மாதவிலக்கு பிரச்சனைகள் தீர இயற்கை வைத்தியங்கள்(Menstrual Problems)
மாதவிலக்கு பிரச்சனை (Menstrual Problems) பெண்களை பாடாய் படுத்தும் பிரச்சனைகளில் ஒன்று. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்சனைகளால் பெண்கள் பலர் அவதிப்படுகிறார்கள்.
கருப்பை அல்லது ஹார்மோனில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியமான ஒன்று.
ஒரு காலத்தில் மாதவிலக்கு (Menstrual Problems) நேரத்தில் நல்ல ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. அனால் இப்போது அப்படி இல்லை.
இயந்திர வாழ்க்கை முறையில் பெண்களுக்கு நல்ல ஓய்வு என்பது கிடையவே கிடையாது. மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு (Menstrual Problems) இயற்கை முறையில் தீர்வு காணலாம்.
மாதவிலக்கு தொல்லைகள் போக்கும் இயற்கை வைத்தியங்கள்(Natural Remedies for Menstrual Problems)
அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேத்து சாறெடுத்து தினமும் குடித்தால் குருதிப் போக்கு நின்று மாதவிடாய் (Menstrual Problems) சுழற்சி சீராகும்.
பட்டையின் சாறு பெரும்பாடு நீங்க தரலாம். வீட்டுக்கு விலக்கான மூன்றாம் நாளுக்கு மேலும் தொடரும் குருதிப்போக்கு நிற்கும்.
பட்டை-105கிராம், பசுவின் பால்2 ஆழாக்கு (336மிலி), நீர் 8 ஆழாக்கு (1344 மிலி) கலந்து 1/5ல் பாகமாக சுருக்கி, நாள் ஒன்றுக்கு 2-3 முறை குடித்துவர பெரும்பாடு தீரும்.
அசோக மரத்தின் பூவை பொடித்து நீருடன் கலந்து கொடுக்க குருதிக்கழிச்சல் (Menstrual Problems) குருதியும் சீழும் கலந்த கழிச்சல் நிற்கும்.
100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.
புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு (Menstrual Problems) காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.
20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் (Menstrual Problems) மறையும்.
சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.
சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.
மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.
கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும்.
உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.
மாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு.
மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.
வல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து கொள்ள வேண்டும்.
இதில் ஒரு தேக்கரண்டி, சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.