ஆண்களை அனுமதிக்காத கோவில்கள் ( men are not allowed)
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது நாம் அறிந்த ஒன்றே.ஆனாலும் அங்கே சிறுமிகள் மற்றும் வயது முதிர்ந்த பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால் ஆண்களைக் குறிப்பாகக் கல்யாணமான ஆண்களை அனுமதிக்காத கோவில்களை (men are not allowed)) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படிப்பட்ட இந்தியாவில் உள்ள எட்டு கோவில்களைப் பற்றி அறிந்து கொள்ளுவோம்.
ஆண்களை அனுமதிக்காத எட்டு கோவில்கள்
- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
- காமக்கியா தேவி கோவில்
- சக்குளத்துக்காவு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
- பிரம்மர் கோவில், புஷ்கர் – ராஜஸ்தான்
- கன்னியாகுமரி, துர்கா மாதா கோவில்
- துர்கா மாதா கோவில், முசாரபூர், பிகார்
- திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா
- சந்தோஷி மாதா கோவில்கள்
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு காரணங்கள் உள்ளது. அதிலும் சில கோவில்களில் பெண் சாமியார்களே குறிப்பிட்ட நாட்களுக்கு பணியாற்றுகின்றனர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்
இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இங்கு பெண் கடவுளான பார்வதி அம்மனை வழிபடுகின்றனர். ஆற்றுக்கால் பொங்கல் பண்டிகையானது பத்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறுகிறது.

தேவி அம்மனின் சிலை வளையல்களால் அலங்கரிக்கப்படும். விழாவின் ஒன்பதாம் நாள் ஆனது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குருதி தர்ப்பணம் என்னும் சடங்கு நடடைபெறுகிறது. பத்தாம் நாள் இரவு முடிவு பெறுகிறது. பெண்கள் மட்டுமே இவ்விழாக்களில் கலந்து கொள்ள முடியும்.
காமக்கியா தேவி கோவில்
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் கௌகாத்தி நகரில் `நீல் பர்வதம்’ என்னும் மலைமீது அமைந்திருக்கிறது காமாக்யா கோயில்.
இங்கே இடது மற்றும் வலது கை பிரார்த்தனை வழக்கம் உள்ளது.
இங்கு காணிக்கையாகப் பூக்கள் மட்டுமன்றி சில பலிகளும் இடம்பெறுகிறது.
புராணக்கதையில் தட்சன் தன் மகளான தாட்சாயினிக்கும் தன் மருமகன் சிவபெருமானுக்கும் முறையான அழைப்பு விடுக்காமல் பெரும் யாகம் செய்கிறான்.நியாயம் கேட்பதற்காகச் சென்ற தாட்சாயினியை அவமரியாதை செய்துவிடுகிறான்.
இதனால் கோபம் கொண்ட தாட்சாயினி, யாகம் நிறைவடையாமல் அழியுமாறு சபிக்கிறாள்.பிறகு அதே யாகத் தீயில் விழுந்துவிடுகிறாள்.
மனைவியின் உடலைத் தன் தோளில் போட்டுக்கொண்டு சிவபெருமான் ஊழித்தாண்டவம் ஆடுகிறார்.தாட்சாயினியின் உடல் சிவபெருமானின் தோளில் இருக்கும்வரை அவரது ஊழித்தாண்டவம் நிற்காது என்பதை அறிந்த விஷ்ணு, தனது சக்ராயுதத்தை ஏவி தாட்சாயினியின் உடலைத் துண்டாக்குகிறார்.
அந்த உடல் 51 துண்டுகளாகச் சிதறி பூமியில் விழுகிறது. சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களே ‘சக்தி பீடங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

