குண்டலினி சக்தி என்பது என்ன? (What is Kundalini Shakti?)
குண்டலினி சக்தி(Kundalini Shakti) உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் தனது சக்திகளை கொடுத்து உடம்பில் உள்ள எல்லா இயக்கங்களையும், உணர்வுகளையும் இன்ப, துன்பங்களையும் கோப, தாபங்களையும் நிர்வாகம் செய்து உடம்பில் உஷ்ணம், குளிர்ச்சி ஆகியவற்றையும் சீராக பாதுகாத்து வருகிறது.
இதுமட்டுமல்ல, உடம்பில் உள்ள ஆயிரக்கணக்கான நாடிகளையும், குண்டலினி சக்தியே (Kundalini Shakti) பாதுகாக்கிறது.
நாடி சுத்தியின் மூலம் மேல் துருவ எழுச்சியை மேற்கொள்ளும் குண்டலினி சக்தி (Kundalini Shakti) பேரின்ப நிலைக்கு இட்டுச் செல்கிறது.
மூல நெருப்பு என்ற குண்டலினி சக்தி (Kundalini Shakti) எப்படி நாடிகள் வழியாக பயணப்படுமென்று சந்தேகம் தோன்றும். குண்டலினி சக்தி என்பது, உருவமில்லாத மின்சாரத்தை போன்ற ஒருவித அதிர்வு தான்.
இந்த அதிர்வு, தான் தோன்றிய இடத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்திற்கு அதாவது பிரம்மா கபாலத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல்களை நீக்கி வழியை சுத்தப்படுத்துவது மட்டும் தான் நாடிகளின் முக்கிய பணியாகும்.
தனித்தனியாக பகுதி பகுதியாக நமது உடம்பிற்குள் ஆயிரம் உறுப்புகள் இருந்தாலும், அவைகள் அனைத்திற்கும் மூல கருவாக இருப்பது குண்டலினி சக்தியே (Kundalini Shakti) ஆகும்.
இந்த பேரின்ப சக்தி, எழுச்சியை அடையாமல் இருக்கும் நேரம் மூலாதாரத்தில் உறங்குவது போல் படுத்துக்கிடக்கிறது.
குண்டலினி சக்தி(Kundalini Shakti) மூலாதாரத்திலிருந்து கிளம்பி, சகஸ்ரத்தை சுழுமுனை நாடி வழியாக சென்று அடையும் போது, ஆறு ஆதாரங்களை கடந்து செல்கிறது.
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மனிபூரகம்,அநாதகம், விசுக்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரங்களை முறையே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம் என்று யோக சாஸ்திரம் உருவாக பெயரிட்டு அழைக்கிறது.
உயிரின் ஆதாரத்தோடு தொடர்பு கொள்ள, குண்டலினி சக்தியை யோகா அணுகும் விதத்தையும், நம் மூலத்தோடு தொடர்பு கொள்வதனால் நமக்கு ஏற்படும் தாக்கத்தையும் அழகுடன் விவரிக்கிறது இக்கட்டுரை.
குண்டலினி வெறும் வார்த்தையல்ல, நமக்குள் புதைந்திருக்கும் புதையல்…
உடலில் இருக்கும் ஏழு சக்கரங்கள்
இப்போதும் கூட உங்களுக்குள் சக்தி இருக்கிறது. உங்கள் உயிர்சக்திகள் வேலை செய்கின்றன, ஆனால் அதில் ஒரு சிறு பகுதி மட்டுமே வேலை செய்வதால் மிகவும் குறைவான அளவே உயிர்சக்தி வெளிப்படுகிறது.
ஆனால் அந்த உயிர்சக்தி முழுவதுமாக இயங்கி, பிளக்கும் சரியாக சொருகப்பட்டிருந்தால், அதை வைத்துக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்ய முடியும் என்பதற்கு அளவே இல்லை.
ஒரே ஒரு சக்தி மையம்தான் இருக்கிறது. ஆனால் அதை வைத்துக் கொண்டு உங்களால் எண்ணற்ற விஷயங்களைச் செய்ய முடியும்.
எனவே, உங்களில், பிளக் சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாத சக்தியின் மூலத்தோடு தொடர்பு கொள்கிறீர்கள்.
அது தான் குண்டலினி. இப்போது, சக்தி எங்கே எப்படி உருவாகிறது என்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும், சக்தி என்றால் என்ன, அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இது பலருக்கும் ஒரு கஷ்டமான விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலை ஆகியவற்றில் அவர்கள் ஒரு சமநிலையில் இல்லை.
யோகா செய்வதன் அடிப்படையே அவர்களுக்குள் ஒரு சமநிலையை ஏற்படுத்துவது தான்.
அந்த சமநிலை வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக் பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள். அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது, எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பீர்கள்.
இதற்காக நீங்கள் அந்த மின்நிலையத்தையே தேடிச் சென்று, அதைப் பற்றி ஒவ்வொன்றும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.
நீங்கள் வெறுமனே பிளக்கை சரியாக சொருகினால் போதும், ஒவ்வொன்றும் சரியாக இயங்குகிறது.
தடையில்லாத சக்தி மூலத்துடன் அப்படி ஒரு முறை தொடர்பு கொண்டுவிட்டால், இந்த உயிர் எப்படி செல்ல வேண்டுமோ அதே வழியில் நீஙகளும் செல்வீர்கள்.
இந்த உயிர் எதற்காக ஏங்குகிறதோ, அதை நோக்கியே நீங்களும் இயல்பாக செல்வீர்கள்.
உங்கள் கவர்ச்சியான கருத்துக்கள், கனவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள், உலகத்தின் சிக்கல்களில் சிக்கி தொலைந்து போக மாட்டீர்கள். நீங்கள் நேரான வழியில்தான் செல்வீர்கள்.
ஏனென்றால், இப்போது நீங்கள் படைப்பின் ஆதாரமான சக்தியின் மூலத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.