தினை அரிசியில் தோசை (Millet dosa)

தினை தானியத்தின் மீது தற்போது ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது ஆனால் அவற்றை எவ்வகையான  உணவுகள் செய்ய பயன்படுத்தலாம்,எப்படி சமைக்கலாம்  என்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றது.தினையில் தோசை (Millet dosa),பொங்கல்,தினை உப்புமா, தினை லட்டு, தினை புட்டு, தினை கஞ்சி , தினை முறுக்கு, தேனுடன் கலந்த தினை போன்றன செய்யலாம்.

தினையில் உடலுக்குத் தேவையான புரதச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. தினை பசியை தூண்டி விடுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளாக அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை முதலியன இருந்ததன.மலைப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேனும், தினை மாவுமே உணவாக இருந்தது.

ஒரு புதுச் சாப்பாட்டை கொடுக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனால் குழந்தைகள் விரும்பும் தோசை வடிவில் செய்து கொடுங்கள் எல்லோருமே விரும்பி உண்பார்கள்.

தினையில் தோசை (Millet dosa) செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தினை அரிசியின் சத்துக்களும் பயன்களும்

தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினந்தோறும் ஒரு வேலை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும்.

Millet dosa,annaimadi.com,millet recipe,dosa recipe,healthy dosa,indian recipe,easy dosa,thinai recipe,thinai thosai

இதயத்துக்கு பலம் சேர்க்கும் விற்றமின்  பி1  (Vitamin B1) தினையில் உள்ளது.

தினை அரிசியை உணவில் சேர்த்து கொள்வதால். இதய நோய் வராமல் தடுக்க முடியும். இதயத்தை பலப்படுத்தும். மறதி நோய் என்னும் அல்சைமர் நோய் தீவிரமாகாமல் இருக்கவும் இந்த  விற்றமின் பி1 உதவுகிறது.

இரும்புச்சத்து நிறைந்த தினை உடலில் இரும்புச்சத்து குறைபாடு ,உண்டாகாமல் தடுக்கிறது. மூளைக்கு தேவையான ஆக்ஸிஜன் தருவதற்கு இரும்புச்சத்து அவசியம் தேவை. 

உடலில் இரும்புச்சத்து போதுமானதாக இருந்தால், இவை உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை சீராக எடுத்து செல்ல உதவும்.

மூளையின் செயல்பாட்டுக்கு பற்றாக்குறையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதால், அறிவாற்றல் பெருகும். நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளை தடுக்கும்.

தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

Millet dosa,annaimadi.com,millet recipe,dosa recipe,healthy dosa,indian recipe,easy dosa,thinai recipe,thinai thosai

தினை நார்ச்சத்து அதிகம் கொண்டது என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு இது.பொதுவாக நீரிழிவு பாதிப்பு இருந்தால் அவர்கள் அரிசி உணவை தவிர்க்க வேண்டும். அல்லது அளவாக எடுத்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அவர்கள் தினை அரிசியை எடுத்து கொள்ளலாம்.

இது செரிமானத்துக்கு அதிக நேரம் எடுத்துகொள்ளும் என்பதால் அரிசி போன்று உடனடியாக செரித்து அதில் இருக்கும் குளுக்கோஸை ரத்தத்தில் கலப்பதில்லை.

நீரிழிவுநோய்க்கு  மட்டும் அல்ல இதய நோய், உடல் பருமன், மூட்டு வலி இருப்பவர்களும் தினை அரிசியை உணவாக எடுத்துகொள்ளலாம். உடல் சோர்வும் உண்டாகாது. உடல் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும்.

தினை அரிசியில் கல்சியம் சத்து அதிகமாகவே உண்டு என்பதால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமையடையும். பற்கள் உறுதியாகும்.

பெண்களுக்கு  மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் கல்சிய பற்றாக்குறைக்கு தினை அரிசியில் செய்த  உணவுகள் சரியான ஈடு தரும்.

Millet dosa,annaimadi.com,millet recipe,dosa recipe,healthy dosa,indian recipe,easy dosa,thinai recipe,thinai thosai

வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும்.

​தினை நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தக்கூடியது. நரம்புகளுக்கு வலு கொடுத்து முறுக்கேற்றும் குணம் கொண்டது.

இளவயது ஆண்களுக்கு அடிக்கடி தினை அரிசியில் செய்த  என்று விதவிதமாக செய்து கொடுப்பார்கள். இதனோடு தினையை இடித்து தேன் கலந்து களியாக்கி கொடுப்பார்கள். இது ஆண்மையை பெருக்கவும் உதவும்.

இப்போது அதிகமானோர்  சிறுதானியங்களின் முக்கியத்துவம் அறிந்து அவற்றைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து அரிசி,கோதுமை  சாப்பாட்டை உண்பதை விடுத்து, தினை அரிசியில் உணவு செய்து சாப்பிடலாம். நல்ல மாற்றீடாக இருப்பதோடு , வேறு விதமான சத்துக்களை பெறலாம்.ஆரோக்கியத்துக்கும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published.