சுக்கு மருத்துவ பயன்கள் (Medicinal value of Dried ginger)

சுக்கை மிஞ்சிய வைத்தியமுமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய சாமியுமில்லை.

என்பது பழமொழி.

இதிலிருந்து சுக்கு எவ்வளவு மருத்துவ குணங்களை (Medicinal value of Dried ginger) கொண்டுள்ளது விளங்கி கொள்ள முடியும்.

சுக்கு கார்ப்பு சுவை உடையதோடு, உஷ்ண வீர்யம் கொண்டது. இருமலை மாற்றும், கபத்தைக் குறைக்கும், பசியை உண்டாக்கும், ஆண்மையை உண்டாக்கும், தாய்ப்பாலைச் சுரக்கச் செய்யும்.

சுக்கை வெல்லத்துடன் சாப்பிட விக்கல் நிற்கும்.சுக்குக் கஷாயம் இருமலைப் போக்கும், பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குறைக்கும்.
 
குழந்தைகளுக்குச் சுக்கு ஒரு சிறந்த மருந்து.
 
பிரசவ மருந்தாகவும் சுக்கு பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் குமட்டலைப் போக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
 
இஞ்சியைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும். அதன் மேல் தோல் நஞ்சாகும். அதேபோல் சுக்கைச் சுத்தம் செய்யும்போது, அதன் மேல் சுண்ணாம்பைத் தடவிக் காயவைத்து நெருப்பில் சுட்டு, பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும். இது மிக முக்கியமானது.
 
பல் வலிக்கு  சுக்குத் துண்டு ஒன்றை வாயிலிட்டு கடித்து மென்றுவரப் பல்வலி, ஈறுவலி குறையும்
கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. 

Medicinal value of dried ginger,annaimadi.com,medicinal benefits og dried ginger,sukku,verkompu,health benefits og dried ginger,dried ginger benefits

சுக்கின் மருத்துவப் பயன்கள் (Medicinal value of Dried ginger)

உடலுக்கு சுறுசுறுப்பை தரும்

சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

மது போதையை தெளிய வைக்கும்

சுக்குடன், தனியா வைத்து சேர்த்து அதில் சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து சாப்பிட்டால், அதிக மது அருந்தியதால் ஏற்பட்ட போதை தெளிந்து இயல்பு நிலை உண்டாகும்.

வாந்தி குமட்டலை விரட்டும்

சுக்குடன், சிறிது துளசி இலையை சேர்த்து மென்று தின்றால், தொடர்ந்து ஏற்படும் வாந்தி, குமட்டல் நிற்கும். சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு குணமாகும். குரல் இயல்பு நிலைபெறும்.

மலச்சிக்கலை குணமாக்கும்

சிறிது சுக்கு எடுத்து அதை சின்ன வெங்காயத்துடன் வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் தேங்கியுள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். இதனால் மலசிக்கல் தீரும். மேலும் சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

விஷக்கடிகளை குணமாக்கும்

தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் கொஞ்சம் சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் விஷம் முறியும்.

தலைவலி மற்றும் இருமலை போக்கும்

சுக்கை வெல்லத்துடன் சாப்பிட்டால் விக்கல் நிற்கும். சுக்கை கஷாயம் போல செய்து பருகினால் இருமலைப் போக்கும், மேலும் பசியை அதிகரிக்கச் செய்யும். சுக்கு சேர்த்துக் காய்ச்சப்பட்ட பால், தலைவலியைக் குணமாக்கும்.

மசக்கை குமட்டலை குணபடுத்தும்

சுக்கு பிரசவ மருந்தாக (Medicinal value of Dried ginger) பயன்படும். மசக்கை நேரத்தில் இஞ்சியும், சுக்கும் சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் போன்றவற்றை போக்கும். இரண்டு ஸ்பூன் சுக்குப் பொடியை அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி, மூன்று வேளை ஆறு ஸ்பூன் அளவுக்குக் குடித்தால் வயிற்றுவலி, பொருமல், பேதி, குமட்டல் நீங்கும்.

Medicinal value of dried ginger,annaimadi.com,medicinal benefits og dried ginger,sukku,verkompu,health benefits og dried ginger,dried ginger benefits

Check Price

வீட்டு வைத்தியத்தில் சுக்கு (Medicinal value of Dried ginger)

 •  சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
 • சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
 • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
 • சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
 • சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
 • சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
 • சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
 • சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய
 • சுக்குடன் சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அலர்ஜி குணமாகும்.
 • சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
 • சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி,குமட்டல்,  நிற்கும்.
 • சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலையை அடையும்.சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.
 • சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.
 • சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
 • தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்
 • சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
 • சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய் துர்நாற்றம் விலகும்.
 • சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *