முதுமையும் உணவில் ஆர்வமின்மையும் (Loosing interest in food)

பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் (Loosing interest in food) வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே சொல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம்.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன.

இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. படிப்படியாக உண்ணும் உணவின் அளவும்  குறைந்துவிடுகிறது.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் அரைத்து சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை.

இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பாரக்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் (Loosing interest in food) இல்லாமல் போய்விடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும். Loosing interest in food,loosing interest in eating,annaimadi.com,Old age and lack of interest in food,முதுமையும் உணவில் ஆர்வமின்மையும்,Why lose interest in food?,Loss of interest in food,Lack of interest in food,உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்? ,அன்னைமடி,முதியோருக்கு உணவில் விருப்பமின்மை,

உணவில் ஆர்வமில்லாமைக்கான காரணங்கள் (Reasons for lack of interest in food)

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸ்கட் போன்றவற்றை அவர்களது செரிமான மண்டலத்தால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலட்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு.

பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே ‘சாப்பிட்டால் வயிற்றால் போகிறது’ என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

வயதான பெற்றோர் சாப்பிடாவிட்டால்  அவர்கள் உடம்பில் சத்துக்கள் குறைந்து விடுமோ என அஞ்சி . தேவையில்லாமல் சத்துமாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது.

எடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும் மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது.

இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் (Loosing interest in food) குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை வருமாறு  உணவு தயாரிப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை பிரஸர், நீரிழிவு ,எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம்.

பதிலாக மணமும் சுவையுமுள்ள இலைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம். எலுமிச்சம்பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும். இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு, கறுவா போன்றவைஉதவலாம்.

இவற்றோடு பார்வைக்குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம்.

முதியவர்கள் பெரும்பாலும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். 

இந்த மருந்துகளின் பக்க விளைவாக  வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை (Loosing interest in food) போன்றவற்றிகு காரணமாகலாம். 

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல் காரணமாகலாம்.

மருந்து காரணமாயின்  மருத்துவருடன் ஆலோசனை பெறவும்.

Loosing interest in food,loosing interest in eating,annaimadi.com,Old age and lack of interest in food,முதுமையும் உணவில் ஆர்வமின்மையும்,Why lose interest in food?,Loss of interest in food,Lack of interest in food,உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்? ,அன்னைமடி,முதியோருக்கு உணவில் விருப்பமின்மை,

குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும். சிறந்ததும் கூட.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் போதிய கவனம் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.