மாதவிடாய் நிற்கும் பருவத்தை எப்படி எதிர்கொள்வது (Menopausal period)

மாதவிடாய் நிற்கும்  பருவம் (Menopausal period) என்பது இயற்கையான உடலியல் மாற்றம். இது பெண்களுக்கு 50 முதல் 55 வயதில் ஏற்படலாம். இப்போது மெனோபாஸ் (Menopausal period) 40 வயது முதல் 45 வயதினருக்கும் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, மாதவிடாய் சுழற்சி முறையற்றதாகி, கிட்டத்தட்ட ஐம்பது வயதில் முற்றாக நின்று விடுவதையே  மெனோபாஸ் (Menopausal period) என்கின்றோம்.

அதன் பிறகு, பெண் கருத்தரிக்க முடியாது என்பதே இதன் பொருள்.கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குறைந்துவிடுவதால் ,மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது.

பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும். ஆனால் பலருக்கு அதற்கு முன்பும் ஏற்படலாம். மெனோபாஸ் ஏற்படுவதற்கு சில காலங்களுக்கு முன்பிருந்தே மாதவிடாய் சுழற்சி மாறிப்போகலாம். உதிரப்போக்கு குறையலாம். சில நேரங்களில் சில மாதங்கள் வரை மாதவிடாய் வராமலும் இருக்கலாம்.

மெனோபாஸ் வயது என்பது 50 தான். அந்த வயதுக்குப் பிறகும் மாதவிடாய் வருகிறது என்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலில் இன்னும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம்.

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்(Menopausal period)’ என்று தான் மேலோட்டமாகத் தெரியும்.

அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது…. ஏன் மாதவிடாய் நிற்கிறது… அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை.

Menopausal period,annaimadi.comwhat is Menopause,whar happens in Menopausal period,symtoms for Menopausep,annaimadi.comwhat is Menopause,what happens in Menopausal period, How to deal with the menopausal period

அதே போல மெனோபாஸ் (Menopause) என்றால் நோய்கள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த தேவையற்ற பயம்.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். அவ்வளவு தான்.

மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை எதிர்கொள்ளும் வழிகள் (Menopausal period)

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை மெனோபாஸ் (அதாவது மாதவிடாய் நிற்பது) என்பது ஓர் இயற்கைச் சுழற்சி. இது உயிரியல் ரீதியாக இயல்பாக, முதுமையின் அறிகுறியாகவும் பிள்ளைப்பேறு குறைவதால் பெண்களுக்கு ஏற்படும் மாற்றம்.

இந்தக் காலகட்டத்தில் பெண்கள் உடல் மீது கூடுதல் கவனம் செலுத்தி, பின்னாளில் நலமாக வாழ அடித்தளம் அமைப்பதாக இருக்கிறது.

பெண்களின் உடலியல் செயல்பாடுகளை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம்.

1. குழந்தைப் பருவம்,

2. நடு வயது – இளம் பருவம்,

3. முதுமைப் பருவம்.

ஆயுர்வேதப் புரிதல்படி குழந்தைப் பருவத்தில் கபம் அதிகமாக ஏற்படும். நடு வயதுப் பருவத்தில் பித்தம் அதிகரிக்கும். முதுமைக் காலத்தில் வாயு எனப்படும் வாதம் ஏற்படும். மாதவிடாய் நிற்பது என்பது இளம் பருவநிலை மாறி முதுமைக்குச் செல்வதைக் குறிக்கிறது, அதாவது பித்த நிலையிலிருந்து வாத நிலைக்கு மாறுவதாகும்.

பெரும்பாலான அறிகுறிகள் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கலந்ததால் ஏற்படும் தடுமாற்றச் சூழலாக இருக்கும். இதனால் பெண்களின் உடலியலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் உடல் ஹார்மோன்கள் பித்தம், கபம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுவதால், இந்தச் சூழலில் பெண்கள் உடல் அதிக வெப்பமாவதை உணர்வார்கள். உடல் எடையும் அதிகரிக்கலாம். நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்றவை வாதத்தின் நிலை தடுமாற்றத்தால் தோன்றுவதாகும்.

மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள்

ஒவ்வொரு பெண்ணுக்கும் மெனோபாஸ் அறிகுறிகள் தோன்றும், அதேநேரம் ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு வகையில் இருக்கும்.இது பெண்களின் உடல் வாகுக்கு ஏற்றவாறு, உடலில் உள்ள தோஷங்களுக்கு ஏற்ப அமையும்.

பொதுவாக உடல் அதிக வெப்பமடைவது, இரவில் அதிகம் வியர்ப்பது, அதிக உதிரப் போக்கு, செயல்பாடுகளில் தடுமாற்றம், பிறப்புறுப்பில் வறட்டுத்தன்மை ஏற்படுவது, தூக்கமின்மை, எரிச்சல், உளைச்சல், எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி, இதயப் படபடப்பு, சோர்வு, மலச்சிக்கல், சிலருக்குச் சிறுநீர் போக்கில் முறையற்ற தன்மை ஆகியவை உண்டாகலாம்.

Menopausal period,annaimadi.comwhat is Menopause,whar happens in Menopausal period,symtoms for Menopausep,annaimadi.comwhat is Menopause,what happens in Menopausal period, How to deal with the menopausal period

மருத்துவ உதவி தேவையா

மெனோபாஸ் இயற்கையான உடலியல் மாற்றம் தான். எனினும், அது நிகழும்போது உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், தொடர்ந்து தூக்கமின்மை, மூளைச் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஆகியவை ஏற்படும்.

இவற்றுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பின்னாளில் பல நோய்கள் உருவாகலாம்.

