Mc Donalds உருவான சுவாரசியமான கதை (Mcdonald’s story)

வாய்ப்புகளை கண்டுகொள்ளும் திறமையும், தரம், தூய்மை, விரைவான சேவை, ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதாலும், உழைப்பின் உயர்வில் வைத்த நம்பிக்கையாலும், ரே க்ராக் (Ray Kroc,McDonald’s) என்ற மனிதருக்கு  Mcdonald’s விரைவு உணவகம் (Mcdonald’s story) என்னும் வானம் வசப்பட்டது.
 
அதிர்ஷ்டம் என்ற சொல்லை நாம் பலமுறை கேள்விப்பட்டிருக்கிறோம். அவன் அதிர்ஷ்டசாலி எனக்கு தான் அதிர்ஷ்டம் இல்லை என்று எத்தனையோ பேர் எத்தனை முறை அங்கலாய்த்திருப்போம்.
 
ஆனால் ,ரே க்ராக் (Ray Kroc,McDonald’s) என்ற வரலாற்று நாயகர், வியர்வை சிந்தி உழைக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பரிசு,  தான் அதிஷ்டம்.
அதற்கு உதாரணமாணவர் ரே க்ராக் ,(Ray Kroc,McDonald’s).
கனவுகளை நனவாக்கிக் கொள்ள வயது ஒரு தடையல்ல என்ற தைரியத்துடன் உழைத்துக் காட்டியவர்.
“Luck is a dividend of sweat. The more you sweat, the luckier you get” 
என்று அதிர்ஷ்டத்தை வரையறுக்கிறார்.
 
அதாவது அதிர்ஷ்டம் என்பது ஒருவர் சிந்தும் வியர்வைக்கு கிடைக்கும் வட்டி. எவ்வுளவுக்கு எவ்வுளவு வியர்வை சிந்தப்படுகிறதோ அவ்வுளவுக்கு அவ்வுளவு அதிர்ஷ்டம்  தேடி வரும்.
 
உழைப்பும் அதற்காக சிந்தப்படும் வியர்வையும் தான் ஒருவரது  உயர்வை நிர்ணயிக்கிறது என்ற உண்மையை உலகுக்கு  சொன்னதோடு அதனை வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

McDonald’s உணவகம் உருவான கதை (Mcdonald’s story)

McDonald’s உணவகத்தின் ஸ்தாபகர், நம்மில் பலர் வேலை ஓய்வைப்பற்றி சிந்திக்கும் 50 ஐக் கடந்த வயதில் ஒரு தொழிலை தொடங்கி அடுத்த 30 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துச் சேர்த்தவர்.
அவரது பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்கு தெரியாமல் இருக்கலாம். 
 
ஆனால் அவர் தொடங்கிய தொழிலின் அல்லது நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் மூன்று வயது குழந்தை கூட துள்ளி குதூகலிக்கும். ஆம் ஹம்பர்கர், ப்ரெஞ்ச்ப்ரைஸ் (French fries), மில்க்‌ஷேக்ஸ் 8Milkshake),ஹாப்பி மீல்(Happy meal) என்றவுடன் குழந்தைகல் கூட உச்சரிக்கும்  பெயர் மெக்டொனால்ட்ஸ்த் தான்(Mc Donalds).
 
1955 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இன்று 120 நாடுகளில் முப்பதாயிரம் உணவகங்களாக விரிவடைந்திருக்கிறது. பில்லியன் கணக்கானோரின் உண்ணும் பழக்கத்தையே மாற்றி அமைத்த அந்த உணவகப் புரட்சி.
‘M’ என்ற தங்க வளைவுகளை உலகுக்குத் தந்த திரு. ரே க்ராக் என்பவர் தான் Ray Kroc,McDonald’s உணவகத்தின் ஸ்தாபகர்.
Ray Kroc,McDonalds, interesting story about Ray Kroc,McDonald's ,annaimadi.com,idea to make business,idea to increase income

 வரலாற்று நாயகர் Ray Kroc!

ரேமெண்ட் ஆல்பர்ட் க்ராக் 1902 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ந்தேதி சிக்காக்கோவில் பிறந்தார். கல்வியில் அதிக நாட்டமில்லாத அவர் உயர்நிலைக் கல்வியை முறையாக முடிக்காமலேயே வெளியேறினார். பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு வேலையாக செய்யத் தொடங்கினார்.
 
முதலாம் உலகப்போர் சமயத்தில் அவர் தொண்டூழிய அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்தார்.சிறிதுகாலம் ஓர் இசைக்குழுவில் இசைக் கலைஞராக இருந்தார்.
பொருட்களை விற்பனை செய்வதில் அவருக்கு தனி ஆர்வம் இருந்தது. எனவே விற்பனை முகவராகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் லில்லி சூலிட் கப் கம்பெனி என்ற நிறுவனத்திற்காக காகித கப் மற்றும் தட்டுகளை விற்பனை செய்து வந்தார். பின்னர் மில்க்‌ஷேக் தயாரிக்கும் இயந்திரங்களை விற்கத் தொடங்கினார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து மில்க்‌ஷேக் இயந்திரங்களை விற்றார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகள் விற்பனைத் துறையில் இருந்த பிறகுதான் உணவகம் திறக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது. 
 

