நறுமண மருந்துப்பொருள் ஏலக்காய் (Medicinal cardamom)
ஏலக்காயைப் (Medicinal cardamom ) பொதுவாக, இனிப்புகள் செய்யும்போது பயன்படுத்துவார்கள்.இனிப்புப் பண்டங்களைச் செரிமானம் அடையச்செய்யும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு.
ஏலக்காயில் இரும்புச்சத்து, மாங்கனீசு துத்தநாகம் போன்ற சத்துக்கள் மிக அதிக அளவு உள்ளன.
ஏலக்காயை அதிக கலோரி நிறைந்த இனிப்புகள்,பிரியாணி போன்றவற்றில் ஏலக்காயைச் சேர்த்து, சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
கபத்தைக் குறைக்கும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. ஏலாதித் தைலம், ஏலாதி சூரணம் போன்றவற்றைச் சாப்பிட்டுவர, வயிற்று எரிச்சல் குணமாகும்.
நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.
ஏலக்காய் விதையின் எண்ணெய் (Cardamom oil) பல மருந்துப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது மற்றும் பானங்களை வாசனை உள்ளதாக மாற்றுகின்றது.
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை (Medicinal cardamom ) வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக வேலை செய்யும்.
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.
ஏலக்காயை (Medicinal cardamom ) தேநீரில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம், படபடப்பு தலைவலி முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.
எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது. ஏலக்காயில் கருப்பு நிற வகையும் உண்டு.
ஏலக்காய், ஏலரிசி போன்றவை நாட்டு மருந்துக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் கிடைக்கும்.
ஏலக்காயில் வீட்டு வைத்தியம்
- ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.
- ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
- நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும்.இத்துடன் சிறுநீர்ப்பை அழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.
- அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். அதில் 5, 6 புதினா இலைகள் போட்டுக் கொதிக்கவிடவும். வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
- ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.
- சில சமயம் சாப்பிட்டபின், நெஞ்செரிச்சலும் வாய்வுத்தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது.
- இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்பு, மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.
ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.
எனவே ஏலக்காயைச் நாளாந்த உணவில் பயன்படுத்திப் பயன்பெறுவோம்.