நீண்ட ஆயுளைத் தரும் இஞ்சி, சுக்கு, கடுக்காய்

இஞ்சி, சுக்கு, கடுக்காய் (Longlife by Ginger Sukku & kadukkai) ஆகிய மூன்றும் சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான உணவு.

காலையில் இஞ்சி , மதியம் சுக்கு, இரவில் கடுக்காய்

என்று உண்டால், உண்மையில் உங்களுக்கு  நீண்ட ஆயுள் (Longlife by Ginger Sukku & kadukkai) உறுதி.

கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் உண்டு வர  கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசி குலாவி நடப்பானே

அதாவது 90 வயதிலும் மிடுக்கான தோற்றம், பலம் பெற முடியும் என்பதே இந்த பாட்டில் ஒளிந்துள்ள ரகசியம்.

இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும், உடலில் உள்ள வாத,பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. ஆனால் அவற்றை உண்ணும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவற்றிலும் விஷத்தன்மை உண்டது. நீங்கள் அதனை எந்த நேரத்தில் எப்படி சாப்பிட வேண்டும், என்பது மிக முக்கியமாக உள்ளது.

இஞ்சி

இஞ்சியின் தோலில்தான் நஞ்சு இருக்கிறது, எனவே எப்போதும் தோலை உரித்தபின் அதனை உபயோகிக்க வேண்டும்.

இஞ்சி உண்ணும் முறை

காலையில் இஞ்சிச்சாற்றை  (மூன்று டீஸ்பூன்) அதே அளவு சுத்தமான தேனுடன்  கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.

Longlife by ginger,sukku,kadukkai,annaimadi.com,easy digestion

Check Price

சுக்கு

காய்ந்த இஞ்சி தான் சுக்கு.சுக்கின் மேல் உள்ள தோலை அகற்ற வேண்டும். அதற்கு, சுக்கின் மேல் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு  பூசி காயவிடவும்.பின்பு மிதமான நெருப்பில் வாட்டி, சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும்.பிறகு நன்றாக ஆறிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுமம் அதனுடன் வந்து விடும்.

சுக்கு உண்ணும் முறை

மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது உடலிலுள்ள வாயுவை சமன் செய்யும்.

கடுக்காய்

கடுக்காயின் உள்ளிருக்கும் கொட்டை  நஞ்சாகும். கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும் .சதைப் பகுதியை இடித்து தூள் செய்து கொள்ளுங்கள்.

கடுக்காய் உண்ணும் முறை

இரவில் படுக்கும் போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும்.இது கபத்தை சமன் செய்யும். மலச்சிக்கல் குணமாகும்.

இந்த மூன்றையும் தினமும் செய்து வாருங்கள். எந்த நோயும் உங்களை எட்டி கூட பார்க்காது என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published.