தினை அரிசியைப் பயன்படுத்தும் முறை (How to use millet rice)

தினை (Millet rice) அதிக சத்து கொண்ட தானியங்களில் ஒன்று. தேனும், தினை மாவும் முருகனுக்கு பிடித்த உணவாக புராணங்களில் சொல்லப்படுகிறது.

நம் முன்னோர்களின் உணவுகளில் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, என்பவற்றுடன்  தினையும் (Millet rice)   முக்கியமாக பயன்படுத்தப்பட்டது. இதனால் அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது.

இன்று இவற்றின் உணவுப் பயன்பாடு குறைந்து கடைசியாக அரிசியையும் தவிடு நீக்கி, பாலீஷ் செய்து சாப்பிடும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனால் இன்று உடல் வலுவிழந்ததோடு நோயின் பாதிப்புக்கும் ஆளாகிறது.

இப்போது மீண்டும் தினை (Millet rice) உணவின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. தினையில் உடலுக்குத் தேவையான புரதசத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

தினை  (Millet rice) உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.பசியை தூண்டி விடுகிறது.அப்படிபட்ட தினை தானியத்தின் பல்வேறு பயன்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

சுவையான திணை அரிசி காய்கறி உப்புமா செய்வது எவ்வாறு....

தினை தானியத்தின்பயன்கள் (Millet rice) 

தினையை மாவாக நன்கு இடித்து, அந்த மாவில் பசும் நெய் கலந்து, களியாக கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலில் நரம்புகள் முறுக்கேறும். உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து மலட்டு தன்மை நீங்கும்.

நரம்பு தளர்ச்சி போன்ற குறைபாடுகள், ஆண்மை குறைபாடுகள் போன்றவை நீங்கும்.

புரதம் உடலின் தசைகளின் வலுவிற்கும், சருமத்தின் மென்மைக்கும் மிகவும் அவசியமாகும். தினை கொண்டு செய்யபபட்ட உணவு வகைகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும்.

தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமை தன்மையை காக்கும்.

Foxtail Millet Thinai Arisi Rice, Packaging Size: 5 Kg - 50 Kg, High in  Protein, Rs 74 /kg | ID: 21547406212

மன அழுத்தம் அதிகமான கோபம், கவலை போன்ற உணர்வுகள் நமது உடல் மற்றும் மனதில் சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சிறிது காலத்தில் இவை மன அழுத்தம் பிரச்சனையாக உருவாகிறது.

தினை தானியத்தில் மன அழுத்ததை குறைக்க கூடிய வேதி பொருட்கள் அதிகம் உள்ளன. எனவே தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்த பிரச்சனைக்கு சிறந்த ஒரு நிவாரணமாகும்.

ஞாபக மறதி அல்சைமர் நோய் என்பது தீவிரமான நோயாக உள்ளது. இந்நோய் வந்தவர்கள் பல சமயங்களில் தங்களையே மறந்து விடும் நிலைக்கு சென்றுவிடுவர்.

தினை (Millet rice) மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபகத்திறனை மேம்படுத்தும் சக்தியை அதிகம் கொண்டிருப்பதால், அதை சாப்பிட்டு வருபவர்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவதாக மேலைநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினையில் பூரி

தினை அரிசி (Millet rice) உணவுகள்

தினை (Millet rice) விற்றமின் சத்துக்கள் அதிகம் நிறைந்தது. நமது உடலுக்கு அனைத்து வகையான வைட்டமின் சத்துகள் தேவையென்றாலும், விற்றமின் பி 1 சத்து மிகவும் அவசியமான .

ஏனெனில் இந்த விற்றமின் பி 1 சத்து இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள், நரம்புகளின் சரியான செயல்பாட்டை உறுதி செய்கிறது.

இதயத் தசைகளையும் வலுப்படுத்தி இதயம் சம்பந்தமான எத்தகைய நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

உடலின் உஷ்ணம் தட்ப வெப்ப மாறுபாடுகளால் அதிகரிப்பதாலும்,நோய் தொற்றுகளாலும் ஜுரம் போன்ற நோய்கள் உடலை மிகவும் பலவீனப்படுத்தும் காலரா போன்ற நோய்களும் உண்டாகின்றன.

ஜுரம், காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினை கஞ்சி, களி போன்றவற்றை கொடுத்து வருவது சிறந்த உணவாக இருக்கும்.

எலும்புகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் நன்கு வலுவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

தினை கல்சியம் சத்துக்களை தன்னகத்தே அதிகம் கொண்ட ஒரு தானியமாகும்.

தினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர எலும்புகள் உறுதியாகும். அடிபட்டு எலும்பு உடைந்தவர்கள் தினை உணவுகளை சாப்பிட்டு வர உடைந்த எலும்புகள் விரைவில் சேரும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்து அதிகம் மிகுந்த அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு அவர்கள் எந்த வகையான உணவுகளை சாப்பிட்டாலும் அவர்களின் உடல், அவ்வுணவின் முழுமையான சக்தியை பெறாமல் இருக்கும். இவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும்.

தினையை (Millet rice) அடிக்கடி சாப்பிட்டு வர உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை சமநிலையில் பேணப்படும்.

தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகம் கூடாமல் தடுத்து, உடல் நலத்தை காக்கும்.

தினை அரிசியில்  பொங்கல்,உப்புமா ,லட்டு, தினையரிசிதோசை  செய்து  சாப்பிட வரலாம்.

Leave a Reply

Your email address will not be published.