பூண்டின் மருத்துவ மகத்துவம் (Medicinal garlic)
பூண்டு பெரும்பாலும் எல்லா சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. பூண்டு சமையலில் இன்றியமையாத பொருளாக உள்ளது. பூண்டு மருந்தாக(Medicinal garlic) உணவில் சேர்க்கப்படுகிறது. இதனால் இயல்பாகவே பல ஆரோக்கியகேடுகளில் இருந்து தப்புகிறோம்.இதனால் பூண்டு மகத்துவம் வாய்ந்த அன்றாடம் பாவிக்கும் உணவு பொருளாக சிறப்பு பெறுகிறது.
விற்றமின்கள் ஏ, பி1, பி2, பி6, பொட்டாசியம், தாமிரம், மெக்னீசியம், பொஸ்பரஸ், கல்சியம், இரும்பு,அயோடின், சல்ஃபர், குளோரின் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் பூண்டில் நிறைந்துள்ளன.
வெள்ளைப்பூடு, உள்ளி (Garlic) எனவும் சொல்லப்படும் பூண்டு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. பூண்டில் நிறைந்துள்ள மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா,போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். உடல் எடை குறைய விரும்புபவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டை மென்று சாப்பிட்டால் தொப்பை படிப்படியாக குறைவதோடு கணிசமாக உடல் எடையும் குறையும்.
அப்படி செய்ய முடியாதவர்கள் பூண்டு ஊறுகாய், உள்ளி பாண் , பூண்டு குழம்பு , பூண்டு சாதம் போன்று உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டின் மருத்துவ பயன்கள் (Medicinal garlic)
தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைந்தவர்கள், ஆண்மைக் குறைபாடு கொண்டவர்கள், பூண்டை சாப்பிட்டு வந்தால் இல்லற வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
சளி தொந்தரவு கொண்டவர்கள் பாலில் நான்கு பூண்டு பற்களைச் சேர்த்து குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும். காச நோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்த மருந்து.
புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.மேலும் புற்றுநோய் பாதிப்பால் ஏற்படக்கூடிய புண்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடும் போது அதனுடன் ஒரு பூண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புண்கள் விரைவாக ஆறும்.
வயிற்றில் இருக்கும் கழிவு மற்றும் பூச்சிகளை வெளியேற்ரம் செயலை பூண்டு புரிகிறது. .உடல் நலன் ஆரோக்கியமாக இருக்க இது உதவும்.
சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் சாப்பிட்டும் கட்டுக்குள் வராமல் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலின் இன்சுலின் சுரப்பு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
இரத்தத்தில் நச்சுக்கள் சேரும் போது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும்.
அவ்வாறானவர்கள் பூண்டை உணவில் சேர்த்து கொண்டால் இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
மேலும் பூண்டு ஜீரணக் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது. இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. நுண்ணுயிரிகள் வளர்ச்சியை தடுக்கிறது.
பல பூண்டுகளின் தண்டு, இலை, வேர், கிழங்கு முதலிய உறுப்புகள் ஊட்டச்சத்துகள் கொண்ட உணவாக அமைகின்றன.
அதே போல வேறு சில பூண்டுகளின் உறுப்புக்கள் உணவில் வாசனைப் பொருட்களாகப் பயன்படுகின்றன.
இதய அடைப்பை நீக்கும்.இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் , தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
தேமல் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கும் பொருளாகவும் பூண்டு உள்ளது.
வெள்ளை பூண்டையும் வெற்றிலையும் சேர்த்து அரைத்து தேமலின் மீது தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக தேமல் குறைந்து, மறைந்துவிடும்.
பாலூட்டும் தாய்மார்கள், பூண்டை பாலில் வேக வைத்து சாப்பிட அதிகமான பால் சுரக்கும்.