முருங்கை பற்றி முத்தான விடயங்கள் (Medicinal Murungai)

முருங்கையின் நற்குணங்களை (Medicinal Murungai) பற்றி சொல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு போகலாம். முருங்கையின் தலைபகுதி முதல் முருங்கையின் பட்டை வரை அனைத்தும் மருத்துவ பலன்கள் நிரம்பி உள்ளது. 

அந்த வகையில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது என்றால் அதனை யாரும் மறுக்க மாட்டார். நச்சுக்களை அகற்றும் உணவு வகைகளில் முருங்கை முதலிடத்தில் இருக்கின்றது.

முருங்கையின் பாகங்களது மருத்துவபயன்கள் (Medicinal Murungai)

முருங்கை இலை

முருங்கை இலையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறும்.முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளது. எனவே இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் ரத்தம் அதிகரிக்கும்.

மிளகு ரசம்  செய்யும் போது முருங்கை இலையை சேர்த்து  சமைக்கவும்.இதனால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.  தோல் வியாதிகளை தீர்க்கும் ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டு.

கர்ப்பிணி பெண்களுக்கு முருங்கை ஒரு வரப்பிரசாதம் ஆகும். முருங்கைக் கீரையை வேகவைத்து அதனுடைய சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு வெகுவாக குறையும்.

வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்த நிலை, அதிகப்படியான சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. இரத்த விருத்தி ஏற்படும்.இரத்தம் சுத்தமாகும்.

boon for pregnant women, Blood development,clean blood,overheating remedies,stronger the body. Nervous disorders,muringa

முருங்கைக்காய்

உடலுக்கு அதிகப்படியான வலிமையைக் கொடுக்கும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது இன்னும் சுவையையும் சத்தையும் தரும். வயிற்றுப் போக்கை குணப்படுத்துகிறது. தலைவலி, வயிற்றுப் புண், வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது. முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் .மேலும் மூல நோய்க்கு மிக சிறந்த மருந்தாகவும் . சளியைப் போக்கும் தன்மைகொண்டதாகவும் இருக்கிறது.

முருங்கைக்காய் பொரித்த குழம்பு அனைவருக்கும் பிடித்த உணவு ஆகும். தினமும் உணவில் முருங்கைகீரை வறை ,இலைக்கஞ்சி, ரொட்டிகளில் சேர்த்து கொள்ளலாம்.

boon for pregnant women, Blood development,clean blood,overheating remedies,stronger the body. Nervous disorders,annaimadi.com,medicinal murungai,muringa

முருக்கம் பட்டை

நரம்புக் கோளாறுக்கு முருங்கை பட்டை சிறந்த மருந்து. அதனை பொடியாக்கி உணவில் சேர்ந்து சாப்பிட்டு வர நரம்பு கோளாறுகள் படிப்படியாக குறையும். கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

முருங்கை பட்டையை நன்றாக பொடித்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து கட்டினால் வீக்கம் குறையும். சிறுநீரை தெளிய வைக்கும்.

boon for pregnant women, Blood development,clean blood,overheating remedies,stronger the body,annaimadi.com,Nervous disorders Check Price

முருங்கை விதை

முற்றிய முருங்கைக்காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து லேசாக நெய்யில் வதக்க வேண்டும்.அதை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், நரம்புகள் பலப்படும்.

உடல் சூடு குறையும் , ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும் ,உடல் வலுவடையும்.

boon for pregnant women, Blood development,clean blood,overheating remedies,stronger the body. Nervous disorders,annaimadi.com,medicinal murungai

முருக்கம் பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சம்மந்தமான அனைத்து நோய்களும் சரியாகும் .

இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும். முருங்கை பிஞ்சில் அதிக அளவு கல்சியம் சத்து உள்ளது.இது எலும்புகளுக்கு வலுவை அளிக்கின்றது .

எலும்பு மஞ்ஜைகளை வலுபடுத்துகிறது. பிஞ்சு முருங்கைக்காய் பிரசவித்த பெண்களுக்கு  சமைக்கும்  பத்தியகறிக்கு  பயன்படுத்தப்படும்.

முருங்கைப்பூ

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.முருங்கை பூவை பாலில் வேகவைத்து பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்கு போகும் முன் முருங்கைப்பூவை அவித்து குடித்தால் குழந்தை சுகமாக பிறக்கும்.தாய்க்கு பிரசவவேதனையும் குறைவாக இதுக்கும்.

boon for pregnant women, Blood development,clean blood,overheating remedies,stronger the body. Nervous disorders,annaimadi.com,medicinal murungai

முருக்கமிலை காம்பு

சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை  முருக்கமிலை காம்புடன்  சேர்த்து சூப் வைத்து குடிக்கவும்.

இந்த சூப்  நரம்புகளை வலிமையாக்கும். தலையில் கோர்த்துள்ள-நீரை வெளியேற்றும். வறட்டு இருமலையும் போக்கும்.  

இப்படி ஏராளமான மருத்துவ நன்மைகாலிக் கொண்ட முருங்கையை வெளிநாட்டவர் தேடித் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

நாமும் அலட்சியப் டுத்தாமல் அதிகம் உணவில் சேர்ப்போம்! நலமுடன் வாழ்வோம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *