குருவிக்கார் அரிசியின் தனித்துவம் (The uniqueness of Kuruvikar rice)
முன்னோர்களின் முயற்சி…பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று குருவிக்கார் ( Kuruvikar rice). சிவப்பு அரிசி வகையாகும்…சற்று தடிமனான அரிசி ஆகும் குருவிக்கார் துத்தநாகம், இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது.
அதிகமான மருத்துவக் குணங்களும் (Medicinal Value), புரதச் சத்துகளும் (Protein value) நார்ச்சத்தும் (Fibre) அதிகம் உள்ளன.
இட்லி, தோசை,ஆப்பம், இடியாப்பம், முறுக்கு,அதிரசம் போன்ற உணவு வகைகளாக செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தலாம்.
குருவிக்கார் ( Kuruvikar rice) அவல் மிக ருசியாக இருக்கும்.
குருவிக்கார் நெற்பயிரின் தனித்துவம்
இந்த இரகம் அதிக நெல் மணிகளை கொண்டிருக்கும். எளிமையான விவசாயத்தின் மூலமாகவே அதிக மகசூல் எடுக்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களில் குருவிக்கார் முதன்மையானது.இது பழுப்பு நிற அரிசியாக இருக்கும்.
மண்ணில் இயற்கையாக இருக்கும் சத்துக்களை பயன்படுத்தி வளரும் ஆற்றல் கொண்டது. இந்த வகை நெற்பயிரில் சொரசொரப்புத்தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால் பூச்சி தாக்குதலுக்கு இது உள்ளாவதில்லை.
அதோடு களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த குருவிக்கார் ( Kuruvikar rice)அரிசியில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து காரணமாக இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளது.
குருவிக்கார் அரிசியை ஒரு ஏக்கரில் விதைத்தால் இருபத்தி ஐந்து முதல் முப்பது மூட்டை வரை மகசூல் கிடைக்கும். இது நாகை மாவட்டத்தை சேர்ந்த வேதாரண்யத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது.
ஆனால் தற்போது தமிழகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது.
வீட்டில் ஏதேனும் விசேஷங்களுக்கு விருந்திற்கு இந்த அரிசி ஒரு சம்பிரதாயமாக பயன்படுத்தப்படுகிறது.
குருவிக்கார் அரிசியின் பயன்கள் (Benefits of Kuruvikar Rice)
இந்த அரிசியின் பழையசோறு விரைவில் கெட்டுப்போகாது. இதை சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். வயிறு நிரம்பி இருப்பது போன்ற உணர்வை தரும்.
பல்வேறு வகையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை கஞ்சியாக வைத்து சாப்பிட்டால் நோயின் தீவிரம் படிப்படியாக குறைந்து விரைவில் குணமடையலாம்.
உடல் எடை குறைக்க நினைப்போர்க்கு இந்த அரிசி உதவும்.
உடலுக்கு நல்ல வலு கூட்டும் செரிமான தன்மையை மேம்படுத்தும்.
தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அதோடு தாய்க்கு இருக்கும் சோர்வு நீங்கி உடல் வலுவடையும்.
உடல் உழைப்பில் அதிகம் ஈடுபடுபவர்கள் இந்த அரிசியை சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலம் பெறும். அதிக நேரத்திற்கு களைப்பு தெரியாமல் வேலை பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் சோர்வு என்பது அதிகமாக இருக்கும். நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்பட்டு உடல் வலிமை இழந்திருப்பவர்கள் இந்த அரிசியைச் சாப்பிட்டுவந்தால், இழந்த சக்தியை (Energy) மீண்டும் பெறலாம்.
குருவிக்கார் நெல் ரகத்தின் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகள் அதிக வலிமையுடனும் நோய் எதிர்ப்புச் சக்தியுடனும் இருக்கும். பசுக்கள் கொடுக்கும் பால் அடர்த்தியாகவும் அதிகச் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.
காளை மாடுகள் நீண்ட நேரம் உழைக்கும்.
குருவிக்கார் அரிசியை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.