ஆரோக்கிய வாழ்வுக்கு முக்கியமான 3 சக்திகள்!(Major Powers for a healthy life)

யோகக் கலை, பிராணாயாமக் கலை, தியானம் இந்த மூன்று சக்திகளுக்கும் (Major Powers for a healthy life) முக்கியத்துவம் கொடுத்து கற்றுக்கொண்டு அதனை தினசரி செய்து வந்தால் உடலில் நோய்கள் வர வாய்ப்பில்லை.
எப்போதும் புத்துணர்வுடன் இருக்க முடியும்.

எந்தச் செயலாக இருந்தாலும் மனதை ஒருமுகப்படுத்தி அதைச் சிறப்பாகச் செய்துவிட முடியும். சாதனைகள் பலவும் நிகழ்த்த முடியும்.

வாழ்க்கையில் எந்த ஒரு மனிதரும் நோயில்லாமல் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் உடல், உயிர், உள்ளம் இந்த மூன்றுக்கும் ஓரளவாவது முக்கியத்துவம் தந்து விட்டால் அவர்களது வாழ்வில் எந்த நோயும் இல்லாமல் நலமுடன் வாழ முடியும். இந்த மூன்றுக்கும் தேவையான 3 முக்கியமான சக்திகளைப் (Major Powers for a healthy life) பற்றி சிறிது விரிவாகப் பார்ப்போம்!

யோகக் கலை (Major Powers for a healthy life)

புதிதாக ஒரு தையல் மெஷின் வாங்குகிறோம். அது சில ஆண்டுகள் மட்டும் நன்றாக இருந்த பின்னர், அதன் பாகங்கள் தேய்மானம் அடைந்து விடுகின்றன. தினசரி அதனை எண்ணெய் போட்டு சுத்தம் செய்வது அந்த மெஷினுக்கு அவசியமாகிறது.

அதேபோலத்தான் மனித உடலும் தேய்மானம் அடையும் போது மெஷினைப் பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியுள்ளது.
நமது உடலை எப்போதும் இளமையோடும், முகப் பொலிவோடும் வைத்திருக்க யோகக் கலை முக்கியமாகும். இருக்கிற அத்தனை யோகாசனங்களையும் செய்ய வேண்டும் என்பதில்ல.

முடிந்தவற்றை தினசரி 10 நிமிடம் செய்தாலும் கூட போதுமானது. சர்க்கரை நோய், மூலநோய், மூட்டு வலிகள் இருப்பவர்கள் கூட இக் கலையினைத் தொடர்ந்து செய்து வந்தால், நோய்களின் தாக்கம் குறைவதை உணர முடியும்.
ஒருவரது உடல் ஆரோக்கியத்திற்கு யோகக்கலை முக்கியமான சக்திகளில் ஒன்றாகும்.

பிராணாயாமக் கலை(Major Powers for a healthy life)

உடல் நன்றாக இருந்தால் தானே உயிர் இருக்கும். உயிர் போய் விட்டால் எப்போது தூக்குவார்கள் என்கிறார்கள்? சாலையின் ஓரத்தில் அதிக சுமை ஏற்றி நின்று கொண்டிருக்கும் லாரி அதன் டயருக்குள் இருக்கும் காற்றால் தான் நிற்கிறது.

டயரில் நிரம்பி இருக்கும் காற்று இல்லையென்றால், லாரி சாய்ந்து விடும். அதுபோலவே மனித உடலும் மூச்சு என்று கூறப்படும் காற்றால் அதாவது உயிர் சக்தியால் தான் நிற்கிறது.

அந்த உயிர்சக்தியை எப்போதும் புத்துணர்வுடன் வைத்துக்கொள்ளும் கலைக்கு பிராணாயாமக் கலை என்கின்றனர். நமது உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய் வாய்ப்பட்டிருந்தாலும், நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து அந்த இடத்தில் சிறிது நேரம் நிறுத்திவைத்து பழுதான நம் உறுப்பையும் சரிசெய்து விடலாம் என்கிறார்கள் இக்கலையை கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள்.
எனவே, எந்த மனிதருக்கும் உயிர்சக்தியை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள பிராணாயாமம் என்ற சக்தியும் முக்கியமான சக்திகளில் ஒன்றாகிறது.

முக்கியமான 3 சக்திகள்!,3 important forces for a healthy life!,annaimadi.com,அன்னைமடி,3 major powers

தியானம்

நமது உடலில் உள்ளம் என்ற ஓர் உறுப்பு இருக்கிறதா? அது கறுப்பா, சிவப்பா, வெள்ளையா, சிறியதா, பெரியதா என்றால் எதுவும் இல்லை. நமது உடலிலேயே இல்லாத ஓர் உறுப்பை “உள்ளம்’ என்றும் “மனசு’ என்றும் சொல்கிறோம்.

கண்போன போக்கிலே கால் போகலாமா? கால்போன போக்கிலே மனம் போகலாமா? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் கூட நமக்கு நினைவுக்கு வரலாம்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் எல்லா இடத்திலும் பரவி இருக்கின்றன. அக் கதிர்களை ஒரு லென்ஸ் மூலம் குவிக்கிற போது அது ஒரு காகிதத்தை கூட எரித்து விடும் சக்தி பெறுகிறது.

இதுபோலவே மனதை அலைபாய விடாமல் நமது சொல்படி நடக்க மன ஒருமைப்பாடு அவசியமாகிறது. மனதை ஒருமுகப்படுத்தும் கலையைக் கற்றுக் கொண்டால் மேம்பட்ட ஆற்றல்களை நம்மால் பெற முடியும்.
எனவே, உள்ளத்தை அதாவது மனதை ஒருமுகப்படுத்திட, மேம்படுத்திட தியானம் என்கிற சக்தியும் முக்கியமானதாகிறது.
டிரைவர் இருந்தால் தான் காரை ஓட்ட முடியும். காரும் இருந்து டிரைவரும் இருந்து பெட்ரோல் இல்லையேல் கார் ஓடாது.

எனவே, கார் ஓட டிரைவரும், பெட்ரோலும் எப்படி முக்கியமோ, அதுபோல உடல் என்கிற காருக்கு மூச்சுக் காற்றான டிரைவரும், மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியான தியானம் என்கிற பெட்ரோலும் இருந்தால் தான் உடல் என்கிற கார் நன்றாக, வேகமாக ஓடும்.

சுவாமி விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம், உயர்ந்த சிந்தனைகள், சிறப்பான செயல்பாடுகளுக்கு இவை மூன்றும் தான் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.

இந்த மூன்றையும் (Major Powers for a healthy life) முறையாகப் பயன்படுத்தியதால் தான் சித்தர்கள், முனிவர்கள் போன்றோர் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள்.

நம் உடல் உறுப்புகளில் ஒன்றாகவே ஆகி விட்ட செல்போன் தினசரி சார்ஜ் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். அதைப்போலவே இந்த 3 சக்திகளையும் (Major Powers for a healthy life) நமது உடலில் தினசரி சார்ஜ் செய்யக் கற்றுக் கொண்டால் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆரோக்கியத்துக்காக தினசரி ஒருமணி நேரமாவது ஒதுக்கவில்லையெனில், நோய்க்காக தினசரி பலமணி நேரங்களை ஒதுக்கவேண்டிய நிலை வந்துவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *