மதுரை மீனாட்சி அம்மன் தரிசனம் (Madurai Meenakshi Amman)

மீனாட்சி அம்மன் ஆலயம் அதிசயங்கள் மிகுந்த அற்புதத் திருத்தலம்!

மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman) கோயிலானது மதுரையின் சிறந்த அடையாள சின்னமாகவும்  வரலாற்று மற்றும் கட்டிடக்கலைக்கு தகுந்த எடுத்துக் காட்டாகவும்  விளங்குகின்றது. மதுரை மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman) கோயிலானது உலக அதிசயப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அற்புதங்கள் கொண்ட ஆன்மிகத் தலமாகும்.

தமிழகத்தின் அடையாள வரிசையில் முன்னால் நிற்கிற, இந்த மீனாட்சி கோயிலுக்குள் வலம் வந்து வழிபட்டு திரும்புவது அளவிட முடியா ஆன்மிகப்  பரவசத்தை அள்ளித் தரும்.

பாண்டிய இளவரசியாக அன்னை மீனாட்சி  அவதரித்ததையும், பிறகு சுந்தரேஸ்வரரான சிவபெருமானை மணமுடித்ததையும் தலவரலாறு ( meenakshi amman history) தெரிவிக்கின்றது.

 
 
இந்திரனின் ‘பிரம்மஹத்தி  தோஷம்’  மதுரை கடம்பவனக் காட்டுப்பகுதியிலிருந்த லிங்கத்தால் தீர்ந்ததாம். இந்திரன் மலர்களால் அந்த லிங்கத்தை பூஜிக்க  விரும்ப, உடனே இந்தக் குளத்தில் பொன் தாமரைகள் தோன்றின என்று இக்குளத்தின் வரலாற்றில்  குறிப்பிடப்படுகிறது.
பொன் முலாம்  பூசிய ஒரு தாமரையை குளத்திற்குள் மிதக்க விட்டிருப்பதை இப்போதும் காணலாம்.

பதினேழு ஏக்கர்  நிலப்பரப்பில் விரிந்திருக்கும் மீனாட்சி அம்மன் ஆலயம்  இந்திரனால்  கட்டப்பட்டது என சொல்லப்படுகிறது.     

மீனாட்சியம்மன் (Madurai Meenakshi Amman)  ஆலய கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்கள்

பதினான்கு வானுயர கோபுரங்களும் கொண்ட இந்த கோவில், கலைத்திறமை மற்றும் வடிவியல் துல்லியத்திற்கு சான்றாகும்.

இந்த கோவில் வளாகத்தின் கலை மற்றும் கட்டடவியல் அற்புதங்களை பிரமிக்க வைக்கும் 33,000 நுணுக்கமான சிற்பங்களும், வண்ணம் தீட்டப்பட்ட மேற்கூரைகளும், மண்டபங்களும், தூண்களும், கோவில்களும், மற்றும் ஆயிரக்கணக்கான புராண கதாபாத்திரங்களும் வினோத உயிரின சிற்பங்கள் அலங்கரிக்கும் பதினான்கு வானுயர கோபுரங்களும் கொண்ட இந்த கோவில், கலைத்திறமை மற்றும் வடிவமைப்பின் துல்லியத்திற்கு சான்றாகும்.

வீடியோவில் மேலும் சுவாரசியமான விடயங்கள்.

பேரழகு மிக்க பிரமாண்ட மீனாட்சியம்மன் கோயில் (Madurai Meenakshi Amman)

இகோவில் , மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முச்சிறப்புகளையும்  கொண்டிருக்கிறது. ஆதியில் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்திற்குப் பிறகே பிற  கட்டுமானங்கள் நடந்திருக்கின்றன. இந்திரன் கண்ட சுயம்பு சிவலிங்கத்திற்கென  எட்டு யானை சிற்பங்கள் தாங்கும் தோரணையில் முதல் விமானம்  கட்டப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு திசைக்கு இரண்டாக நான்கு பக்கங்களிலும் இந்தக் கல்யானைகளை இன்றும் காணலாம்.
 
