மாம்பழத்தில் சுவையான குளிர்பானம் (Mango lassi)
மாம்பழம், அனைவருக்கும் பிடித்த அருமையான பழம். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட மாம்பழத்தின் சுவை மனச்சோர்வை நீக்கும். முக்கனிகளில் முதல் கனி மாம்பழம்.
மாம்பழத்தில் பொதுவாக நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்கள், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள்,சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து உள்ளது.
மாம்பழத்தை அப்படியே சாப்பிடுவது மிக நல்லது.அதிகமாக கிடைக்கும் கோடை காலங்களில் குளிர்பானங்கள் செய்து பருகலாம்.
மாம்பழத்தில் சுவையான குளிர்பானம் (Mango lassi) செய்வோம்.
மாம்பழ குளிர்பானம் செய்ய தேவையான பொருட்கள் (Mango lassi)
மாம்பழ குளிர்பானம் செய்யும் முறை (Mango lassi)
- மாம்பழத்தை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- மிக்ஸி ஜாரில் நறுக்கிய மாம்பழம், சர்க்கரை பவுடர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- அதனுடன் தயிரை சேர்த்து மிக்ஸி ஜாரில் அடித்து எடுக்கவும்.
- ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
- பத்து நிமிடங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும் அல்லது ஐஸ்கட்டிகள் சேர்த்து அரைக்கலாம்.
மாம்பழ குளிர்பானம் பரிமாற தயார்!
வெயில் நேரத்தில் குடிக்க மிகவும் அருமையான பானம்.
மிகவும் சுவையான மாம்பழ குளிர்பானம் (Mango lassi) வீடியோ செய்முறையில் பார்ப்போம்.
மாம்பழத்தை உண்பதால் கிடைக்கும் பலன்கள்
ஆண்மையை அதிகரிக்கும் மற்றும் உடல் வன்மை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், புற்று நோய் மற்றும் வயது மூப்பு போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
உடலில் புதிதாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். அத்தகைய ரத்த உற்பத்திக்கு மாம்பழங்கள் பெரிதும் உதவுகின்றன.
மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது. இதனால், சிறுகுடல், பெருங்குடல் எரிச்சல், வீக்கம் ஏற்படுவது குறையும்.
நாள்பட்ட தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம்.
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் பார்வைக்கோளாறு குணமாகும். மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகளின் கவனக்குறைவை நீக்குவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
மாம்பழம் சரும அழகிற்கும் மிகவும் நல்லது. மாம்பழ ஃபேஸியல் (mango facial ) முகத்திற்கு ஆரோக்கிய அழகைக் கொடுக்கும்.
தினமும் குளிப்பதற்கு முன்பு, ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழசாறு, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசிவர மாசு மருக்கள்,முகபருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
முக்கியமாக இயற்கையாக பழுத்த மாம்பழங்களே ஆரோக்கியத்திற்கு நல்லதாகவும் அதிக சுவையாகவும் இருக்கும்.