கொள்ளின் பயன்கள் (Medicinal Benefits of Horse gram)

சிறந்த ஆரோக்கிய உணவான கொள்ளில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களால் (Medicinal benefits of horse gram) ஆயுள்வேத,சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. உடல் எடையை குறைப்பதில் அதிக சக்தி கொள்ளுவிற்கு உள்ளது. 
 
இளைத்தவனுக்கு எள்ளு’ ‘கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழி ஞாபகம் இருக்கும் உங்களுக்கு.
பல வகையான சிறுதானியங்களில் கொள்ளு மிகப் பிரபலமானது.

உணவாக கொள்ளு

கொள்ளுப் பருப்பை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை  ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன. 

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.  கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளு ஒரு லேசான உணவாக இருப்பதால், செரிமான மண்டலத்திற்கு வேலை எளிதாகிறது.
கொழுப்பை எரிக்கவும் இது உதவுகிறது. இது அஜீரணத்தை குறைப்பதில் உதவுகிறது. மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்குகிறது.

கொள்ளின் மருத்துவ நன்மைகள் (Medicinal benefits of horse gram)

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இதில் நிறைந்திருக்கும் அதிக புரதச்சத்து நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக செயற்படவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் உதவுகிறது. 

கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் (Medicinal benefits of horse gram) பற்றி பார்ப்போம்.
 
Medicinal benefits of horse gram,annaimadi.com,healthy grain,benefitd of kollu,receipe of kollu,indian receipe,kollu rasam
                                          கொள்ளுச்செடி

சளி, காய்ச்சல் போக்கும்
இதை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினால், ஜலதோஷம் குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல்வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும்; சுவாசத் தொந்தரவு நீங்கும். காய்ச்சலையும் குணமாக்கும். 

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுங்கள். சளி காணாமல் போய்விடும் . அப்படி ஒரு அருமையான  மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.

 கொள்ளு ரசம் உடலை வலுவாக்கும்.  கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது சிறிது பயன்படுத்தலாம்.

சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது கொள்ளுரசம், கொள்ளு குழம்பு செய்தோ சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும்.

இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால் தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர்.அதனால்தான், குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது; அதிவேகமாக ஓடுகிறது.

Medicinal benefits of horse gram,annaimadi.com,healthy grain,benefitd of kollu,receipe of kollu,indian receipe,kollu rasam

உடல் எடை குறைக்கும்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்து வர உடல் எடை குறையத் தொடங்கும்.

 இதனை ரசமாக வைத்து உண்பது மிகுந்த நன்மை என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்படுகிறது.

கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

இரவு ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும்.  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும்.

நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும்.  இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை நீங்கும்.உடல் வலுவாகும். 

இதை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சிறிய அளவிலான சிறுநீரகக் கற்கள்  தானாக கரைந்து வெளியேறிவிடும்.

நாம் உண்ணும் உணவில் உள்ள  சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கொள்ளுக்கு உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவு.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம்; சூப்பாகவும் சாப்பிடலாம். மாதவிடாய் காலத்தில் மட்டும் தவிர்த்தல் நல்லது.

Leave a Reply

Your email address will not be published.