கல்லீரல் பாதிப்பும் தடுப்பும் (Liver damage and prevention)
கல்லீரலை எல்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நம் உடலை பாதுகாக்கும் சிறந்த முறையாகும். கல்லீரல் பாதிப்படைந்தால் (Liver damage) உடலின் செயற்திறனில் குறைபாடு ஏற்படும் .தொடர்ச்சியாக மற்ற பாகங்களின் செயற்பாடுகளும் பாதிப்படையும்.
நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் முதன்மையானது கல்லீரல். இது நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடற்சக்தியை உற்பத்தி செய்யும் செயல்பாட்டை செய்து வருகிறது.
ஏன் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டும்?
உள் உறுப்புகளில் கல்லீரல் ஒன்று தான் காயப்பட்டாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை விவரித்துக்கொண்டே செல்லலாம். அதிக உடல் பாதிப்புகளும், ஆல்கஹாலும் பெரிதும் கல்லீரலை பாதித்துவிடும் (Liver damage).
பீன்ஸ் பிரிவுகள் ,பீட்ருட் ,கீரை , சர்க்கரை வள்ளி,தக்காளி ஜூஸ், வாழைப்பழம் போன்றவை வெகுவாய் உதவும்.
மஞ்சளை சமையலில் நன்கு பயன்படுத்துங்கள்.மது பழக்கம்கல்லீரலை அதிகாமாக பாதிக்கும்.
கல்லீரலின் செயற்பாடுகள் (Functions of the liver)
கல்லீரல்,உடல் உள்ளுறுப்புக்கள் யாவற்றிலும் மிகப்பெரிய உறுப்பாகும். மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாகவும் கல்லீரல் திகழ்கிறது. உடலின் உள் சூழலைக் கட்டுப்படுத்திச் சமன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பரவலான செயல்பாடுகளை கல்லீரல் கொண்டுள்ளது.
புரதத் தொகுப்பு மற்றும் செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகள் கல்லீரலில் நடைபெறுகின்றன.
இந்த உடல் செரிமானம் மற்றும் முக்கியமான ஹார்மோன்களின் தொகுப்பு ஆகியவற்றில் மிக முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது.
மனித உடலில் இருந்து பல்வேறு நச்சுகள், விஷங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் நீக்குவது மற்றும் கல்லீரலின்மிக முக்கியமான பணியாக உள்ளது .
உடலின் நச்சுத்தன்மை அதிகரித்தால் பித்தப்பையிலிருந்து வெளிவரும் பித்த நீர் கனமாக இருக்கும். இவை இறுகி பித்தப்பை கற்களாக மாறும்.
நார்சத்து மிகுந்த உணவு, தேவையான அளவு நீர், கொழுப்பு குறைந்த உணவு இவையே இதற்கு தீர்வாக அமையும்.
கல்லீரலுக்கு பொட்டாசிய சத்து கிடைத்தாலே பல முக்கிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டும் அறிகுறிகள் (Symptoms of liver damage)
மஞ்சள் காமாலை,வயிற்று வீக்கம் வலி , கால்களில் வீக்கம் , கணுக்கால், சரும அரிப்பு , அடர்ந்த நிறம் கொண்ட சிறுநீர், கறுப்பு நிறத்தில் மலம் , ரத்தம் கசிந்த வெளிப்போக்கு , அதிகசோர்வு , குழப்பம் ,மூட்டுவலி , ரத்தப்போக்கு ஆகியவை ஆகும்.
தவறான உணவுகளை உட்கொள்வதைத் தவிருங்கள். அதாவது இரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,கெட்ட கொழுப்பு உணவுகளை தவிருங்கள்.
இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு இருதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அலர்ஜி என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றன. எனவே இவைகளை சிறுவயது முதலே தவிர்த்து விடுங்கள்.
உடலின் செல்களால் ஹார்மோன் இன்சுலினை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகின்றது.
இதனை சரிசெய்ய மேலும் இன்சுலின் சுரக்கும். நாளடைவில் உறுப்புகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. அதிக கார்போஹைடிரேட் உணவு, இனிப்பு இவையெல்லாம் பாதிப்பினை கூட்டுகின்றன.
கான்டிடா எனப்படும் பூஞ்ஞை தொற்று 8Candida infection) உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கலாம். இது உணவுக்குழாயில் பொதுவாக காணப்படும் ஒன்று.
இதன் அளவு பெருகும் போது உணவு குழாயோடு மற்றும் நிற்காமல் உடல் முழுவதும் பரவுகின்றன.
இதனது அதி தீவிர வளர்ச்சி குடல் சுவற்றில் ஒட்டைகளை உருவாக்குகின்றது. இதனால் நச்சுப் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது.
சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. ஹார்மோன்கள் கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றது.
கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது. அதிக மன அழுத்தம், மது அருந்துவது அவசியம் காரணமாக சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் அதிக அளவினால் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த பூஞ்ஞை அதிக உருவாக்க காரணம் ஆகின்றன.
கல்லீரல் நோய் ஏற்படாமல் தவிர்க்க (Avoid getting liver damage)
வெகு எளிதாக கல்லீரலை காத்துக் கொள்ளும் முறை காய்கறி சாறு குடிப்பது தான். எலுமிச்சை ,வெள்ளரி,தர்பூசணி ,புதினா , கொத்தமல்லி , கரட்,பீட்ருட், கீரை, முட்டைகோஸ் , இஞ்சி , பூண்டு ,திராட்சை போன்றவற்ராய் சாறாக்கி பருகலாம்.
கல்லீரல் பாதிப்புற்றோர் மிகவும் சூடான மற்றும் மிகவும் குளிர்ந்த உணவு தவிர்க்க வேண்டும். குளிர்ந்த உணவு பித்தநீர் குழாய்களில் உறைவு ஏற்படுத்தும்.மற்றும் சூடான உணவு அழற்சிகளை அதிகரிக்கிறது.
உகந்த உணவு வெப்பநிலையானது 15 டிகிரி செல்சியஸ் விட அதிகமாகவும் 60 டிகிரி செல்சியிலும் குறைவாகவும் இருக்கவேண்டும்.
துரித உணவு முற்றிலும் கைவிட வேண்டும். இத்தகைய உணவுகளின்அதிக கொழுப்பு ரசாயன கலவை கல்லீரலுக்கு பெரிய தீங்கு விளைவிக்கும்.
உணவில் அகற்றப்பட வேண்டியவை
சாக்லேட்டில் உள்ள கொழுப்பு கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானது.
மலிவான தரம் குறைந்த எண்ணெயில் செய்யப்பட்ட பொருட்கள்
மது, கல்லீரலின் மிக முக்கியமான எதிரி.
அதிக கொழுப்பு இறைச்சி வகைகளை (வாத்து, பன்றி இறைச்சி) தவிர்க்க வேண்டும். கொழுப்பு உணவு கல்லீரலில் மிக அதிகமான சுமையை ஏற்படுத்துகிறது.
மசாலா கலவைகள் ,புளிப்பு பெர்ரி மற்றும் கீரைகள்,ஊறுகாய்
இயற்கையாகவே உடலில் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டாலும், நாம் சாப்பிடும் சில உணவுகள் இரத்தத்தை அசுத்தமடைய செய்கிறது. இதை தடுக்க இரத்தத்தை சுத்தமாக்கும் பூண்டு, ஆப்பிள் பழம்,கரட் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.
கல்லீரலை ஆரோக்கியமாக்கும் உணவுகள் (Foods for liver healthy)
பச்சைகாய்கறிகளை சாப்பிடுவதால் கல்லீரல் சுத்தம் ஆகிறது.காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.
மஞ்சளில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் உதவும். இதற்கு பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்தாலே போதும்.
இரத்தத்தை மட்டும் இல்லாமல் உடலையும் சுத்தம் செய்கிறது. “மிக சிறந்த கிருமி நாசினி” என்று போற்றப்படும் இந்த மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
அவகடோ இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் (cholesterol) அளவைக் குறைக்க உதவும். மேலும் இரத்த குழாய்கள்(blood vessels) சுத்தமாக வைக்கும். இஹில் அதிகமாக உள்ள விற்றமின் (vitamin E) சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கல்லீரல் பிரச்சனைக்கு முளைக்கீரை அருமையான தீர்வை தருகிறது. அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், விற்றமின் கே, விற்றமின் எ, பொட்டாசியம் இதில் இருப்பதால் கல்லீரல் எளிதாக சுத்தமாகிவிடும்.
முதலில் சமமான அளவு முளைக்கீரை மற்றும் கேரட்டை எடுத்து கொண்டு சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும்.
இந்த சாற்றை தினமும் தயாரித்து குடித்து வந்தாலே எளிதில் கல்லீரலை பாதுகாத்து விடலாம்
சீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)
மூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக இது கருதப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் வேண்டும் என்றால் இந்த வேரை டீ போட்டு குடித்தாலே போதும்.
சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு, சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சனை குணமாகும்.
ஆளி விதைகள்
கல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆளி விதை பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்க செய்கின்றது. இதனை வறுத்து சலாட், அல்லது பிற வகையான உணவுகளில் சேர்த்து கொண்டு சாப்பிடலாம்
இஞ்சி
ஆயிரம் மருத்துவ புதையல்களை தனக்குளே வைத்திருக்கும் ஒரு மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
நெல்லி
விற்றமின் சி நிறைந்துள்ள நெல்லிக்கனி கல்லீரலை ஆபத்தில் இருந்து காக்கும்.கல்லீரல் ஆரோக்கியம் மட்டுமல்ல தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது.
அதிமதுரம்
ஆயுர்வேத மூலிகைகளில் பல்வேறு மகத்துவங்களை பெற்றது இந்த அதிமதுரம். இதனை டீ போன்று செய்து குடித்தால் கல்லீரல் அழுக்குகள் சுத்தமாகி விடும். இந்த டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் அண்டாது.