ஹம்பர்கர் உணவகம் McDonald ஆக உருமாறிய விதம் (Mcdonald’s story)

கலிஃபோர்னியாவில்  San Bernardino என்ற பகுதியில் “Dick” McDonald , “Mac” McDonald என்ற இரண்டு சகோதரர்கள் ஒரு ஹம்பர்கர் உணவகத்தை நடத்தி வந்தனர். 1954 ஆம் ஆண்டில் அந்த சகோதரர்கள் எட்டு மில்க்‌ஷேக் இயந்திரங்களை ரே க்ராக்கிடமிருந்து வாங்கினர்.
ஏன் அவர்களுக்கு இத்தனை இயந்திரங்கள் தேவைப்படுகிறது என்று வியந்த ரே க்ராக் அந்த சகோதரர்களின் உணவகத்தைச் சென்று பார்வையிட்டார்.
மக்கள் வரிசைப் பிடித்து உணவு வாங்கிச் செல்வதைக் கண்டார். தேவையை சமாளிக்கத்தான் அந்த சகோதரர்களுக்கு அத்தனை இயந்திரங்கள் தேவைப்பட்டது என்பதை உணர்ந்தார்.
அந்த உணவகத்தின் தூய்மையும், எளிமையும், உணவின் நியாயமான விலையும் அதிக நேரம் காக்க வைக்காமல் உணவை விரைவாகத் தயாரித்த விதமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன.  
15 காசுக்கு ஒரு பர்கர், 10 காசுக்கு (அமெரிக்க டாலர்) ஒரு மெதுபானம் இப்படி என அவற்றை விரைவாக வாங்கிச் செல்வது மக்களுக்கு பிடித்திருந்ததையும் அவர் கவனித்தார்.
அம்மாதிரியான உணவகங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்பதை அந்தக்கணமே கண்டுகொண்டார் ரே க்ராக்.
உடனே அந்த சகோதரர்களிடம் பேசி அதே போன்ற உணவகங்களை ‘franchised’ எனப்படும் நிறுவன உரிமம் முறையில் நாடு முழுவதும் திறக்கலாம் என்று ஆலோசனை கூறியதோடு தானே அதற்கு முகவராக இருப்பதாகவும் கூறினார்.
அந்த சகோதரர்களும் இணங்கவே அடுத்த ஆண்டே அதாவது 1955 ஆம் ஆண்டு தனது முதல் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை இலினோயின் Des Plaines என்ற பகுதியில் திறந்தார். நிறுவன உரிமத் தொகையிலிருந்து முகவருக்கான தொகை மட்டும்தான் அவருக்குக் கிடைத்தது.
ஆனால் அந்த உணவகத்தின் வருமானம் அவர் பெற்ற தொகையை விட அதிகமாக இருந்தது. இருப்பினும் அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை  ‘franchised’ அடிப்படையில் திறப்பதிலேயே அவர் அதிக கவனம் செலுத்தினார்.
Ray Kroc,McDonalds, interesting story about Ray Kroc,McDonald's ,annaimadi.com,idea to make business,idea to increase income
 

இது எப்படி சாத்தியமாயிற்று? எவ்வாறு உருவானது?

ஆறு ஆண்டுகள் கழித்து மெக்டொனால்ட் சகோதரர்களுக்கும், ரேக் க்ராக்குக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சகோதரர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க அவர்களுக்கு 2.7 மில்லியன் டாலரைக் கொடுத்து மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் பெற்றார் ரே க்ராக்.
 
ஆனால் தங்கள் முதல் San Bernardino உணவகத்தை மட்டும் விற்க அந்த சகோதரர்கள் மறுத்து விட்டனர். ரே க்ராக்
அந்த உணவகத்திற்கு நேர் எதிரே ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தைத் 

(Mcdonald’s story) தொடங்கினார் அந்த சகோதரர்கள் தங்கள் சொந்த உணவகத்தை மூட வேண்டியதாயிற்று.

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் அசுர வளர்ச்சி (Mcdonald’s story)

தரம், தூய்மை, விரைவான சேவை, நியாயமான விலை இவற்றை தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டதால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது.
 
முதல் உணவகம் திறக்கப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் அமெரிக்க முழுவதும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டன. பத்தே ஆண்டுகளில் ரே க்ராக்கின் மெக்டொனால்ட்ஸ் உணவகம் பங்குசந்தையில் இடம் பிடித்தது.
 