மதுரை மன்னர் திருமலை உள்ளிட்ட  பலராலும் இத்தலத்தின் முக்கிய பகுதிகள் அழகுற எழுப்பப்பட்டு, உயர சுற்றுச்சுவருடன், விண்ணை முட்டும் நான்கு கோபுர வாயில்களும், அதனுள்ளே  எட்டு சிறிய கோபுரங்களும் அமைந்து இத்தலம் ‘கோயில் மாநகரம்’ என்ற பெருமையையும் மதுரைக்குத் தந்திருக்கிறது.
 
பூஜை செய்வதற்காக, ஆலயக் குளத்தில் பொற்றாமரைகள் பூத்துப் பெருகிய விவரமும் அறிய  முடிகிறது.
நான்கு திசைகளிலும் எழிலார்ந்த கோபுரங்கள் கோவில் வாயில்களாகவே திகழ்கின்றன என்றாலும், மீனாட்சி அம்மை கிழக்கு நோக்கி  அருள்பாலிப்பதால், கிழக்கு கோபுரத்தை கைகூப்பி வணங்கியபடி உள்ளே நுழைவது மரபாகும்.
அவ்வாறு நுழைந்ததும் எதிர்ப்படுகிறது அட்டசக்தி  மண்டபம். அதாவது எட்டு சக்திகளுக்கான மண்டபம். இடப்புறத்தில் கவுமாரி, ரவுத்ரி, வைணவி, மகாலட்சுமி எனவும் வலப்புறம் யக்ஞாரூபிணி,  சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி எனவும், இருபுறமும் எட்டு அம்பிகைச் சிற்பங்களைத் தரிசிக்கலாம்.
 
இத்துடன் துவாரபாலகியர் சிற்பங்கள்,  வல்லப கணபதி, சண்முகர், சைவசமயக் குரவர்கள் நால்வர் உள்பட மலையத்துவச மன்னன்வரை ஏகப்பட்ட கவினுறு சிற்பங்களைக் கண்டு ரசித்து,  வணங்கலாம்.
 
அதனைத் தொடர்ந்து, மீனாட்சி நாயக்கர் மண்டபங்கள், அம்மன் முன் கோபுர வாயிலில் உள்ள திருவாசி விளக்குகள், முதலிப்பிள்ளை  மண்டபம் என நடந்து சென்று, பொற்றாமரைக் குளத்தை அடையலாம்.
இந்தக் குளத்தின் மேலாகத் தழுவிவரும் தென்றல், நம்மைக் குளுமையாக  வருடும் தெய்வீக சுகம் அலாதியாக இருக்கும் .
 
Madurai meenakshi temple,Madurai meenakshi temple images,Madurai meenakshi amman,Madurai meenakshi amman history,meenakshi amman temple madurai,

பொற்றாமரைக் குளத்தின்  சிறப்புகள்

165 அடி நீளம், 120 அடி அகலமிக்க இந்த குளத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.

  • இக்குளத்தைச் சுற்றி, நாலாபுறமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள்  அமைந்திருக்கின்றன.
  • இதன் தென்புறத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றம் கண்டிருக்கிறது என்கிறார்கள். இந்த மேன்மையைப் போற்றிடும்  வகையிலேயே பிராகாரச் சுவரில் 1330 குறள்களையும் எழுதி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
  • குளத்தின் வடக்குப் பிராகாரத் தூணில் கடம்பவனத்தைச் சீராக்கி, கோயிலைக் கட்டிய  மன்னர் குலசேகரபாண்டியர் , வணிகர் தனஞ்சயன் இருவரின் சிலைகளும் எதிரெதிரே இருப்பதையும் பார்க்கலாம்.
  • சிவபெருமானால் 64 திருவிளையாடல்களில் சிலவற்றுடன் இந்தப் பொற்றாமரைக் குளத்திற்கு தொடர்பிருப்பதாக கூறுகிறார்கள்.
  • அதாவது வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்குப்  பொற்கிளியளித்தது, கீரனைக் கரை ஏற்றியதுடன், இலக்கணம் உபதேசித்தது என்பவையாகும்.
  • மக்களை மீனாட்சி, மீனாக விழித்திருந்து காக்கும்  அதிசயத் தத்துவத்தின்  விளக்கம் போல,  இக்குளத்தில் மீன் வசிப்பதில்லை.