51 சக்தி பீடங்களில் முதன்மையானது ‘மகா காமாக்யா’ தேவி கோயில்.இந்தக் கோவிலில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே ஆண்களை அனுமதிப்பது கிடையாது.
அதாவது தேவியின் மாதவிடாய் காலங்களில் ஆண்களை அனுமதிப்பது கிடையாது. அந்த நேரங்களில் ஆண் பூசாரி மற்றும் சாமியார்களையும் அனுமதிப்பது கிடையாது.
தேவியின் அங்கம் விழுந்ததும், மலை நீல நிறமாக மாறியதாம். அதனால்தான் இந்த மலையை, `நீல் பர்வதம்’ என்றும் `நீலாச்சல்’ என்றும் அழைக்கிறார்கள்.தரையிலிருந்து 700 அடி உயரத்தில் மகா காமாக்யாதேவியின் கோயில் வனங்கள் சூழக் காணப்படுகிறது.
இந்தத் திருத்தலத்தில் சக்தி தேவிக்கு உருவம் கிடையாது. தேவியின் யோனியே சக்தியின் வடிவமாக வணங்கப்படுகிறது.
இங்கு தேவிக்கு தினமும் ஓர் ஆட்டை பலி கொடுத்து அதன் தலையைக் கருவறையில் வைத்த பிறகுதான் தினசரி நித்ய பூஜையைத் தொடங்குகிறார்கள்.
வருடத்தில் மகாநவமி அன்று எருமையைப் பலியிடுகிறார்கள்.பலியிடப்படும் விலங்குகளின் கறியைத்தான் பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
கோயிலின் கருவறை இயற்கையாக அமைந்த மலையின் குகைக்குள் இருக்கிறது. நீலாச்சல் மலையின் சிறிய ஊற்றில் நீர் வழிந்து ஓடியபடி இருக்கிறது. அந்த ஊற்றில் நீருக்குள் மூழ்கியபடி தேவியின் யோனி பாகம் இருக்கிறது.
108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை தேவிக்கு பிரத்யேகமாகச் சூட்டி வணங்கி வேண்டிக்கொள்கிறார்கள்.
தேவியை வேண்டினால், மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.கல்யாண வரம் வேண்டுவோரும் சக்திதேவியின் பீடத்தை வேண்டி வரம் பெறுகிறார்கள்.
தாந்திரீகர்களுக்கு முக்கியமான திருக்கோயில் இது. அவர்கள் பயிற்சியில் முதல் நாளையும் நிறைவு நாளையும் இங்குதான் மேற்கொள்கிறார்கள். அந்த அளவுக்குச் சக்தி மிகுந்த கோயில் இது.
சக்குளத்துகாவு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில்
சக்குளத்துக்காவு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் கேரளாவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெண் தெய்வமான ஸ்ரீ பகவதி அம்மனை வழிபடுகின்றனர். இக்கோவிலில் நாரி பூஜை என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு அம்சமாகும். இப்பூஜையில் பெண்கள் மட்டுமே (men are not allowed) கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் 10 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த விரதமானது டிசம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமாகிறது.அன்றிலிருந்து பத்து நாட்கள் விரதமிருந்து நாரி பூஜையில் கலந்து கொள்கின்றனர். இந்த பூஜையானது துர்க்காதேவிக்குச் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.

இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் பொங்கல் பண்டிகை. இது விருச்சிகம் எனப்படும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும். இந்தப் பண்டிகையின் போது லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
ஒரு சில சமயம் பண்டிகைக்கு வரும் கூட்டமானது கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் வரை நீளம் உடையதாக இருந்துள்ளது. அரிசி, தேங்காய் போன்றவற்றைப் பெண்கள் பானையில் வைத்து எடுத்து வந்து இங்கே சமையல் செய்து பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இதில் உள்ள முதன்மை பூசாரி ஆனவர் அடுப்பைப் பற்ற வைக்கிறார் பின்பு ஒன்றன்பின் ஒன்றாகப் பற்றவைத்து பண்டிகையைச் சிறப்பிக்கின்றனர். இந்த கோவிலில் இன்னொரு அம்சமானது பதுரெண்டு நோன்பு, இந்த விரதமானது 12 நாட்கள் விரதமிருந்து வழிபடுவார்கள். இது சக்குளத்து அம்மனின் ஆசியைப் பெற வேண்டி பெண்கள் நடத்தும் சிறப்புப் பூஜை ஆகும்.
பிரம்மர் கோவில், புஷ்கர் – ராஜஸ்தான்
ஜெக பிதா பிரம்மா மந்திர் எனப்படுவது ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் எனப்படும் இடத்தில் அமைந்துள்ளது. இது புனித புஷ்கர் நதிக்கு அருகே அமைந்துள்ளது.இது பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

