ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க (Migraines)
தலைவலிகளில் மிகப்பெரிய தொல்லையாக இருப்பது,`மைக்ரேன்’ (Migraines) எனப்படும் ஒற்றைத் தலைவலி ஆகும். தாங்க முடியாதா அளவிற்கு வலி பயங்கரமானதாக இருக்கும் என்கிறார்கள்.
காலையிலிருந்து ஒரே தலைவலி, வேலையே செய்ய முடியலை’, `தலையே வெடிச்சிடும்போலருக்கு… அப்படி ஒரு தலைவலிப்பா’… என்றெல்லாம் புலம்புபவர்களை நாம் பார்த்திருப்போம்.
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்
என்பார்கள்.
இது நரம்பியல் கோளாறால் ஏற்படுவது. பெரும்பாலானவர்களுக்கு ஒரு பக்கம் மட்டுமே இந்த வலி இருக்கும். ஆனால், சிலருக்குத் தலையின் இரண்டு பக்கமும் வலி இருக்கும்.
காலையில் எழுந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, பிறகு நேரம் ஆக ஆக.. அப்படியே விண் விண் என தெறிக்கும். அதேநேரம் யார் எது பேசினாலும் பயங்கரமாக கோபம் ஏற்படும்.
பொதுவாக, பருவமடையும் வயதில் தொடங்கும் இந்த மைக்ரேன் தலைவலி 35 வயதிலிருந்து 45 வயதுக்குள் இருப்பவர்களைத் தான் அதிகம் பாதிக்கும். ஆண்களைவிட பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது.
சாதாரண தலைவலியைப்போல இல்லாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வரும். ஒற்றைத் தலைவலி வர முக்கியக் காரணமாக இருப்பது சி.ஜி.ஆர்.பி (CGRP- Calcitonin Gene Related Peptide) எனும் ஒரு புரதக்கூறு.
இந்த புரதக்கூற்றை முடக்குவதற்கான மருந்தைப் பல ஆய்வுகளுக்குப் பின்னர் கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆனால் அதை எல்லோரும் வாங்குமளவிற்கு சாதாரண விலையில் இன்னும் சந்தைக்கு வரவில்லை.
அதைபற்றி நமக்கென்ன கவலை. நம்மிடட்ம் தான் இயற்கை அன்னை கொட்டி தந்திருக்கும் ஏராளமான இயற்கை மருந்துகள் இருக்கின்றனவே.
முடிந்தவரை காபி, சாக்லேட் போன்றவற்றையும் மன அழுத்தத்தையும் தவிர்த்துவிட்டாலே, இந்த தலைவலித் தொல்லையையும் தவிர்த்துவிடலாம்.
ஒற்றைத் தலைவலி ஏந ஏற்படுகிறது?(Migraines)
இதற்கு குறிப்பிட்ட பல காரணங்கள் இருந்தாலும் ,முதன்மையானது அதிக மன அழுத்தம் தான். தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது வருவது சாதாரணம்.
அதிகமான மன குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுவது சாதாரணம். இந்த மனக்கவலைகள்,,குழப்பங்கள் மன அழுத்தமாகும் போது ஒற்றைத்தலைவலி ஏற்படக் காரணம் ஆகின்றது.
உடலில் வெப்பம் அதிகருக்கும் போது கண்டிப்பாக சீரற்ற வெப்பநிலையில் ஒற்றைத் தலைவலி வந்துவிடும்.
உண்ணும் உணவில் உப்பு, காரம், புளிப்பு மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த நோயும் அண்டாது. ஆனால் காரம் மட்டுமே அதிகமாக தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக தலைவலி வந்து பாடாய்படுத்தும்.
மலச்சிக்கலால் அவதிபடுபவர்களுக்கு இரத்த ஓட்டம் சீரில்லாது இருப்பதால் இத்தகைய தலைவலிகள் வந்து சிரமத்திற்கு உள்ளாக்கும்.
ஒற்றைத்தலைவலிக்கான அறிகுறிகள் (Migraines symptoms)
கண்ணிற்கு முன்பாக பூச்சிகள் பறப்பது போல இருஇருக்கும்
முன்னுள்ள பொருட்கள் வட்ட வடிவில் தெரியாமல் போதல்
எதிரில் இருக்கும் உருவம் கறுப்பாக தெரிதல்
கை, கால்களில் ஒரு பக்கமாக துடித்தல்
தலைவலி வராமல் எப்படி தடுக்கலாம் ? (To prevent Migraines)
மனதை அமைதியாக வைத்துக்கொள்ள பழகி கொண்டாலே பாதி நோய்கள் நம்மை விட்டு அகன்றுவிடும். ஒற்றைத் தலைவலிக்கும் அப்படி தான்.- வயல்வெளி, பூங்கா, இயற்கை காட்சிகளை ரசித்தல் போன்ற செயல்களில் ஈடுபடல்
- குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபடல் என இயற்கையாக சில செயல்பாடுகளில் ஈடுபட்டால் தலைவலி குறையும்.
- முறையான உடற்பயிற்சி செய்தால் நிச்சயமாக தலைவலி பிரச்னை தீரும். ஏனென்றால் உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடலில் உள்ள சுரப்பிகளை இயல்பாக தூண்ட முடியும்.
- நல்ல காற்றோற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வது தலைவலி பிரச்சனையை போக்கும். புழுதி, தூசி, புழுக்கம் மிகுந்த இடங்களில் வாழ்பவர்களுக்கு தலைவலி பிரச்னைகள் அதிகம் ஏற்படும்.
- டீ, காபி, சிகரெட் உடனடி சுறுசுறுப்பு கிடைப்பது போல தோற்றத்தை ஏற்படுத்துபவை. ஆனால் அது நிரந்தரமல்ல. இதனால் கூட தலைவலி ஏற்படும்.
- உணவு முறையில் மாற்றம் செய்தல் நல்ல தீர்வு கொடுக்கும்.ஒரே மாதிரியான உணவினை உட்கொள்ளாமல் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சீராகும்.
ஒற்றை தலைவலிக்கு இயற்கை வைத்தியம்
சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்துவரலாம்.இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம்.
20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம்.