வாசலில் ஏன் மாவிலை தோரணம்(Mango leaf & negative energy)

நம் வீட்டில் நடக்கும் எல்லா சுபகாரியங்களிலும் மாவிலைகள் (Mango leaf ) தவறாமல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம். சுப காரியம் நடக்கும் போது மட்டுமல்ல பொதுவாக எல்லா நாட்களிலும் மாவிலை தோரணம் கட்டலாம்.

மாவிலைத் தோரணம் (Mango leaf ) லட்சுமி கடாட்சத்தையும், மங்கலத்தையும் குறிப்பதாகும்.கோயில், வீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும் போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் இதனைக் கட்டுகின்றனர்.

அதோடு ,மாவிலை (Mango leaf ) ஒரு கிருமிநாசினி. இதற்கு துர் தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு.

 திருமண வீடுகளில் கட்டும்போது மணப்பெண், மணமகன் மற்றும் அவர்களுக்குப் பின்னால் வரும் சந்ததியினருக்கும் இது ஆரோக்கியத்தை வழங்கவல்லது. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. முறையாக காய்ந்து உலரும்.

இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நிலைத்து நீடித்து இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது.

காலங்காலமாக நம்முடைய முன்னோர்கள் இதை செய்து வருவதால் நாமும் ஏன் எதற்கு என்று காரணம் தெரியாமலேயே அதை நாமும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நம்மில் யாருமே ஏன் வீட்டு வாசலிலில் மாவிலை தோரணம் கட்டுகிறோம் என்று சிந்திப்பதில்லை.

வாசலில் மாவிலை கட்டுவது ஏன் ? (Mango leaf on the doorstep)

மாவிலைகள் (Mango leaf ) மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது.

கோவில்களிலோ, வீட்டிலோ பூஜை செய்யும் போது வைக்கப்படும் கலசங்களில் மா இலைகளைச் (Mango leaf ) சொருகி வைப்பார்கள். அதில் மஞ்சள் மற்றும் குங்குமத்தைத் தெளிப்பார்கள். இந்து மதத்தில் இது மிக முக்கிய சடங்காகப் கடைபிடிக்கப்படுகிறது.

மாம்பழமும், மா மர இலைகளும் கடவுள்களின் அவதாரங்களோடு இந்து மதத்தில் தொடர்புபடுத்தப்படுகிறது.

வீடுகளில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது பார்வதி, சிவபெருமானின் பிள்ளைகளாகிய பிள்ளையார் மற்றும் முருகப் பெருமானை சுட்டிக்காட்டுகிறது.

மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அது கெட்ட சக்திகளை வீட்டுக்குள் விடாமல் விரட்டி நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே போல வீட்டு வாசலில் கட்டியிருக்கும் மாவிலைகளை நன்றாக கவனித்து பார்த்தால் அது மற்ற இலைகளைப் போல அவ்வளவு எளிதில் காய்ந்து போகாது. மாவிலையானது பசுமையை தன்னுள் அதிகமாக தக்க வைத்திருக்கும் ஒரு தாவரம். 

மாவிலையானது அது கட்டப்படும் இடத்தை சுற்றிலும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்திருக்கும். இதனாலயே நம் முன்னோர்கள் வீட்டு வாயில்களில் மாவிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு தலைவாசல் என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். அதனால் தான் திருஷ்டிக்கு உரிய பொருட்களை தலை வாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள்.
மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாமல் இருப்பதற்கு தெய்வீக விஷயங்களை நாம் இந்த பகுதியில் செய்யலாம்.
 
குலதெய்வம் முடிச்சுகள், திருஷ்டி கயிறுகள், எலுமிச்சை திருஷ்டி, தோரணங்கள் என்று தெய்வீக மயமான விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.
மாவிலை தோரணம் தினமும் கட்டி தொங்க விடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளன.
 
ஒவ்வொரு வளர்பிறை சனிக்கிழமை அன்று வீட்டின் தலை வாசலில் 11 மா இலைகளை மஞ்சள் நிற கயிற்றில் இடைவெளி விட்டு கட்டி தலைவாசலில் அமைந்திருக்கும் நிலையில் இரண்டு புறமும் முடிச்சுப் போட்டு கட்ட வேண்டும்.
நீங்கள் உள்ளே செல்லும் பொழுதும், வரும் பொழுதும் உங்கள் தலையில் மாவிலை தட்டாதவாறு கட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அடுத்து வரும் வளர்பிறை சனிக்கிழமையில் இதை எடுத்து விட்டு புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இதை  தலைவாசலில் செய்து வந்தால் வாஸ்து குறைபாடுகள் நீங்கும்.

அதே போல் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதை தடுக்க முடியும்.

விஷேசங்களில் மாவிலை ஏன் கட்டுகிறோம்?

வீட்டு விஷேசங்களுக்கு வருபவர்களில் சிலருக்கு உடலில் நோய் தொற்றுக்கள் இருப்பின் ,ஏற்படக்கூடிய நோய் தொற்றுக்களைத் தடுக்க மாவிலைகள் உதவும்.

விழாக்களின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக வருவார்கள். அதனால் காற்றில் அசுத்தம் அதிகரிக்கக்கூடும்.

அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க நம்  முன்னோர் ஏற்படுத்தி தந்த வழக்கமே  ‘மாவிலை’ தோரணம் ஆகும்.

அதன் காரணமாக பூஜையின் போது கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை அருந்தவும் செய்வார்கள்.

இதனால் ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.

மாவிலை தோரணம் வீட்டில் இருக்கும் காற்றினை சுத்தம் செய்யக்கூடிய ஏர் ப்யூரிஃபயர் வேலையைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

இப்படி பல்வேறு சக்திகளைக் கொண்ட, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய மாவிலை தோரணம் கட்டுவதை விடுத்து, கடைகளில் கிடைக்கும் அலங்கார மாவிலை தோரணத்தை கட்டுவதால் என்ன பலன் கிடைக்க போகிறது.

வீட்டு விஷேச நாட்களில் மாமரத்தில் இருந்து பறித்து புதிதாக மாவிலை தோரணத்தை கட்டி அதன் பலனை பெற்றிடுவோம். நம் இளைய தலைமுறையினருக்கும் அதன் அவசியத்தை உணர்த்திடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *