முலாம்பழ ஜூஸ் செய்யும் முறை (Melon juice)
உடல் உஷ்ணம் தணிக்கும் சுவையான ஜூஸ் (Melon juice)
முலாம்பழ ஜூஸ் (Melon juice) அழகான நிறத்தில் !
முலாம்பழம் நல்ல மணம், சுவை உடையது மட்டுமல்லாமல் மிகுந்த சத்துக்களையும் கொண்டுள்ளது.
நோய்களை தடுக்க கூடியது மட்டுமின்றி உடலுக்கு புத்துணர்வை அளிக்கவல்லது.
இதை கொண்டு நீர்வேட்கையை தணிக்கும் குளிர் பானம் தயாரிப்பது எப்படி என பார்ப்போம்..
பார்த்தவுடன் எடுத்து பருகத் தோன்றும் பழச்சாறு !
உடல் உஷ்ணம் தணிய,சிறந்த பழச்சாறு!
முலாம்பழத்தில் குறைந்தளவு சோடியம்,நிறைவுற்ற கொழுப்பு,நார்ச்சத்து,விற்றமின் கே,பொட்டாசியம்,செம்பு
ஆகியவற்றின்நல்ல மூலமாகவும்,விற்றமின் சி,விற்றமின் பி 6 ஆகியவற்றின் மிகச் சிறந்த மூலமாகவும் இருக்கின்றது.
முலாம்பழம் மஞ்சள், சிவப்பு, வெள்ளை என பல நிறங்களில் காணப்படுகிறது.
இது எளிதாக செரிமானமடையும் தன்மை கொண்டது. எனவே எப்பொழுது வேண்டுமானாலும் இதனை சாப்பிடலாம்.
முலாம்பழத்தை ஜூஸ் (Melon juice) பயன்கள்
- கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குறைந்து கண் குளிர்ச்சி பெறும்.
- கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும்.
- இந்த பழச்சாறு தாகம் தீர்த்து தொண்டை வலியை குணப்படுத்தும்.
- சிறுநீரகக் கோளாறுகள், நீர்க் கடுப்பு போன்றவை குறையும்.

இது வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது.மிகுந்த சத்தூட்டமான உணவாகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த பழம். இதனால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.