Madurai meenakshi temple,Madurai meenakshi temple images,Madurai meenakshi amman,Madurai meenakshi amman history,meenakshi amman temple madurai,

தென்மேற்கு கரை பிராகாரத்தில் விபூதி விநாயகரை வணங்கலாம். அவரைச் சுற்றிலும்,  தனியே ஒரு பெட்டியிலும் வைக்கப்பட்டிருக்கும் விபூதியை இரு கைகளாலும் அள்ளி விநாயகருக்கு அபிஷேகம் செய்yஉம முறை உள்ளது. இந்த விநாயகரை  வணங்கிய பிறகே அம்மன், சுவாமியை வணங்கச் செல்வது தொன்றுதொட்டு நிலவிவரும் வழிபாட்டு முறை.

தென்கிழக்குக் கரையிலிருந்து அம்மன்-சுவாமி கோயில்களின் தங்க விமானங்களை தரிசிக்கலாம். இதற்கென தரையில் ஒரு அடையாளம் போட்டு  வைத்திருக்கின்றனர். அங்கே நின்றபடி அண்ணாந்து தங்க விமான தரிசனம் காணலாம்.
அடுத்து கிளிக்கூண்டு மண்டபத்து சித்தி விநாயகரையும்,  முருகரையும் வணங்கி, அம்மன் திருச்சந்நதியின் முன் உள்ள பலிபீடத்தை வலம் வந்து, மீனாட்சியம்மனை தரிசிப்பதற்கான பிரதான வாயிலுக்குள்  நுழையலாம்.
 
Madurai meenakshi temple,Madurai meenakshi temple images,Madurai meenakshi amman,Madurai meenakshi amman history,meenakshi amman temple madurai,
 
மீன் போன்ற கண்களை உடையவள் என்ற பொருளில் இறைவி ‘மீனாட்சி’  எனப்படுகிறாள். மீன் தன் பார்வையால் முட்டைகளை பொரியச்செய்து பின் பாதுகாத்தும் வரும் கருணையைப் போலவே, உலக மக்களுக்கு தன்  அருட்பார்வையில் நலம் தருவாள் எனும் நயமும் இதில் அடங்கியிருக்கிறது.
 
கண் துஞ்சாமல் மீன் இரவு, பகல் விழித்துக்கிடப்பது போலவே இந்த  மதுரை தேவியும் கண்ணிமைக்காது உலகைக் காத்து வருகிறாள் என்று பொருள்.
Madurai meenakshi temple,Madurai meenakshi temple images,Madurai meenakshi amman,Madurai meenakshi amman history,meenakshi amman temple madurai,
மீனாட்சியம்மன் தன் திருக்கரத்தில்  கிளியை ஏந்தி நிற்கிறாள். பக்தர் அம்மனிடம் கோரிக்கையை தெரிவிக்க,  அதை கவனமாகக் கேட்கும் கிளி, அதை திரும்பத் திரும்ப அம்மனுக்குச் சொல்லி, பக்தர் துயர் களைய உதவுகிறதாக ஒரு நம்பிக்கை.
 
மீனாட்சியம்மனை  (Madurai Meenakshi Amman) வணங்கிய பிறகு, வடபுறம் சண்டிகேஸ்வரியையும் பள்ளியறையையும் தரிசித்து அருகில் உள்ள வாயில் வழியாக சுவாமி கோவிலின் இரண்டாம்  பிராகாரத்தை அடையலாம்.

முக்குறுணி விநாயகரின் அற்புதம்

முக்குறுணி என்பது ஓர் அளவீடு, அதாவது 18 படி. பொதுவாகவே விநாயகரை தரிசிப்பது மனதுக்கு உற்சகம்  அளிக்கும்.

இங்கு முக்குறுணி விநாயகர் அற்புதக் காட்சி தருகிறார். எட்டடி உயரமிக்க இந்த விநாயகர் கோயிலில் தெற்குமுகமாக  நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
மதுரை நகரின் கிழக்கே திருமலை மன்னர், தெப்பக்குளம் தோண்டிய போது கிடைத்த இந்தச் சிலையை, இங்கே  பிரதிஷ்டை செய்துள்ளனர்.
 
விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசி மாவில் ஒரே கொழுக்கட்டையாகப் படைத்து இந்த விநாயகருக்கு நிவேதனம்  செய்யும் மரபு இன்ரூ வரை தொடர்கிறது.

அடுத்ததாக நடுக்கட்டு கோபுர மாடத்திலிருக்கும் மடைப்பள்ளியில்  கிடைக்கும் சாம்பலை எடுத்து திருநீறாக பாவித்து, அணிந்து முன்வினைகளை நீக்க வேண்டிக் கொள்கின்றனர்.
அருகிலுள்ள பஞ்சலிங்கங்களையும்  தரிசிக்கலாம். மதுரையில் சங்கம் வைத்து தமிழ் மணம் பரப்பிய மகத்துவத்தை உணர்த்தும் விதத்தில், இங்கே ‘சங்கத்தார் சந்நதி’ இருக்கிறது.
 
சிவபெருமானைச் சேர்த்து கடைச்சங்க புலவர்கள் 49 பேர் என்று திருவிளையாடற்புராணம் தெரிவிக்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு,  வடமேற்கு மூலையில் உள்ள இச்சந்நதியில் சிற்பங்களாகப் பொலியும் 49 சங்கப் புலவர்களையும் காணலாம்.Madurai meenakshi temple,Madurai meenakshi temple images,Madurai meenakshi amman,Madurai meenakshi amman history,meenakshi amman temple madurai,
 
அருகிலேயே காளத்தீஸ்வரர்,  ஆதிபராசக்தி சந்நதிகளையும் வணங்கி, தொடர்ந்து சென்று ,வடபுறம் திருக்கல்யாண சுந்தரரை வணங்கலாம்.
தடை அல்லது ஜாதகக்  கோளாறு காரணமாக திருமணம் நடைபெறாது வருந்தும் அன்பர்கள், இவரை உளமாற வணங்கிச் சென்றால், விரைவில் திருமணம் ஏற்படும் என்பது பக்தர்களின் அபார நம்பிக்கை.
அதற்குக் சான்றாக  மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணக் கோலத்தையும் சிற்பமாகக் கண்டு மகிழலாம்.

பக்தர்கள் பக்கத்திலுள்ள நவக்கிரகங்களை வலம் வந்து, விளக்கேற்றித் தம் பக்தியைத் தெரிவித்துக்கொள்கிறார்கள். அடுத்துள்ள சட்டநாதரையும்  வழிபட்டு, பிறகு நந்தி மண்டபம் அடைந்து நந்தியம் பெருமாளை வணங்க முடியும். இம்மண்டப விதானத்தில் அமைந்துள்ள சுதைச்சிற்பங்கள் கவினுற  வடிவமைக்கப்பட்டுள்ளன.
 
பிறகு அனுக்ஞை விநாயகரை தரிசித்து, கோயில் பிரதான வாயிலை அடைந்து அங்கு கொலுவிருக்கும் அதிகார நந்திக்கு  காணலாம்.
மீண்டும் முதல் பிரகாரத்தை அடைந்து அங்கு அருள்பாலிக்கும் வந்தியம்மை சிவலிங்கம், சூரியன்,  கலைமகள், தென்முகக்கடவுள், 63 நாயன்மார்கள் ஆகியோரை கண்டு களிக்கலாம்.
 
சைவசமயத்திற்கு அருந்தொண்டாற்றிய 63  நாயன்மார்களின் சிலைகளுள் முதல் பிராகாரத்தின் நுழைவாயிலில் இருந்து, தெற்கில் நீடித்த வரிசையாக இடம்பெற்றுள்ளன.
மகாமண்டபத்தில்  இவர்களது உருவங்கள் படிமங்களாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த நாயன்மாரது முக்தி நட்சத்திர நாளன்று, உருவங்களை பல்லக்கில்  வைத்து கோயிலுக்குள்ஊர்வலமாக எடுத்துச் செல்லும் மரபும் பின்பற்றப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.