குழந்தைகளுக்கு விருப்பமான ஆரோக்கிய லஞ்ச்பாக்ஸ் (Lunch box)
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு என்பது அவர்களின் அந்த நாளை உற்சாகமாகத் தொடங்கும் ஓர் முக்கிய தொடக்கமாகும். மேலும் அந்த உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், குழந்தைகளின் அறிவு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்கவேண்டும்.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்குசெல்வதால் ஆன முறையில் சமைத்துக் கொடுக்க முடிவதில்லை என்பது மற்றொரு பிரச்சனை.
தொடர்ந்து தயிர்சாதம்,புளிசாதம்,லெமன் சாதம், சிரமபட்டுச் சமைத்தாலும் பிள்ளைகளுக்கு அந்தச் சாப்பாடுகள் பிடிப்பதில்லை என்பதும் ஒரு சிக்கல். பிள்ளைகள் சாப்பிடுகிறார்கள் இல்லை என்பதே பல பெற்றோர்களின் ஆதங்கம்.
உதாரணமாக முதல் 15 நாள்களுக்கு ஓர் மெனுவை தயார் செய்யலாம். பின்பு மீண்டும் அதே மெனுவை எஞ்சிய 15 நாள்களுக்கும் பயன்படுத்தலாம்.
இதனால் குழந்தைகள் முதல் நாள் உண்ட உணவை அடுத்து 15 நாள்களுக்கு பிறகே உண்பார்கள். இதனால் அவர்கள் விதவிதமான உணவுகளை உண்பதோடு சலிப்படையவும் மாட்டார்கள்.
என்ன செய்யலாம்? (Healthy Lunch box ideas)
சமையலறையில் காலத்தை வீணடிக்காமலே அவசரமாக அதே நேரம் சுவையாகவும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் தயாரித்துக் கொடுப்பதற்கான குறிப்புகள்
பப்பாசி, மாம்பழம், விளாம்பழம், வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றின் குளிரவைத்த பழச்சாறை அரைக் கப் அளவு எடுங்கள், மீதி அரைக் கப்பிற்கு யோகட்டை எடுத்து நன்கு அடித்துக் கலவுங்கள்.
சுவையான இந்த fruit smoothie குழந்தைகளுக்கு விருப்பமானதாக இருக்கும் அதே நேரம் போஜனை நிறைந்தது.
அலங்கார சான்விட்ச் . பிள்ளைகளுக்கு விருப்புடையதாக இருக்கும் வண்ணாத்துப் பூச்சி, டைனோசயர், இருதயம், நட்சத்திர வடிவிலான குக்கி கட்டரை உபயோகித்தால் விதவிதமாக அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். பதனிடப்பட்ட இறைச்சி, கொழுப்புக் குறைந்த சீஸ், பாண் ஆகியவை கொண்டு செய்யலாம்.
பீனட் பட்டர், கோர்ன் பிளேக், பிறான்(Bran flake) பிளேக் போன்ற யாவற்றையும் ஒரு கோப்பையில் இட்டு நன்கு கலவுங்கள்.
உருண்டையாக உருட்டி எடுத்த பின்னர் அவற்றை வறுத்த கச்சான், கடலை, அல்லது கஜீ குருணலில் உருட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுங்கள்.
பொரித்த அரிசிமா, உழுந்துமா, புளுக்கொடியல் மா ,வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை, எள்ளுமா, அதிரசம், முறுக்கு ,பயற்றம் பலகாரம்,எள்ளுபாகு என எமது அம்மாக்கள், அம்மம்மாக்கள் தயாரித்து போத்தலி்ல் போட்டு வைத்திருந்து தான் பிள்ளைகளுக்கு அவசர உணவுகளைக் கொடுத்தார்கள்.
வேர்க்கடலை, பேரீச்சம்பழம் சேர்த்து லட்டு செய்து வைக்கலாம். ஏற்கனவே தயாரித்து வைக்க கூடிய சிற்றுண்டிகளையும் சேர்த்து கொடுத்து விடலாம்.
அவல் மற்றொரு சுலப உணவு. தேங்காய்ப்பூ சீனி போட்டுத் தயாரிக்கலாம். சற்று போசனை அதிகம் வேண்டுமெனின் தயிர் அவலில் பழத்துண்டுகளைக் கலந்து கொடுக்கலாம்.