மெக்டொனால்ட்ஸ் உணவகத்தை முதலாளித்துவத்தின் சின்னம் என்று ஒதுக்கிய சோவியத் மண்ணிலும் 1990 ஆம் ஆண்டில் அது கால் பதித்தது.
உலகின் சுறுசுறுப்பான மெக்டொனால்ட்ஸ் உணவகம் ரஷ்யாவில் தான் இயங்குகிறது. உலகின் ஆகப்பெரிய மெக்டொனால்ட்ஸ் உணவகம் 1992 ல் சீனாவில் திறக்கப்பட்டது.
 
Ray Kroc,McDonalds, interesting story about Ray Kroc,McDonald's ,annaimadi.com,idea to make business,idea to increase income
 

சிறப்பான அதித வளர்ச்சிக்கு காரணம் என்ன ?

உலகின் எந்த மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு சென்றாலும் உணவின் சுவை கிட்டதட்ட ஒன்றாகவே இருக்கும். அதற்கு காரணம் உணவு தயாரிக்கும் முறையும் அளவுகளும் உலகம் முழுவதும் ஒருங்கினைக்கப் பட்டிருப்பதுதான்.
 
மெக்டொனால்ட்ஸின் அசாத்திய  வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம்.
அதோடு காலத்துக்கேற்ப சுவையிலும் வடிவிலும் மாறி மாறி பல விதமாக வந்து கொண்டே இருக்கிறது.
 
மேலும் மாறும் சுவைகளுக்கு ஏற்றவாறு ஹம்பர்கரைத் தவிர்த்து மீன், கோழி பர்கர்களும்,சைவ பர்கர், காலை உணவுகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
மற்றைய துரித உணவு நிறுவனங்களின் விலைகளுடன் ஒப்பிடும் போது மலிவான விலை. எந்நேரமும் கிடைக்கும் தன்மை.பரவலாக எல்லா இடத்திலும் அமைந்திருப்பது போன்றனவும் அதன் சிறப்பான அதித வளர்ச்சிக்கு காரணம்.
 
1977 ஆம் ஆண்டு ‘Grinding It Out’ என்ற தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டார் ரே க்ராக். அதில் அவரது முதல் வரிகள் இவை 
“I have always believed that each man makes his own happiness and is responsible for his own problems.”
அதாவது ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியைத் தானே உருவாக்கிக் கொள்கிறான் அதேபோல் அவனது பிரச்சினைகளுக்கும் அவனே பொறுப்பு.
 
மெக்டொனால்ட்ஸ் (Mcdonald’s story) என்ற உணவகப் புரட்சியின் மூலம் தனது மகிழ்ச்சியைத் தேடிக்கொண்ட ரே க்ராக் ‘ஹம்பர்கர் கிங்‘ என்று பெயரெடுத்தார் .
தனது 82 ஆவது வயதில்  1984 ஆம் ஆண்டு ஜனவரி 14 ந்தேதி கலிஃபோர்னியாவில் காலமானார். 
Ray Kroc,McDonalds, interesting story about Ray Kroc,McDonald's ,annaimadi.com,idea to make business,idea to increase income
 
Xerox – நிறுவனம் ஒரு பில்லியன் டாலரை சம்பாதிக்க அதற்கு 63 ஆண்டுகள் பிடித்தன. அதே தொகையை சம்பாதிக்க IBM – கணினி நிறுவனத்திற்கு 46 ஆண்டுகள் ஆயின.
 
ஆனால் மெக்டொனால்ட்ஸ் உணவகம் ஒரு பில்லியன் டாலரை 22 ஆண்டுகளில் ஈட்டியது. தரத்திற்கும், தூய்மைக்கும், சுவைக்கும், விரைவான சேவைக்கும், நியாயமான விலைக்கும் உலகம் தந்த பரிசு அது. 
 
அப்படிப்பட்ட வருமானத்தைக் குவித்த ரே க்ராக் கூறிய இன்னொரு பொன்மொழி
“If you work just for money, you’ll never make it, but if you love what you’re doing and you always put the customer first, success will be yours”
பணத்திற்காக நீங்கள் வேலை செய்தால் உங்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆனால் எதையும் ஆழமான விருப்பத்தோடு செய்து வாடிக்கையாளர்களை முதன்மையாகக் கொண்டால் வெற்றி உங்களுடையது.
 
இதே பண்புகளோடும் விடா முயற்சியோடும் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லோராலும் தாம் விரும்பும் இடத்தை,வெற்றியை தம் வசப்படுத்தலாம்.
 
பொறுமை, முயற்சியுடன் தன்னம்பிக்கை உங்கள் பாதையை உங்கள் வசப்படுத்தும்!!
 Ray Kroc,McDonalds, interesting story about Ray Kroc,McDonald's ,annaimadi.com,idea to make business,idea to increase income,happy meal,family resturant,cheap outing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *