இனிப்பான கேழ்வரகு பிட்டு (Kurakkan)

கேப்பை, கேழ்வரகு, குரக்கன்(Kurakkan) நச்சினி, மண்டுவா என பல பெயர்களால் அழைக்கப்படும் ராகி, நம் தேசத்தில் பயிரிடப்படும், ஊடு பயிர்களில் மிக முக்கியமான சிறு தானியம். பிட்டு,களி,றொட்டி,அடை என குரக்கனில் (Kurakkan) செய்து உண்ணப்படுகிறது.

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு.

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். உடலுக்கு வலுவையும் தரும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து.அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்து வந்தால், விரைவாக எடை குறையும். செரிமானத்துக்கும் உதவும்.

அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவையை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது.

மேலும், உடலின் தேவையற்ற கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொலஸ்டிரால் விகிதம் சமநிலை ஏற்பட உதவும்.

‘பி’ காம்ப்ளக்ஸ் விற்றமின்கள், மினரல்கள் என கலவையான அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. இது பச்சிளங் குழந்தைக்கு உகந்தது (Baby Food). 6 மாத குழந்தை முதலே கூழாக்கிக் கொடுக்க மிக ஏற்றது.

இனிப்பான கேழ்வரகு பிட்டு ,Kurakkan,அன்னைமடி,annaiamdi.com,கேப்பை, கேழ்வரகு,சிறு தானிய உணவு, குரக்கன் பிட்டு,small grain meal, kurakkan pittu,குரக்கன் பிட்டு செய்முறை ,kurakkan piddu recipe

ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து.

குரக்கனில் பிட்டு (Kurakkan piddu) எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். சுவையானது.இலகுவானதும் கூட.

கேழ்வரகு உண்பதால் என்ன நன்மைகள் (Benefits of Kurakkan)

குரக்கன் (Kurakkan) கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.  

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

 இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது.  அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது. 

இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை ஆரோக்கிய டானிக் என்றே  சொல்லலாம்.

எந்த தானியத்தை விடவும் ராகியில்

குரக்கன் (Kurakkan) கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.  

கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.

குரக்கனில் (Kurakkan) தான் மிக அதிக கல்சியமும், பாஸ்பரசும் உண்டு. இது வயோதிகர்களுக்கும், மாதவிடாய் கடந்த பெண்மணிகளுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் (Osteoporosis) தீவிரம் குறைய, இரத்தத்தில் கல்சியம் அளவை தக்க வைக்கிறது.
தமிழ் நிலத்தோடும், கலாச்சாரத்தோடும் மிக நெருங்கிய நீண்ட காலத் தொடர்புடையது கேழ்வரகு!

கேப்பைக் களி கிண்டாத சமையலறையோ, கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ நம் பாரம்பரியத்தில் இருந்ததில்லை.

அந்த அதிசய சிறுதானியங்களில் இன்றும் நம்மோடு பரவலாய் புழக்கத்தில் உள்ள கேழ்வரகு ஒரு சாம்பியன் உணவு தான்.

எனவே, அரிசியை விட குறைந்த சர்க்கரைச் சத்து, 18 மடங்கு அதிக நார்ச்சத்து உள்ளதால், உண்டபின் இரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென ஏற்றாமல், மிக சீராக ஏற்றும் தன்மையுடைய (Low Glycaemic Index Food), நல்ல உணவு ராகி.

இருப்பினும் கூழாய் குடிக்காமல், களியாய், குரக்கன் உறைப்பு ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம்.

இனிப்பான கேழ்வரகு பிட்டு ,Kurakkan,அன்னைமடி,annaiamdi.com,கேப்பை, கேழ்வரகு,சிறு தானிய உணவு, குரக்கன் பிட்டு,small grain meal, kurakkan pittu,குரக்கன் பிட்டு செய்முறை ,kurakkan piddu recipe

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும், இரத்த சோகை அகலவும் முளை கட்டிய கேழ்வரகில் கிடைக்கும் 88% அதிக இரும்புச்சத்து, மருந்தாய் வேலை செய்யும் ஓர் உணவு.

கோதுமை உணவுப்பொருட்களால் ஏற்படும் ‘க்லூடன் அலர்ஜி’ ‘க்லூடன்’ கேழ்வரகில், இல்லாததால், ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம்.

6 மாத குழந்தை முதல் 100 வயசு தாத்தா வரை எளிதில் ஜீரணமாகக் கூடியதும், ஊட்டச்சத்தை அள்ளித் தருவதுமான மிகச் சிறந்த உணவுகளில் ராகியும் உண்டென்றால், அது சூப்பர் ஃபுட் தானே!

நம் வழக்கில் உள்ள இட்லி, தோசை, புட்டு, இடியப்பம்,களி, கஞ்சி, பக்கோடா, அடை,இனிப்பு உருண்டை என உணவுகளில் என்னென்ன வகையுள்ளதோ அத்தனையிலும் ராகியை பயன்படுத்தியும் செய்யலாம் என்பது மேலும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *