லியோ படத்தின் ஷூட்டிங் (LEO)
லியோ (LEO) திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம்.
இப்படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தளபதி 67 திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவுப்பு படக்குழு சார்பில் 2023, ஜனவரி 30ல் வெளியானது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.
இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். ஏற்கனவே இவர்கள் விஜய்யும், லோகேஷும் இணைந்த மாஸ்டர் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானதால் இந்தப் படம் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் விஜய், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ் போன்ற பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லியோ திரைப்பட நடிகர்கள்(LEO)
இப்படத்தில் விஜய் உடன் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த்,மனோ பாலா,ஜனனி குணசீலன்,சாண்டி மாஸ்டர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் லியோ(LEO) படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அனிருத் இசையமைப்பாளர்

திரைப்பட இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் கைதி, விக்ரம் என பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இயக்குனராக புகழ்…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தீவிரமாக நடந்து வருகிறது.
கதை,திரைக்கதை,வசனம் அனைத்தும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,இப்படத்திற்கான பாடல்களை பாடல் ஆசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது..ஆக்ஷன் கிங் அர்ஜுன்
இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் லியோ படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ,’லியோ (LEO)திரைப்படத்தின் கதை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது”.
“இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்ஷன் தோற்றத்தில் காட்டப்போகிறார்.விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.