சர்க்கரை நோய்க்கு குறிஞ்சா வறை (Kurinja to cure diabetes)
குறிஞ்சா இலையின் சர்க்கரை நோயைக் குணமாக்கும் (Kurinja to cure diabetes) சிறப்பான தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த கீரையை வறையாக ,அவியலாக உணவில் சேர்த்து வர , சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். வயிறு சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.
இந்த குறிஞ்சா இலைகள் குடலை சுத்தம் செய்யும் தன்மை மற்றும் நீரிழிவு நோய்க்கும் மருத்துவமாக (Kurinja to cure diabetes)பயன்படுகிறது.
சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இந்த குறிஞ்சா கீரை சிறந்த மருந்தாக பயன்படும். மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.
குறிஞ்சா இலை வறை செய்யும் முறை ((Kurinja to cure diabetes)
குறிஞ்சா இலையின் மருத்துவ பயன்கள் (Kurinja to cure diabetes)
காய்ச்சல் தீரசிறுகுறிஞ்சா இலைகளுடன் மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் செய்து குடிக்க குணமாகும்.
ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சா வேரைக் காயவைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட, வாந்தி ஏற்பட்டு விஷம் வெளியாகும்.
சிறுகுறிஞ்சான் இலை, பித்தம் பெருக்கும்; தும்மல் உண்டாக்கும்; வாந்தியுண்டாக்கும்; நஞ்சு முறிக்கும். குறிஞ்ச கொடியின் வேர், வாந்தியுண்டாக்கும்; காய்ச்சல் போக்கும்; நஞ்சு முறிக்கும்; பசியைத் தூண்டி சூட்டைத் தணிக்கும்; நரம்புகளைப் பலப்படுத்தும்.
இதனை நன்றாக நீரில் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் சேர்த்து அதிகாலை வெறும் வயிற்றில் குடுத்தால் குடல்புண் (ulcer) முற்றிலும் நீங்கும்.
மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.
இதனை சிறு குறிஞ்சான்,சிறு குறிஞ்சா எனவும் சொல்வார்கள்.சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும்.
இலைகள் மிக முக்கிய மருத்துவ பயன் கொண்டவை. நீரிழிவு நோயினை தடுக்க முக்கிய மருந்தாக இந்தியாவில் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. எடை குறைக்க உதவுகிறது.
குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது.
சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து வைத்து ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.