மருத்துவ மஞ்சள் (Medicinal turmeric)
மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக (Medicinal turmeric) சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும். காயங்களை ஆற்றும் (Best Pain killer).
அழகு, ஆரோக்கியம், ஆன்மீகம் என மூன்றிற்கும் மிகுந்த பயனை வழங்குகின்றது இந்த மூலிகை மஞ்சள்.
இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.
மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி (excellent disinfectant) எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.
மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை (Medicinal turmeric) உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.
மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது, எலும்புகள் உறுதியாகும்.
மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் வேதிப்பொருள்
மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன் மஞ்சள் நிறத்துக்குக் காரணமாக உள்ளது. இதில் உள்ள ‘கர்க்குமின்’ (Curcumin) என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கவும், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கவும், பாக்டீரியாக்களின் தாக்குதலை முறியடிக்கவும் உதவுகிறது.
கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம். கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது. விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும். கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.

மஞ்சளில் வீட்டு வைத்தியம் (Medicinal turmeric)
- மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்சனை இருக்காது. வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும்இதற்கு, மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கி வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்
- அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் வியர்க்குரு நீங்கும்.
- மஞ்சள்தூளை நீரில் போட்டுக் காய்ச்சி,அந்த நீரால் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்சனையும் சரியாகும்.
- பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்வது நல்லது. கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது. பத்தியக்கறிக்கு அதிக மஞ்சள் சேர்த்து சமைப்பது இதனால் தான்.
- குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி – கடுப்பு ஏற்படும். மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.வலி குறையும்.
- தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.
- சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.
- சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.
- மஞ்சளை அரைத்து கரப்பான், சொரி, சிரங்கால் ஏற்படும் தோல் நிறமாற்றத்திற்கு மேல்பூச்சாக பூச நிவாரணம் கிடைக்கும்.
- மஞ்சளை விழுதாக அரைத்து, சுடவைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.
medicinal turmeric,annaimadi.com,curcumin,best painkiller,increase immunity,excellent disinfectant