புராணங்களில் உள்ளவை என்னவென்றால் பிரம்மா தன்னுடைய மனைவி பெண் கடவுள் சரஸ்வதி அவர்களோடு, புஷ்கர் நதியின் அருகே யாகம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் சரஸ்வதி அம்மன் வரத் தாமதமாகிய நிலையில் பிரம்மா காயத்ரி அம்மனின் துணையோடு யாகத்தை நடத்தி உள்ளார்.இதனால் கோபமடைந்த சரஸ்வதி அம்மன், கருவறைக்குள் ஆண்கள் யாரும் நுழையக் கூடாது மீறி நுழைந்தால் அவர்களின் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்படும் என்று சாபம் விட்டார்கள். என்று புராணங்களில் கூறப்படுகிறது.
இதனால் இந்த கோவிலில் திருமணமான ஆண்களை அனுமதிப்பதில்லை (men are not allowed).
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
சிவன் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருக்கும் போது அவருக்காகப் பகவதி துர்க்கை அம்மன், தியானம் செய்துகொண்டிருந்தார். பானாசுரன் என்னும் அரக்கனைக் கொல்வதற்கு ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே முடியும் என்பதால் சிவனுக்கும் துர்க்கை அம்மனுக்கும் நடக்கவிருந்த திருமணத்தை நாரதர் அவர்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

புராணங்களின்படி அம்மனின் முதுகெலும்பு இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது அந்த இடத்தையே நாம் கோவிலாக வழிபட்டு வருகின்றோம். மேலும் இந்த அம்மனுக்குச் சன்னியாசி அம்மன் என்றும் மற்றொரு பெயர் இருக்கிறது. இங்கே திருமணம் ஆகாத ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை (men are not allowed).
துர்கா மாதா கோவில், முசாரபூர், பிகார்
இக்கோயிலானது பீகார் மாநிலத்திலுள்ள அழகிய கிராமமான முசாபர்பூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இங்கு வருடத்தில் சில நாட்கள் ஆண்கள் , ஆண் சாமியார் மற்றும் கோவில் பூசாரிகள் வருவதை முற்றிலும் தடுக்கின்றனர்.பெண்கள் மட்டுமே அந்த நாட்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு மேலும் பிரம்மா ஸ்தலம், ஹனுமான் மந்திர், சிவா மந்திர் போன்ற மற்ற கோவில்களும் உள்ளன.

திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா
திரிம்பகேஸ்வரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோவிலாகும்.இது மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் திரும்பக் எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோவில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் ஆகும்.
இது 12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்றாகும்.
இந்த ஜோதிர்லிங்கத்தின் அற்புதமான தோற்றம் என்னவென்றால் பிரம்மா விஷ்ணு மற்றும் ருத்திரர் ஆகியோரின் மூன்று முகங்கள் அமைந்துள்ளன.
இங்கு ஒவ்வொரு திங்கள் கிழமையும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தங்கம் வெள்ளி போன்ற அதிக விலை மதிப்புள்ள கிரீடம் ஆனது அணியப்படுகிறது. இது பாண்டவர் காலத்தில் இருந்து உள்ளது என்று கூறுகிறார்கள்.

சந்தோஷி மாதா கோவில்கள்
சந்தோஷிமாதா எனப்படும் கடவுள், விரதத்திற்கு மிகவும் பேர் பெற்ற கடவுள்.விரதத்தில் புளிப்பான பழங்கள் மற்றும் ஊறுகாய் தவிர்த்து விரதம் அனுட்டிக்க பட வேண்டும்.தொடர்ந்து 16 வெள்ளிக்கிழமைகள் இந்த விரதத்தைக் கன்னிப்பெண்கள் இருந்து வந்தால் தாங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
விரதம் முடிந்த பிறகு நினைத்த காரியம் நிறைவேறினால், எட்டு ஆண்பிள்ளைகளை வைத்து விருந்து பரிமாற வேண்டும்.
மேலும் பிறரைக் காயப்படுத்துதல், புறம் பேசுதல் போன்றவற்றைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
இந்த விரதத்தில் கலந்துகொள்பவர்கள் நல்ல குண நலன்களைப் பெற்று வாழ்வதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.அன்பு ,ஆன்மீகம் ,மற்றும் மகிழ்ச்சியைச் சந்தோஷி மாதா தருவதாக பலரும் நம்புகின்றனர்.

இங்கு ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை.மேலும் விரதமிருந்து அதில் வளம் பெற்றவர் ,அக்கோவிலின் சிறப்புகளைப் பற்றிக் கூறியுள்ளனர்.இது வட இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவிலாகும்.