பாதாம்,பிஸ்தாவை விட அதிக சத்துள்ள கச்சான் (More nutritious peanuts)
வேர்க்கடலை, நிலக்கடலை என்ற பெயர்களில் அழைக்கப்படும் கச்சான் இவை கொட்டை வகையைச் (Nuts) சேர்ந்தது. எத்தரப்பினரும் வாங்கும் நிலையில் உள்ளது என்பதும், அதில் அடங்கியிருக்கும் சத்துக்களுமே ஆகும். மாமிசம், முட்டை, காய்கறிகளை விட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.
இதனாலேயே சொக்லேட்ஸ்,செரியல்ஸ், ஐஸ்கிறீம், நட்ஸ் பார் போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுகிறது.
கச்சானில் லட்டு, கச்சான் தட்டு,பொரித்த கச்சான்,மற்றும் மிக்சர்களிலும் சேர்க்கப் படுகிறது.
நிலக்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கல்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், மாங்கனீஸ் ஆகியவை கச்சானில் (More nutritious peanuts) நிறைந்துள்ளன.
நாம் உண்ணும் உணவில் இருந்து கல்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் இது உதவுகிறது.
பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
கச்சான் அல்லது நிலக்கடலையை சாப்பிடுவதால் உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய கொழுப்பு உருவாவதைக் குறைத்து, நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் ரத்த அழுத்தம் சீராக இருப்பதோடு, சர்க்கரை வியாதியால் உண்டாகக் கூடிய சீரற்ற கொழுப்பு மற்றும் செரிமான மாற்றங்களை கட்டுக்குள் வைக்கின்றன.
வேர்க்கடலை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக உயர்த்தாமல் சீர் செய்கிறது. தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிட்டால் போதுமானது, சர்க்கரை நோய் வராமல் கட்டுப்பாட்டிற்குள் வைக்கலாம்.
அடிக்கடி நிலக்கடலை சாப்பிடுபவர்களுக்கு இதயநோய்கள் வருவது குறைகிறது.
பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். ஆனால், நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட சத்துக்கள் (More nutritious peanuts) உள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு. அதனால்தான் இது “ஏழைகளின் முந்திரி’ என்று அழைக்கப்படுகிறது.

இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும்.
வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் அருமருந்து.
நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து விடுபடவும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.
ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது. உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்!
மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கும் வேர்க்கடலை
அன்றாடம் நிலக்கடலை சாப்பிடுவதனால் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரிவிக்கின்றன.
நிலக்கடலை சக்தி வாய்ந்த ஒக்சினேற்ற கொண்ட ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட ரேஸ்வெராட்ரோலின்
முக்கியமான உணவு ஆதாரமாக இருக்கின்றது.