நமது மனம் எங்கு உள்ளது? (Where is our mind?)

 நாம் எதை நினைக்கிறோமோ அங்கு நமது மனம் (Mind) செல்கிறது.அதற்கு தூரம் ஒரு தடை இல்லை.

மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல. அவனின் சூட்சுமசக்தி காந்தசக்தி போல அவனைச் சுற்றி பாதுகாத்து வருகிறது .

நாம் தீயவர்களை நினைக்கும் போது நமது சூட்சும சக்தி அவர்களுடன் இணைந்து நமது வலிமையைக் குறைக்கிறது. இறைவனை எண்ணும் போது சூட்சும சக்தி வலிமை பெற்று நம்மை காக்கிறது.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

 பௌதீக உடலும் சூட்சும உடலும்

ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு.மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள தொடர்பின் பாதிப்பே ஆகும்.சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் அதாவது பௌதீக உடலால் உணரப்படுகிறது.

உடலின் உறுப்புக்கள் அனைத்தும் மனதுடன் சேர்ந்து இயங்குவதே ஆரோக்கியம். மனது நோயுற்ற பின்னரே உடல் நோயுறுகிறது. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையலில் ருசியாக வெளிப்படுகிறது.கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெருகும்.நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

நமது மனம் எங்கு உள்ளது? ,Where is our mind?,ANNAIMADI.COM,NATURE,அன்னைமடி,

நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

நாம் விஞ்ஞான அறிவை மட்டும் பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.நமது வீட்டில் பஞ்சபூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

வலி என்பது உடலின் மொழி.அதை ஒரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பலம் பெறுகிறது.செயல் குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற தொடங்குகிறது.

மனது (Mind) மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க தொடங்குகிறது.

நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும். கர்ப்பிணி பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு நோயை தரும். நமது மனம் எங்கு உள்ளது? ,Where is our mind?,ANNAIMADI.COM,NATURE,அன்னைமடி,

இயற்கை

விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.அதனால் ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடக்கவும்.

நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

கடல்நீர் நம்முடைய தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய சக்திகள் நீங்கும்.

சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

 தூக்கம் என்பது,விழிப்புணர்வு அற்ற தியானம்.

தியானம் என்பது,விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்

சூட்சம விஞ்ஞானத்தை உணர்வோம்!

வாழ்வில் வளம் பெறுவோம்!

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தான் செல்லும் பாதைகளில் வெற்றியடைய நல்ல உடல், மன ஆரோக்கியம் அவசியமாகிறது. நம் உடல், மூச்சு, மனம் (Mind) இம்மூன்றின் சேர்க்கையே உயிர் வாழ்க்கையாகிறது. உடல், மூச்சு, மனம் ஆகிய மூன்றில் எது பாதித்தாலும் அது மற்றவற்றை பாதித்து விடுகிறது.

இம்மூன்றையும் சீர்படுத்த ஹடயோகம் உதவுகிறது. பழங்கால பயிற்சி முறையான ஹடயோகம் பாரத நாட்டு யோகிகளால் உபதேசிக்கப்பட்ட உடல், மூச்சு, மனம் மற்றும் ஆன்மா சம்பந்தமான ஓர் அற்புத விஞ்ஞானமாகும். ஹடயோகம்-ஆசனம், பிராணாயாமம், முத்திரை, பந்தம் ஷட்கர்மா, தியானம் என ஆறு முக்கிய அங்கங்களை கொண்டுள்ளது.

யோகத்தில் வரும் ஆசனங்கள். உடலை ஆரோக்கியமடையச் செய்யவும். பிராணாயாமம் மூச்சை ஒழுங்குபடுத்தி நீண்ட ஆயுளை அடையவும், முத்திரைகள் குறிப்பிட்ட நாடி, நரம்புகளில் பிராஹ சக்தியை (மின்காந்த சக்தியை) செலுத்தவும், வந்தங்கள் குறிப்பிட்ட நாடிகளில் பிராண சக்தியை நிலை நிறுத்தவும், ஷட்கர்மா உடலின் உள் உறுப்புகளை தூய்மைப்படுத்தவும், தியானம் மனதை தூய்மைப்படுத்தவும், தனது நிஜவடிவான இறை தன்மையை அறியவும் உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *