லிப்ஸ்டிக் பற்றிய சில பயனுள்ள தகவல்கள் (Some useful information about lipstick)
உதட்டுச்சாயம் (lipstick) பெண்களின் கலாசாரத்தில் பிண்ணிப் பிணைந்ததென குறிப்பிடலாம். பெண்கள் நீண்ட காலமாக லிப்ஸ்டிக் பயன்பாட்டில் ஈர்க்கப்படுகிறார்கள்.
உதடுகளும் உடலில் மிகவும் கவர்ச்சியான உறுப்புகளில் ஒன்றாகும். காலப்போக்கில் உதட்டுச்சாயத்தின் நிறமும் தரமும் பெரிதும் மாறியிருந்தாலும், இந்த உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துவதற்கான முதன்மை நோக்கம் அன்றிலிருந்து அப்படியே உள்ளது.
முகத்திற்கு அழகூட்டுவது உதடுகள் தான். பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்ற காரணங்களால் வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் ஏற்பட்டு முக அழகையே அது கெடுத்துவிடும்.
அதுமட்டும் இல்லாமல். உடலின் மற்ற பகுதிகளில் இருக்கும் சருமம் 28 நாட்களுக்கு ஒரு முறை இறந்த செல்களை இழந்து புதிய செல்களை உருவாக்கிக் கொள்ளும்.
ஆனால் உதட்டு பகுதியில், புதிய செல்களை உருவாக்குவதற்கு மாத கணக்கில் ஆகும். மேலும் சில வெடிப்புகள் உடலில் நீர் வறட்சி ,சில வகை சோப்புகளை பயன்படுத்துவதினாலும் ஏற்படுகின்றன.
லிப்ஸ்டிக் (lipstick) என்பது ஒரு நவநாகரீக கலாசாரமாகும். அது எப்போதும் மாறாமல் உள்ளது. இன்று, லிப்ஸ்டிக் என்பது ஒரு ட்ரெண்ட் ஆகியுள்ளது. மேலும் இது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும் தினமும் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
ஃபேஷன் பற்றி பேச விரும்பாத இளையோர் இருக்கமாட்டார்கள்.
உதட்டுச்சாயம் (lipstick) தயாரிக்க பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள் மெழுகுகள், தாவர எண்ணெய்கள், எண்ணெய்கள் மற்றும் தேன்கூட்டு மெழுகுகள் போன்ற நிறமூட்டிகள் ஆகும்.
அதற்கு கூடுதலாக, நீங்கள் ஒவ்வொரு வகையான உதடுகளுக்கும் பலவிதமான நல்ல மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்க்கலாம்.
இந்த உதட்டுச்சாயம் முதலில் நிறமூட்டிகளையும் எண்ணெய்களையும் கலந்து, பின்னர் கரைந்த மெழுகுடன் கலந்து, பின்னர் வாயுக்குமிழ்கள் வராத ஒரு அச்சுக்குள் வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
லிப்ஸ்டிக் நிற தெரிவு (Lipstick color choice)
உதட்டின் வடிவத்திற்கு ஏற்ப லிப்ஸ்டிக் பூசும் முறை
உதட்டின் வடிவத்தை பொறுத்து உங்கள் உதடுகளின் வடிவம் சற்று கனமாக இருந்தால் அதற்குரிய லிப்ஸ்டிக் அணியவேண்டியது அவசியம்.
அதாவது உங்களின் மேல் உதடு கனமாக இருந்தால் மேல் உதட்டில் சற்று பிரகாசமான நிறத்தில் உதட்டு சாயம் இருக்க வேண்டும் கீழ் உதட்டில் அதே நிறமுள்ள வண்ணத்தில் சற்று இருண்டும் இருக்கவேண்டும்.
இரண்டு உதடுகளும் சமநிலையில் இருந்தால் பென்சிலில் உதட்டின் வடிவத்தை வரைந்து கொண்டு உதட்டு சாயம் இட வேண்டும்.
உதட்டுசாயம் பாவிப்பதன் நன்மைகள் (Advantages of using lipstick)
அழகைத் தாண்டி . லிப்ஸ்டிக் உதடுகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க உதவுகிறது.
மேலும், மெடிக்கல் லிப் பாம் (lip balm) வறண்ட சருமத்தை மீட்டெடுக்கவும், உங்கள் உதடுகள் வறண்டு போகாமல் பாதுகாக்கவும் முடியும்.
உதாரணமாக ஒரு கூட்டத்தில் ஒரு உரையை பேச விரும்பினால், ஒரு அழகான லிப்கோட் உங்கள் அந்த பேச்சுக்கு அதிக கவனம் செலுத்த முடியும். மேலும் பேச்சாளரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
லிப்ஸ்டிக்கில் உள்ள தீமைகள் (Disadvantages of lipstick)
இந்த உதட்டுச்சாயங்களில் நன்மைகள் போலவே சில பக்க விளைவுகளும் உள்ளன. லிப்ஸ்டிக் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈயம் போன்ற உலோகங்கள் சிறுநீரகங்களையும் நரம்பு மண்டலத்தையும் சேதப்படுத்தும்.
ஆனால் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் போது உங்களுக்கு தெரிந்த வகையில் பாதுகாப்பாக கையாண்டால் இந்த பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். முடிந்தவரை இயற்கை, மருத்துவம் சார்ந்த லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துங்கள்.
லிப்ஸ்டிக் பயன்படுத்துவதற்கு முன்பு லிப் பாம் (Lip palm) தடவவும். இது லிப் கோட்டுடன்(Lip coat) உள்ள நேரடி தொடர்பைத் தடுக்கிறது.முடிந்தவரை கன உலோகங்களைக் கொண்டிருக்கும் டார்க் வண்ணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.