மர்ஜாரி ஆசனம் (Marjariasana for back pain )
மர்ஜாரி (Marjariasana) என்றால் சமஸ்கிருதத்தில் பூனை ஆகும். பூனை தினமும் தூங்கி எழுந்ததும் தனது உடலை வளைத்து நெளித்து சோம்பல் போக்கி, தன்னை சுறுசுறுப்பாக்கி கொள்ளும்.
இதே போல நாமும் நமது முதுகை வளைத்து ,நெளித்து நம்மை சுறுசுறுப்பாக்கி கொள்ளும் யோகாசனம் மர்ஜாரி ஆசனம் ஆகும்.இது மிக எளிது. கழுத்துவலி, முதுகுவலிக்கு உடனடி நிவாரணத்தை பெற முடியும்.
மர்ஜாரி ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலி ,முதுகுவலி , இடுப்பு வலி நீங்கும்.அதோடு கழுத்து ,தோள் , முதுகு ஆரோக்கியமாக இருக்கும்.
ஆசனம் (Marjariasana) செய்யும் முறை
மர்ஜாரி ஆசனம் (Marjariasana) தவழும் குழந்தையின் நிலை போன்ற போஸ் ஆகும். முதல் குழந்தை தவழ்வது போல இருக்க வேண்டும்.
அதாவது, உங்கள் மணிக்கட்டுகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், உங்கள் கால் முட்டி உங்களின் இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்கும் விதமாக உங்கள் உள்ளங்கைகளயும் உங்கள் கால்களையும் தரையில் வைக்கவும்.
உள்ளங்கைகளை தரையில் அழுத்தி, மூச்சை வெளியே விட்டவாறு, கால் முட்டியை தரையில் இருந்து எடுத்து இடுப்பை முடிந்த அளவு மேலே உயர்த்தவும்.
பாதங்களை தரையில் வைக்கவும்.
இப்பொழுது உங்கள் உடல் ஆங்கில எழுத்து ‘V’-யை திருப்பி போட்டது போல் இருக்கும். இப்போது உங்கள் தொப்புளை நீங்கள் பார்க்கும் வண்ணம் தலையை உள்புறமாக கொண்டு செல்லவும்.
உங்களால் முடிந்தவரை இருந்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
மர்ஜாரி ஆசனம் (Marjariasana) எப்படி செய்வதென வீடியோவில் பார்ப்போம்.

யோகாசனம் செய்ய விரும்புபவர்கள் பொதுவாக கடைப்பிடிக்க வேண்டியவை
- கை,கால்,முகம் கழுவி, சுத்தமான உள்ளாடைகள் அணிந்து செய்தல் வேண்டும்.
- நல்லசுத்தமான, காற்றோட்டமுள்ள. வெளிச்சம் நிறைந்த இடத்தில் செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட இடம், உங்களுக்கு வசதியான நேரத்தை தெரிவு செய்ய வேண்டும். இடம்,நேரம் மிக முக்கியம்.
- செய்து முடித்தவுடன் குளிக்க கூடாது.
- நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும்.சரியான தூக்கம், ஓய்வு அவசியம்.
- மதுபானம் அடியோடு தவிர்க்க வேண்டும்.
போன்றவற்றை கடைப்பிடித்து யோகபயிற்சிகள் மூலம் நல்ல பலன்களைப் பெறுவோம்.