,Kollu reipes in tamil, Kollu chutney reipes,kollu curry receipe,annaimadi.com,horse gram receipe,kollu rasam receipe,kollu thuvaiyal recipe.indian receipe

கொள்ளு ஏன் ஒரு சிறந்த உணவு (Kollu reipes)?

இரும்புச்சத்து, கல்சியம் மற்றும் புரதம் அதிகம். உண்மையில், பருப்பு வகைகளில் மிக அதிகமான கல்சியம் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதாகவும், சைவ உணவுகளில் புரதச்சத்து மிகுந்த ஒன்றாகவும் கொள்ளு உள்ளது.

மேலும், அதன் மெதுவாக ஜீரணமாகக்கூடிய ஸ்டார்ச், நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோயாளிகளுக்கு ஏற்றதாக அமைகிறது.

கொள்ளு பருப்பின் பயன்கள் ஏராளம்.

குறைவான கொழுப்புச் சத்து மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்டது.

கொள்ளு தானியத்தின் (Horse Gram) ஆரோக்கிய நன்மைகள் எண்ணற்றவை!

எந்தவொரு  ஆரோக்கிய பிரச்சனைக்கும்  தீர்வு கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது கொள்ளு.

ஆஸ்துமா, சுவாசக்குழாய் அலர்ஜி, லுயுக்கோடெர்மா, சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரக கற்கள் மற்றும் இதய நோய்களுக்கான அதன் உபயோகத்தை நம் பாரம்பரிய மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன.

Kollu reipes,Kollu reipes in tamil, Kollu chutney reipes,kollu curry receipe,annaimadi.com,horse gram receipe,kollu rasam receipe,kollu thuvaiyal recipe.indian receipe

மஞ்சள் காமாலை அல்லது உடலில் நீர்த்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேதத்தில் கொள்ளு பரிந்துரைக்கப்படுகிறது. வாத நோய், புழுக்கள், கண்களில் ஏற்படும் அலர்ஜி மற்றும் மூல நோய்க்கு கொள்ளு மிகவும் திறன்மிக்க வகையில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.

உணவில் நிறைய கொள்ளை சேர்த்துக்கொள்வது உண்மையில் உடல் பருமனை நிர்வகிக்க உதவும். ஏனெனில், இது கொழுப்பு திசுக்களை தாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

உங்கள் உடலமைப்பில் வெப்பத்தையும் சக்தியையும் உருவாக்கும் திறனும் கொள்ளிற்கு உண்டு, எனவே இது குளிர்கால நாட்களில் உங்களை சூடாக வைத்திருக்கும்.

Kollu reipes,Kollu reipes in tamil, Kollu chutney reipes,kollu curry receipe,annaimadi.com,horse gram receipe,kollu rasam receipe,kollu thuvaiyal recipe.indian receipe

இதை எவ்வாறு உட்கொள்வது,எப்படி சமைப்பது என்று எண்ணினால் ,  இவற்றை முளைகட்ட வைத்து உண்ணலாம் அல்லது சூடான உணவை விரும்புவதாக இருந்தால் சுவையான சூப்பை செய்து பருகலாம்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் கொள்ளை முளைகட்டி உண்பது நல்லது, இது எளிதில் ஜீரணமாகிறது.

கொள்ளு உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். நீங்கள் அதிக வெப்பத்தை உணர்ந்தால், உடலமைப்பை குளிர்விக்கும் முளைகட்டிய பச்சைப் பயறுகளைச் சாப்பிடுவதன் மூலம் அதை சமப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *