கவலை ,கோபம்,டென்சன் போக்கும் லிங்க முத்திரை (Linga mudra)

லிங்க முத்திரை (Linga mudra) எல்லோராலும் செய்யக் கூடிய மிக எளிய முத்திரை. கவலை , கோபம்,டென்சன்,ஆஸ்துமா போன்றவற்றில் இருந்து ஆறுதல் கொடுக்கும்.
உடல் சூட்டால் வருந்துபவர்கள் தொடர்ந்து செய்து வர உடல் வெப்பம் சமப்படும்.உடல் சூட்டை சமப்படுத்தும் லிங்க முத்திரை செய்தால் உடலில் உயிரோட்டமும், வெப்ப ஓட்டமும் சீராகயிருக்கும்.
 
இந்த முத்திரையை செய்வதற்கு பத்மாசனம், வஜ்ராசனம் சிறந்தவையாகும்.செய்ய முடியாதவர்கள் சுகாசனத்தில்  (சாதரணமாக சம்மணம் போட்டு இருத்தல்) இருந்தும் செய்யலாம்.
லிங்க முத்திரை (Linga mudra) செய்யும் முறையையும் அதன் பலங்களையும் தெளிவாக விளக்குகிறார்.
வீடியோ வைப் பாருங்கள்.
 

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து, கை விரல்கள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று பிணைத்துக் கொள்ளுங்கள். இடதுகை கட்டை விரல் மட்டும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும். மற்ற கை விரல்களினால் கைகளின் பின்புறத்தை அழுத்த வேண்டும்.

வலது கை கட்டை விரல், இடது கை கட்டை விரலின் அடிப்பகுதியை அழுத்த வேண்டும். அதன் பிறகு வலது கை கட்டை விரலை நிமிர்த்தி, அதன் அடிப்பகுதியில் இடது கை கட்டை விரலால் அழுத்த வேண்டும்.

இப்படி இரண்டு கட்டை விரல்களிலும் மாற்றி மாற்றி 48 நிமிடங்கள் செய்தல் வேண்டும். இந்த முத்திரையை அதிகாலையிலும் இரவுகளிலும் செய்ய வேண்டும். வயிற்றில் கட்டி இருந்தால் இந்த முத்திரையை செய்யக் கூடாது.

லிங்க முத்திரை செய்யும் முறை

 1. முதலில் நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் தரையில் ஒரு விரிப்பு விரித்து பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
 2. முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 3. முதலில் இரு நாசி துவாரத்தின் மூலமாக மெதுவாக மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
 4. ஒரு நிமிடம் இவ்வாறு செய்ய வேண்டும்.
 5. பின்பு இரண்டு கை விரல்களையும் சேர்த்து பிடித்துக் கொண்டு இடக்கை கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைக்க வேண்டும்.
 6. மற்ற விரல்கள் அனைத்தையும் படத்தில் உள்ளது போல் அழுத்தி இருக்கமாக வைத்து கொள்ள வேண்டும்.
 7. இந்த முத்திரையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
 8. முதலில் 5 நிமிடங்கள் செய்யவும்.
 9. படிப்படியாக 10 நிமிடங்கள் செய்யலாம். பின்பு ஒரு மாத காலத்தில் 15 நிமிடங்கள் செய்யலாம்.

linga mudra,annaimadi.com,benefits of linga mudra,remedi for Astma,releif from stress

லிங்க முத்திரையின் பலன்கள் (Benefits of Linga mudra)

உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு மனிதன் சுவாசிக்கும் பொழுது 7 லிட்டர் காற்று உள்ளே போய் 7 லிட்டர் காற்று வெளிவர வேண்டும். நுரையீரல்களில் சளி அதிகம் இருப்பதால் மூச்சு உடல் முழுக்க செல்வதில்லை. இதுவே ஆஸ்துமாவாகின்றது. ஆஸ்துமாவிற்கு மூலகாரணம் சளி என்பதை நாம் உணர வேண்டும்.

சளி அதிகமாகும் பொழுது அதுவே காச நோயாக மாறி உயிருக்கே ஆபத்தாகின்றது. மேலும் உடலில் சளி அதிகமாகும் பொழுது உடல் மெலிந்துவிடும். மேலும் அடிக்கடி காய்ச்சல் வந்து விடுவதற்கு காரணம் சளி அதிகமாவது தான்.லிங்க முத்திரை இவற்றிற்கு நல்ல பலனைத்தரும்.

அதோடு உடற்சோர்வு ,முதுகு, கழுத்து முதுகெலும்பில் வலி போன்ற  உடல் உபாதை தரும் சளியை இந்த முத்திரை போக்குகின்றது.

 • இருமலை போக்கும்.
 • ஆஸ்துமா ஜலதோஷம் நீங்கும்.
 • சைனஸ் மற்றும் பக்கவாதத்தை குணப்படுத்தும்.
 • உடல் கோளாறுகள் நீங்கும்.
 • உடலுக்கு வலிமை கிடைக்கும்.
 • சுவாசப்பை வலுப்படும்.
 • உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
 • உடலில் அதிக எடை குறையும்.
 • அடிக்கடி சளி பிடிப்பது குறையும்.
 • அடிக்கடி காய்ச்சல் வருவது குறைந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published.