முருங்கை இலை டீ (Moringa tea)

சர்க்கரை நோயா? தினமும் முருங்கை இலை  டீ (Moringa tea) பயன்படுத்தி பாருங்கள்!

இது உடலுக்குள் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்து சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளில் இருந்து முருங்கை முற்றிலும் உங்களைக்  காப்பாற்றும். ஆரம்ப காலத்திலேயே சர்க்கரை நோய் வராமல் உங்களை காப்பாற்றும்.

முருங்கையினுடைய இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு நம்முடைய உடலில் காயங்களை ஆற்றுவதற்கான தன்மைகள் அதிகமாக  உள்ளது. இது காயங்களில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.

முருங்கை இலை டீ குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்

தினமும் ஒரு கப் முருங்கை இலை டீ (Moringa tea) குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும்.
முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன.
இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்புசத்து நிறைந்திருக்கிறது. அது போல் கல்சியம், பொட்டாசியம், விற்றமின், பி6, சி மற்றும் மெக்னீசியம், பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது.
முருங்கை கீரையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மைகொண்டவை.
மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினைகளுக்கு முருங்கை இலை டீ (Moringa tea) நன்மை பயக்கும்.
அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும். முருங்கை இலை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு இருக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
இந்த டீயை பருகுவதன் மூலம் வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது முருங்கை இலை டீ (Moringa tea) பருகலாம்.

குறிப்பாக முருங்கை இலைகளில் க்ளோரோஜெனிக் ஆசிட்டின் எனும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

முருங்கை டீ செய்முறை (Preparation of Moringa tea)

நிழலிலே முருங்கை இலையை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டினால் நல்ல பச்சை நிறத்தில் டீ கிடைக்கும். உங்களுக்குக் கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கை இலையின் நன்மைகள்(Moringa tea)

முருங்கைக்கீரை உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதால் இதய நோய்களின் ஆபத்தைக் குறைத்து இதய நோயாளிகளுக்கும் உதவுகிறது. மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது.

அதிலும் குறிப்பாக ஊளைச்சதையாலும் தொங்குகின்ற தொப்பையாலும் தொடைப்பகுதியில் இருக்கும் செல்லுலாய்டு கொழுப்புத் திசுக்களையும் குறைக்க உதவுகிறது.

முருங்கை இலையில் இருக்கும் அதிக அளவிலான சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உடலில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜன் அழுத்தத்தை எதிர்த்து போராடி உங்கள் சருமம் மற்றும் கூந்தலின் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் நச்சுக்களை தடுத்து சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *