முல்தானி மெட்டியுடனான அழகுக்குறிப்புகள் (Cosmetics with Multani Metti)

வீட்டிலேயே முல்தானி மெட்டியை (Multani Metti) கொண்டு சில அழகு குறிப்புக்களை செய்து கொள்ள முடியும். இதனால்  முகம் பொலிவு பெறுவதுடன் புத்துணர்ச்சியான சருமமும் கிடைக்க உதவியாக இருக்கும்.

முல்தானி மெட்டிமுகத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை உறிஞ்சி விடும். இது மட்டுமல்லாமல் சருமத்தில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இதனால், சருமம் ஆரோக்கியமானதாக இருக்கும்.

மேலும் முல்தானி மெட்டியுடன் சில இயற்கைபொருட்களை சேர்த்து பயன்படுத்தினால், மேலும் அதிகமான தெளிவான, பளபளப்பான முக அழகை பெறமுடியும்.

முல்தானி மெட்டியுடன் விற்றமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொண்ட எலுமிச்சைசாறு சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் மிருதுவான சருமம் கிடைக்கும். சருமஎரிச்சலும் குறையும்.

முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் (Multani Metti & rose water)   Multani Metti with carrot,முல்தானி மெட்டியுடனான அழகுக்குறிப்புகள் ,Cosmetics with Multani Metti,அன்னைமடி,முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் ,Multani Metti & rose water,முல்தானி மெட்டியுடன் தேன் ,Multani Metti & Honey,முல்தானி மெட்டி, பாதாம்,பால்,Multani Metti,milk & Almond,முல்தானி மெட்டியும் புதினாவும்,Multani Metti with mint.beauty tips with multani metti,natural beauty tips,annaiamdi.com

ரோஸ் வாட்டர்  உடன் முல்தானி மெட்டி (Multani Metti) பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். 

அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

முல்தானி மெட்டியுடன் தேன் (Multani Metti & Honey)

3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் தக்காளி ஜூஸ், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.  இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை(Face pack) போட்டால், முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்கும்.

முல்தானி மெட்டி, பாதாம்,பால்(Multani Metti,milk & Almond)

Multani Metti with carrot,முல்தானி மெட்டியுடனான அழகுக்குறிப்புகள் ,Cosmetics with Multani Metti,அன்னைமடி,முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் ,Multani Metti & rose water,முல்தானி மெட்டியுடன் தேன் ,Multani Metti & Honey,முல்தானி மெட்டி, பாதாம்,பால்,Multani Metti,milk & Almond,முல்தானி மெட்டியும் புதினாவும்,Multani Metti with mint.beauty tips with multani metti,natural beauty tips,annaiamdi.com

 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி (Multani Metti)பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின், நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

முல்தானி மெட்டியுடன் தக்காளி (Multani Metti with tomato)

2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி(Multani Metti), 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். 

அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

முல்தானி மெட்டியும் புதினாவும்(Multani Metti with mint)

 ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் புதினா (Mint)பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி இந்த ஃபேஸ் பேக்கை(Face pack) போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமையைப் போக்கலாம்.

முல்தானி மெட்டியும்  சந்தனமும்(Multani Metti & sandalwood)

Multani Metti with carrot,முல்தானி மெட்டியுடனான அழகுக்குறிப்புகள் ,Cosmetics with Multani Metti,அன்னைமடி,முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் ,Multani Metti & rose water,முல்தானி மெட்டியுடன் தேன் ,Multani Metti & Honey,முல்தானி மெட்டி, பாதாம்,பால்,Multani Metti,milk & Almond,முல்தானி மெட்டியும் புதினாவும்,Multani Metti with mint.beauty tips with multani metti,natural beauty tips,annaiamdi.com

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டிபொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 

இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, முகம் பளிச்சென்று வெள்ளையாக காணப்படும்.

முல்தானி மெட்டி மற்றும் பப்பாளி

1 டேபிள் முல்தானி மெட்டி(Multani Metti) பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளிபழ கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அதனை முகத்தில்  தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், சருமத்தின் கருமை குறையும்.

முல்தானி மெட்டி மற்றும் முட்டை வெள்ளைக்கரு

ஒரு பௌலில் 1/4 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை போட்டு வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம்.

முல்தானி மெட்டி மற்றும் கரட் (Multani Metti with carrot)

ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் கரட் கூழ் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு ஊற வைக்க வேண்டும்.

குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது பின்பற்றினால் தான், நல்ல பலனைப் பெற முடியும்.

முல்தானி மெட்டி மற்றும் இளநீர் (Multani Metti with coconut water)

ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் இளநீர் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு (Multani Metti with lime juice)

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *