அதி அற்புத மருந்தாகும் புதினா (Mint)
புதினா (Mint) ஒரு அற்புத மூலிகையாகும்.ஏராளமான மருத்துவ நன்மைகள் இதில் உள்ளன. இதனை எப்படி பயன்படுத்தினாலும் இதன் மருத்துவ குணம் மாறுவதில்லை என்பது இதன் தனி சிறப்பு.
உணவே மருந்து,மருந்தே உணவு என்பதற்கு புதினா சிறந்த உதாரணம். நம் முன்னோர்கள் தங்களுக்கு வரும் நோய்களை, உணவில் மாற்றங்கள் செய்ததன் மூலம் போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்களின் உணவில் அடிக்கடி இடம்பெறும் ஒரு தாவரம் புதினா. அதோடு புதினா அபாரமான மணமும்,ருசியும் கொண்டது.
இதனாலேயே சட்னி,துவையல்,சாதம்,புலாவ்,தேநீர், போன்றவற்றில் மட்டுமல்லாது, குளிர் பானம் ஐஸ்கிரீம்,சொக்லேட் போன்றவற்றிலும் புதினா அதிகமாக பயன்படுத்தபடுகின்றது.
புதினா (Mint) நீர்ச்சத்து, புரதம் , இரும்பு , பொஸ்பரஸ் , கல்சியம் , நார்ச்சத்து, கொழுப்பு , விற்றமின் எ, தயமின் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
புதினாவின் அதி அற்புத மருத்துவ பலன்கள்( Medicinal benefits of Mint)
புதினாவை (Mint)உணவில் சேர்ப்பதால், எமது உடலில்
கொலஸ்டரோல் குறையும்.
நரம்பு மண்டலம் பலப்படும். பித்தம் கட்டுப்படும்.
வாயுத்தொல்லை அகலும்.
தேவையற்ற உடற்கொழுப்பைபு கரைந்து, உடல் எடையை சீராக்கும்.
கை கால் மூட்டுகளில் உள்ள வலியைக்குறைக்கும்.
கல்லீரல்,கணையத்துக்கு நல்லது. தோல் நோய்கள் நீங்கும். நோய் ஏதிர்ப்புசக்தியை கூட்டும்.
செரிமானக்கோளாறுகள் அகலும்.மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புழுக்களை அழிக்கும். பெருங்குடல் அழற்சி ஏற்படாது.
வறட்டு இருமல், ஆஸ்துமா கட்டுப்படும்.
இரும்புச்சத்து இருப்பதால் இரத்தசோகை நீங்கும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.
எந்தவித மாதவிடாய் குறைபாடுகளும் நீங்கும். மலட்டுத்தன்மை இல்லாமல் போகும்.
பற்கள் வெண்மையாக
புதினா (Mint) இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பொடியை தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிப்பு ஏற்படாது.
பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.
புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம்.
புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டு வீணாக எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் , நாளாந்த தேவைக்கு கைக்கெட்டிய தூரத்தில் புதினா கிடைக்கும்.
புதினா மூலிகை (Mint) அனைத்துக்கும் தீர்வு தரும் காயகற்பம். எனவே அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.
புதினாவில் வயல் புதினா, காரன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பேப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றன.
இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்றுநோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. மலிந்தவிலையில் நிறைவாய் கிடைக்கும் புதினாவில் உள்ள மருந்து வசக்தி அபாரமானது. பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம்.
அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச்சிக்கல், உப்புசம், வயிற்றிப் போக்கு உள்பட பல வயிற்றுப் கோளாறுகளை தீர்த்து விடுகிறது.
இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்கும்.
மேலும் காய்ச்சல், நீர்க்கடுப்பு, செரிமான பிரச்சனை போன்றவை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் இந்த பாதிப்புகள் நீங்கி விடும்.
3 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச்சாறு அளித்து வந்தால் வயிற்றிக் கோளாறுகள் குணமாகி குழந்தைகளுக்கு வீரிட்டு அழுவது நிற்கும்.
புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் ‘மென்தால்’ என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
மூட்டுவலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். நாளும் சிறிதளவு புதினாவை உணவில் பயன்படுத்தி உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவோம் நோயின்றி நலமுடன் வாழ்வோம்.
சுவையான ஆரோக்கியமான புதினா சட்னி செய்யும் முறை