இத்தகைய அறிகுறிகள் உடல் தசைகளுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், எலும்பு, தசை, கொழுப்பு, உடலுறுப்பு, தோல் மற்றும் ரத்தம் உறைவது உள்ளிட்டவற்றில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பது உண்மை.

ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக உடலில் கழிவுப் பொருள் தங்கினால், அது ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் வெப்பம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ரத்த நாளங்களை இப்படி விரிவடையச் செய்வதால் வெப்பம் உருவாகும். இதனால் தசையும் விரிவடையும்.

மெனோபாஸ் சமயத்தில் ஆயுர்வேதச் சிகிச்சை முறையை மேற்கொள்வது என்பது, உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகப்படுத்தி உடலே அதைக் குணப்படுத்தும் அளவுக்குத் தயார்படுத்துவதாகும்.

இதன் மூலம் மெனோபாஸ் காலச் சுழற்சிக்குப் பிறகு உடலில் உள்ள ஹார்மோன்கள் பழையபடி இயங்க வழிசெய்கிறது.

உணவு கட்டுப்பாடு

ஹார்மோன்களைச்(Harmone) சீராக வைத்திருக்க உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். காய்கறிகள், பழங்கள், பால், நெய், சோயா பால், கீரை, கொண்டைக்கடலை உள்ளிட்டவற்றை உட்கொள்ளலாம்.

சூடான உணவு, பானங்கள், நேரத்துக்குச் சாப்பிடுவது மற்றும் வெந்தயம் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்ப்பது போன்றவையும் சிறந்தவையே. காபி குடிப்பது, சர்க்கரை, குளிர்பானங்கள், சாலட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.

என்னென்ன அசௌகரியங்கள் ஏற்படும்?

அதிக வியர்வை

ஏ.ஸி.யில் இருக்கும் போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்.

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப்படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

அடிக்கடி மாறும் மனநிலை (Mood swings)

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம்.

மெனோபாஸ் காலம் என்பது பித்தக் காலச் சுழற்சியிலிருந்து வாதக் காலத்துக்கு மாறுவதாகும்.இந்தச் சுழற்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பெண்ணின் உடலில் பித்தமும் வாயுவும் இருந்தால், மெனோபாஸ் சமயத்தில் அவை அதிகரிக்கும்.ஹார்மோன், இயற்கையான உடலியல் மாற்றங்கள் ஏற்படுவதால் இப்படி நிகழ்கிறது.

மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் தடுமாற்றம் செரிமானத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக உடலில் ஊட்டச்சத்து சேர்வது தடைபடும்.மேலும் இந்தச் செல்கள் உடலில் இருந்து கழிவுப் பொருள்களை வெளியேற்றுபவை.

இவை அனைத்தும் மெனோபாஸ் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும்.மூன்றாவது முக்கியமான விஷயம் மூளையைத் தவறாக வழிநடத்துவது, கோபம், எரிச்சல் போன்றவற்றை அதிகரிக்கச் செய்வது போன்ற செயல்கள் தூண்டப்படும்.

Check price

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள்

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ (postmenopausal astriyo process) என்று பெயர்.

மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான வீதிகளில் வாகனங்களில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து போகும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கல்சியம் நிறைந்த உணவுகளையும் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது.

மெனோபாசுக்குப் (Menopausal period) பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்

50-களிலும் மாதவிடாய் இருந்தால் கண்டிப்பாக கருப்பை ஸ்கேன் மெமோகிராம் பாப்ஸ்மியர் ஆகிய பரிசோதனைகளைச்  செய்துகொள்ளவேணடும் 50 வயதுக்கு பிறகும் மாதவிடாய் வந்தால் அதை நிறுத்தவேண்டும் என்கிற விதிகள் எதுவும் கிடையாது. அதனால்  கை வைத்தியம் போன்ற வேறு ஏதேனும் முயற்சிகளை செய்யாமலிருப்பதும் நல்லது.
மாதவிடாய் நேரத்தில் உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி மயக்கம் போன்ற தொல்லைகள் வருவது இயல்பானது. இது மாதவிடாய்க்கு முந்தைய நிலைமையான பெரி மெனோமாஸ் நேரத்திலும் வரும்.
 
ஒரு சிலருக்கு மாதவிடாய் நேரத்தில் தலைவலி வரும் அந்த நேரத்தில் மாத்திரை எடுப்பது தப்பில்லை, அதே நேரம் எல்லா மாதமும் இப்படி  தலைவலி வருவது தான் தவறு.
இவ்வாறு தொடர்வது ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற வேறு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என  பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
 
தாய்க்கு மெனோபாஸ் சீக்கிரம் வந்தால், மகளுக்கு சீக்கிரம் வந்துவிடும் என்பதெல்லாம் மருத்துவரீதியாக உண்மை கிடையாது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட பெண்களின் உடல்நிலையைப் பொறுத்ததுதானே தவிர, மரபியல் சார்ந்தது கிடையாது.
 
இந்தக் காலத்தில் காலதாமதமான திருமணம் காரணமாக, நாற்பதுகளில் மட்டுமல்ல, ஐம்பதுகளிலும் பெண்கள் இளமையாகவே  உணர்கிறார்கள்.
அது அவர்களுடைய நடை, உடை, பாவனை என அத்தனை விஷயங்களிலும் பிரதிபலிப்பதை பார்த்தும்  வருகிறோம்.
இது வெளிப்படையாகத் தெரிகிற விஷயம். இதில் மறைமுகமானது அவர்களது இளமையான மனநிலை.
இதன் காரணமாக, சில பெண்களுடைய மெனோபாஸ் வயது தள்ளிப்போக ஆரம்பித்திருக்கிறது.

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும்.

ஆனால் சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும் கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *