சத்துக்கள் நிறைந்த திடீர் லட்டு (Laddu full of nutrients)

அருமையான சுவையில் இலகுவான முறையில் கச்சான் பேரீச்சம்பழ லட்டு(Laddu full of nutrients) !

இந்த லட்டு பேரீச்சம்பழம் ,கச்சான் சேர்த்து செய்யப்படுகிறது.வளரும் குழந்தைகளுக்கு அருமையான சத்துக்கள் கிடைக்கும். அதோடு  நல்ல சுவையாகவும் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

செய்வதற்கு நேரம் தேவை இல்லை.அடுப்பும் தேவை இல்லை.

மூன்றே மூன்று பொருட்கள் தான் தேவை.

பேரீச்சம்பழம் ,கச்சான்,சீனி மட்டுமே.வெள்ளை சீனியைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.அது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும்.பனஞ்சீனி,பனங்கற்கண்டு, பனை வெல்லம்  பாவியுங்கள்.

ஆரோக்கியத்தோடு லட்டுக்கு மிகுந்த சுவையும் கொடுக்கும்.விரும்பினால் சர்க்கரையையும்  சீனிக்கு பதிலாக பாவிக்கலாம்.

மதிய உணவு உண்த பின் ,இனிப்பாக சாப்பிடுவதற்கு ,எதுவும் இருக்கிறதா என சில நேரங்களில் தேடுவோம்.அப்படியான இ நேரத்தில் உடனடியாக பேரீச்சைகச்கான் லட்டை செய்து உண்ணலாம்.

ஆரோக்கியம் தரும் லட்டு,  தவறாமல் செய்து சாப்பிடுங்கள்.

பேரீச்சையில் நிறைந்துள்ள அதிக அளவிலான இரும்புச்சத்து, ரத்தச்சோகையை சரிசெய்கிறது. உடலுக்குத் தேவையான சக்தி மற்றும் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இரத்த உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ரத்தம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

பேரிச்சம் பழத்தை  அன்றாடம்  உணசேர்த்து வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம்.

தினமும் பேரிச்சம்பழத்தை உட்கொண்டு வருவது  வளரும் பிள்ளைகளுக்கு மிக நல்லது.ஏனெனில் பேரிச்சம்பழத்திலுள்ள சேர்மானங்கள் மூளையின் செயற்பாட்டை  மேம்படுத்துகின்றது.

அதாவது ஞாபக சக்தி, ஒருமுகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

laddu full of nutrients,easy laddu receipe

Check Price

கச்சான் அல்லது நிலக்கடலை இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அத்துடன் அது ஞாபக சக்திக்கும் இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது.

நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.இதனால்

நிலக்கடலை அடிக்கடி சாப்பிட்டு வருவது, நோய்வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச்சத்து, நமது உடலில் தீய  கொழுப்பைக் குறைத்து நல்ல

பாதாமைவிட நிலக்கடலையில் நல்லகொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த லட்டு (Laddu full of nutrients)  சத்துக்கு சத்து, அதேநேரம் சுவைக்கும் குறைவில்லை!

Leave a Reply

Your email address will not be published.